Wednesday, January 2, 2019

விடுகதை வினா விடைகள் - 3

விடுகதை வினா விடைகள்

1) கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?
1) வெங்காயம்2) தோடம்பழம்3) கரும்பு4) தேசிக்காய்
2) உயரத்தில் இருப்பிடம்.தாகம் தீர்ப்பதில் தனியிடம் அது என்ன?
1) நீர்2) இளநீர்3) கடல்4) மாம்பழம்
3) வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ அது என்ன?
1) ரோஜாபூ2) மல்லிகைப்பூ3) பூ4) சிரிப்பு
4) எட்டுக்கால் ஊன்றி இருகால் படமெடுக்க வட்டக் குடைபிடித்து வாறாராம் வன்னியப்பு அது என்ன?
1) மீன்2) சிலந்தி3) நண்டு4) வாத்து
5) ஏரியில் இல்லாத நீர்,தாகத்திற்கு உதவாத நீர், தண்ணீர் அல்ல அது என்ன?
1) கண்ணீர்2) அருவி3) ஆறு4) கிணறு
6) கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள் அவள் யார்?
1) நெருப்பு2) விளக்கு3) மெழுகுதிரி4) அனல்
7) ஓர் அரண்மனையில் முப்பத்திரெண்டு காவலர்கள் அது என்ன?
1) பற்கள்2) பூக்கொத்து3) மாதுளம்பழம்4) மாம்பழம்
8) வெள்ளி ஓடையில கருப்பு மீனு துள்ளி விளையாடுது?
1) மான்2) முட்டை3) மீன்4) கண்
9) மருத்துவர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு அவர் யார்?
1) இலையான்2) நுளம்பு3) மான்4) சிங்கம்
10) ஊரெல்லாம் சுத்துவான், ஆனால் வீட்டிற்குள் வரமாட்டான் அவன் யார்?
1) நாய்2) செருப்பு3) பூனை4) அட்டை

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !