ஓர்
அற்புதமான சிற்பி, ஒருநாள் தெருவில் போய் கொண்டிருந்தவர் ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார். ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி, அதன் பின் அந்தக் கடைக்காரரிடம், 'ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா?' என்று கேட்டார். 'தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள். இது இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க் கிடக்கிறது. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்! என்றார் கடைக்காரர். பாறாங்கல்லை உருட்டிச் சென்ற அந்த சிற்பி, அதை நுட்பமாகச் செதுக்கி அற்புதமான கடவுள் சிலை ஒன்றை உருவாக்கினார். அந்தச் சிலை கடைத்தெருவில் விலைக்கு வந்தது. போட்டி போட்டுக் கொண்டு மக்கள் அதை விலைக்குக் கேட்டார். அப்படிக் கேட்டவர்களுள் கல்லைக் கொடுத்த கடைக்காரரும் ஒருவர். முடிவில் அந்தக் கடைக்காரரே அதிக விலை கொடுத்து அந்தச் சிலையைப் பெற்றுக் கொண்டார். அந்த சிற்பியை மறந்துவிட்ட அந்தக் கடைக்காரர், 'இந்த அற்புதமான சிலைக்குரிய கல்லை எந்த மலையிலிருந்து எடுத்து வந்தீர்கள்?'… என்று கேட்டார். அதற்கு சிற்பி, 'வேறு எங்கிருந்தும் இல்லை. தங்கள் கடை வாசலில் தான் இதைக் கண்டெடுத்தேன். என்னை நினைவில்லையா தங்களுக்கு? ஆறு மாதங்களுக்கு முன் இடையூறாய்க் கிடக்கிறது என்று சொல்லி என்னிடம் நீங்கள் கொடுத்த கல் தான் இது என்றார். கடைக்காரர் வியந்தார். ஆம். தங்கள் பார்வையில் இது தடைக் கல்லாய்த் தெரிந்தது. என் பார்வையில் கடவுளை பொதிந்து வைத்திருக்கும் சிற்பக் கல்லாய்த் தெரிந்தது. வேண்டாத பகுதியையெல்லாம் செதுக்கி எடுத்தேன். உள்ளே இருந்த கடவுளின் உருவம் வெளிப்பட்டது!' என்றார். தேவையற்ற வார்த்தைகளை வாழ்வில் நீக்கினால் நாமும் விலைமதிப்பற்ற மனிதனாய், ஒவொருவரும் நம்மை போற்றும் வகையில் வாழ்ந்து காண்பிக்கலாம்.
Pages
click here
Subscribe to:
Post Comments (Atom)
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே
Popular Posts
-
ஓர் ஊரில் , வணிகன் ஒருவன் இருந்தான் . பணக்காரனான அவன் சரியான கஞ்சன் . எனவே , முட்டாளான ஒருவனை வேலைக்காரனாக வைத்திருந்தான் ...
-
சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன . ஒரு நாள் சிஙகம் பசுவைக் கொன்றது . கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்...
-
1. மண்ணுக்குள்ளே கிடப்பான் மங்களகரமானவன் அவன் யார் ? 2. கொம்பு நிறைய கம்பு அது என்ன ? 3. ஆடும் வரை ஆட்டம் , ஆடிய பின் ...
-
பசி தாங்க முடியாத எலிகள் இரண்டு தாங்கள் ஒளிந்திருந்த வீட்டின் சமயல் அறைக்குள் புகுந்தன . அங்கே ஒரு பெரிய பானை நிறைய பால்...
-
செ வலைக்கோழி பத்து முட்டைகளை இட்டது . அந்தப் பத்து முட்டைகளையும் இருபத்தியொரு நாள்கள் அடைகாத்தது . இருபத்தியோராம் நாள் முட்டைகள...
-
ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார் . தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இர...
-
ஒரு நாள் சிறுத்தை பசியுடன் உணவைத் தேடியது . அப்போது ஒரு கறுப்பு மானையும் புள்ளி மானையும் கண்டது . அவை இரண்டும் மலைய...
-
கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது . ஒரு ஒடுக்கமா...
-
1. பழமொழி/Pazhamozhi உப்பிட்டவரை உள்ளளவும் நினை. பொருள்/Tamil Meaning உனக்கு உதவி செய்தவரை என்றும் மறவாதே. Transliteration ...
அரட்டை ----->>>>
Featured Post
ரமணிசந்திரன்
ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு அமுதம்விளையும் பேசும் பொற்சித்திரமே அன்பு மனம் மா...
About Blog
உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !
No comments:
Post a Comment