Wednesday, January 2, 2019

விடுகதை வினா விடைகள் - 2



1) ஒரு குகை, 32 வீரர்கள் , ஒரு நாகம் அந்த குகை எது?
1) குளம்2) கிணறு3) வாய்4) மாதுளம்பழம்
2) விரல் இல்லாமலே ஒரு கை அது என்ன?
1) மனித கை2) உலக்கை3) விலங்குகளின் கை4) வானம்
3) நான்கு கால்கள் உள்ளவன், இரண்டு கைகள் உள்ளவன், உட்கார்ந்து கொண்டிருப்பான், உட்கார இடம் கொடுப்பான் அவன் யார்?
1) நாற்காலி2) வாங்கில்3) மேசை4) வீடு
4) மரத்தின் மேலே தொங்குது மலைப் பாம்பல்ல. அது என்ன?
1) காய்2) பூ3) இலை4) விழுது
5) முத்தான முத்துகள் முற்றத்திலே காயுது, படி போட்டு அளக்கத்தான் ஆளில்லை அது என்ன?
1) நிலா2) நட்சத்திரங்கள்3) வானம்4) முகில்
6) அரசன் ஆளாத கோட்டைக்கு பகல் காவல்காரன் ஒருவன், இரவுக் காவல்காரன் ஒருவன் அவர்கள் யார்?
1) பூமி, சந்திரன்2) சூரியன், புதன்3) சூரியன், சந்திரன்4) பூமி, சூரியன்
7) பேச்சுக் கேட்குது பேசுபவர் தெரியவில்லை. அது என்ன?
1) கணினி2) வானொலிப் பெட்டி3) தொலைக்காட்சி4) தொலைநகல்
8) நான் பார்த்தால் அவன் பார்ப்பான், நான் சிரித்தால் அவன் சிரிப்பான் அவன் யார்?
1) வானம்2) நிழல்3) கோமாளி4) முகம் பார்க்கும் கண்ணாடி
9) கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான்?
1) வெங்காயம்2) மிளகாய்3) மாம்பழம்4) வாழை
10) தனித்து உண்ணமுடியாது என்றாலும் இது சேர்த்தால்தான் உணவுக்கு சுவை. அது என்ன?
1) கறி2) சோறு3) உப்பு4) சீனி

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !