ஆங்கிலத்திலேயே மிக அதிக எழுத்துகளைக் கொண்ட வார்த்தை என்ன தெரியுமா? Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis. மணல் புழுதி மற்றும் சாம்பல் கலந்த காற்றைச் சுவாசிப்பதனால் ஏற்படும் நுரையீரல் வியாதிக்கு இந்தப் பெயரைச் சூட்டியிருக்கிறார்கள். 45 எழுத்துகள் கொண்ட இந்த வார்த்தை 1935ஆம் ஆண்டு எவெரெட் எம் ஸ்மித்(Everett M. Smith) என்பவரால் உருவாக்கப்பட்டது. “National Puzzlers’ League” என்ற வார்த்தை விளையாட்டு அமைப்பின் தலைவராக இருந்த ஸ்மித், 1935ஆம் ஆண்டு நடந்த அந்த அமைப்பின் ஆண்டுவிழாவில் பேசும்போது இந்த வார்த்தையை முதன்முதலாக அறிமுகப்படுத்தினார்.
ஆங்கிலத்தில் 45 எழுத்துகளைக் கொண்டிருக்கும் மற்றொரு வார்த்தை, இவ்வார்த்தையின் பன்மை வடிவமான “Pneumonoultramicroscopicsilicovolcanoconioses” மட்டுமே. அதுசரி, இந்த வார்த்தையை எப்படி உச்சரிப்பது என்கிறீர்களா?இதோ இந்த லிங்க்கில் இருக்கும் ஆடியோவைக் கேட்கவும்.
No comments:
Post a Comment