Monday, January 28, 2019

தவறு சிறுசா இருக்க திருந்திக்கோ | தமிழ் அறிவு கதைகள்


மணி ஒரு சோம்பேறி பையன், அவனை திருத்த நினைச்ச அவனோட அப்பா, அந்த ஊர்ல இருந்த ஒரு முனிவர் ஒருவர் கிட்ட சொன்னார். ” இவன் ரொம்ப சோம்பேரியா இருக்கான். என்ன சொன்னாலும் சில பழக்க வழக்கங்களை மாத்தவே மாட்டேங்கிறான். நீங்க தான் அவன திருத்தனும்னு சொன்னார். முனிவர் ஒரு நாள் அவனை ஒரு காட்டுக்கு அழைத்து போனார். அங்க இருந்த ஒரு சிறிய செடிய பிடுங்க சொன்னார். உடனே ரொம்ப சுலபமா பிடிங்கி விட்டான். அப்புறம் கொஞ்சம் பெரிய செடிய பிடுங்க சொன்னார். கொஞ்ச முயற்சி பண்ணி பிடுங்கினான். இன்னும் கொஞ்சம் பெரிய புதர் மாதிரி இருந்ததை பிடுங்க சொன்னார் ரொம்ப கஷ்டப்பட்டு பிடுங்கினான். அதுக்குள்ள அவன் ரொம்ப களைத்து போனான் . அப்புறம் ஒரு பெரிய மரத்தை காட்டி, அதை பிடுங்க சொன்னார். ஆனா அவனால முடியலை. என்னால முடியாது அப்படீன்னு சொல்லிட்டான். தாத்தா சொன்னார், ” இது பாரு, இப்படித்தான் நீ சின்ன பையனா இருக்கப்பவே உன்கிட்ட இருக்குற சோம்பலையும், சில கெட்ட பழக்க வழக்கங்களையும் மாத்திக்கனும். அது சுலபமா போய்டும் பெரியவனான்னா அது கிட்ட இருந்து விலகறது ரொம்ப கஷ்டம். விலகவும் முடியாது. உங்க அப்பா சொல்ற மாதிரி கேட்டு நடந்தேன்னா, நீ நல்லா இருப்பேனு சொன்னார். பையனும் அவங்க அப்பா சொன்ன மாதிரி நல்லபடியா நடந்து வாழ்கையில பெரிய ஆளா ஆயிட்டான்.



No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !