தேவையானவை
முருங்கைக்காய் - 4
சாம்பார் பொடி - ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு - ஒரு ஸ்பூன்
வெந்தயம் - ஒரு ஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு ஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு ஸ்பூன்
புளிக்கரைசல் - ஒரு கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு வெந்தயம் கறிவேப்பிலை மஞ்சள்தூள் சாம்பார் பொடியைப்போட்டு வதக்கவும். இதில் முருங்கைக்காயைப்போட்டு புளிக்கரைசல் விட்டு கொதிக்கவிடவும். முருங்கைக்காய் வெந்ததும் உப்பு சேர்த்து நன்றாகக் கொதித்ததும் பெருங்காயத்தூள் சேர்க்கவும். மேலாக மூன்று டீ ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு இறக்கவும்.
தேவையானவை
பூசணிக்காய் - அரைகிலோ
தயிர் - ஒரு கப்
மிளகு - ஒரு டீ ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு டீ ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
தேங்காய் துருவல் - ஒரு கப்
முருங்கைக்காய் - 4
சாம்பார் பொடி - ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு - ஒரு ஸ்பூன்
வெந்தயம் - ஒரு ஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு ஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு ஸ்பூன்
புளிக்கரைசல் - ஒரு கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு வெந்தயம் கறிவேப்பிலை மஞ்சள்தூள் சாம்பார் பொடியைப்போட்டு வதக்கவும். இதில் முருங்கைக்காயைப்போட்டு புளிக்கரைசல் விட்டு கொதிக்கவிடவும். முருங்கைக்காய் வெந்ததும் உப்பு சேர்த்து நன்றாகக் கொதித்ததும் பெருங்காயத்தூள் சேர்க்கவும். மேலாக மூன்று டீ ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு இறக்கவும்.
******************************************************************************
மீல் மேக்கர் கத்தரிக்காய் குழம்பு
தேவையான பொருட்கள்
மீல் மேக்கர் - 20
கத்தரிக்காய் - 3
சிறிய வெங்காயம் - 20
தக்காளி - 1
தேங்காய் தூருவியது - ஒரு கப்
மாங்காய் - 1
மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
பூண்டு மற்றும் புளி - சிறிதளவு
மல்லி இலை, கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம்,
சீரகம், கருவேப்பிலை, நல்லெண்ணெய் தேவையான அளவு
உப்பு மற்றும் மஞ்சள் சிறிதளவு
செய்முறை
மீல் மேக்கரை சுடுநீரில் ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். கத்தரிக்காய், மாங்காய், வெங்காயம், தக்காளி இவற்றை நறுக்கிக்கொள்ளவும். புளியை ஊறவைக்கவும். சிறிது வெங்காயம், தக்காளி, மிளகாய், தேங்காய் ஆகியவற்றை தனியே மிக்சியில் அரைத்துக்கொள்ளவும். மீதி தேங்காயை சிறிது சீரகம் சேர்த்து அரைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். மஞ்சள்தூள் சேர்க்கவும். பின்னர் கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும். புளி கரைத்து ஊற்றவும். இதனுடன் மிளகாய்தூள், உப்பு, அரைத்த தக்காளி விழுது ஆகியவற்றை சேர்க்கவும். சிறிது நீர் சேர்த்து மீல் மேக்கரை போடவும் அவை வெந்ததும் அரைத்த தேங்காயை சேர்க்கவும். நன்கு கொதித்ததும் மல்லி இலை போட்டு இறக்கவும்.
**************************************************************************
பூசணிக்காய் - மிளகு மோர்க்குழம்பு
தேவையானவை
பூசணிக்காய் - அரைகிலோ
தயிர் - ஒரு கப்
மிளகு - ஒரு டீ ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு டீ ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
தேங்காய் துருவல் - ஒரு கப்
எண்ணெய் - 4 டீ ஸ்பூன்
கடுகு - கால் டீ ஸ்பூன்
வெந்தயம் - கால் டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
பூசணிக்காயை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, தேங்காயை லேசாக வறுத்து மிக்சியில் அரைக்கவும். பூசணித்துண்டுகளில் உப்பு சேர்த்து வேக விடவும். தயிரை நன்றாக கடைந்து அரைத்த தேங்காய் விழுது, பூசணித்துண்டுகளைச் சேர்த்து லேசாகக் கொதிக்கவிடவும். எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்துக்கொட்டி இறக்கி கறிவேப்பிலை சேர்க்கவும்.
இந்தக் குழம்பிற்கு உருளைக்கிழங்கு பொரியல் நல்ல காம்பினேஷன்.
No comments:
Post a Comment