மற்ற பூக்களெல்லாம் அதிகாலையில் பூக்க, இந்த மல்லிகை மட்டும் இரவில் பூத்து மக்களிடையே ஸ்பெஷல் இடத்தைப் பெற்றுள்ளதன் மாயமென்ன? மற்ற செடிகளைப் போல், மல்லிகைச்செடியும் பூக்களைப் பூக்க வைக்கும் florigen என்ற ஹார்மோனை சூரிய ஒளியின் உதவியால் இலைகளில் உருவாக்குகின்றன. இலைகளிலிருந்து இந்த ஹார்மோன், மொட்டுகளை நோக்கி நகரும் “Nastic Movement”, பகலின் வெளிச்சம் குறைந்து இரவு துவங்கும் நேரத்தில் தூண்டப்படுகிறது. இதுவே, மல்லிகைப் பூக்கள் இரவில் மலர்வதன் ரகசியம்..
மல்லிகைச்செடிகளின் மகரந்தச் சேர்க்கைக்கு பெரிதும் உதவுவது அந்து(தி?)ப்பூச்சிகள்/விட்டில்பூச்சிகள். இரவு நேரத்தில், இந்தப்பூச்சிகளைக் கவர்ந்திழுக்கவே, மல்லிகைகள் வெள்ளை நிறமும் கொள்ளை மணமும் கொண்டிருக்கின்றன.
ஹவாய், இந்தோனேஷியா, பாகிஸ்தான் மற்றும் பிலிபைன்ஸ் ஆகிய நாடுகளின் தேசிய மலர் மல்லிகை.
No comments:
Post a Comment