*******************************************************************************
இறால் வறுவல்இறால் அரை கிலோ
மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
மல்லி தூள் அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
எண்ணெய் மற்றும் உப்பு தேவையான அளவு
தேங்காய் தேவையான அளவு
பட்டை = 2
கிராம்பு = 3
செய்முறை
முதலில் இறாலை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். தேங்காயை அரைத்து வைத்துக்கொள்ளவும். பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். பின்பு மஞ்சள்தூள் மிளகாய் தூள் மல்லி தூளை போட்டு வதக்கியவுடன் இறாலை போட்டு வதக்கவும், பின்பு அரைத்து வைத்துள்ள தேங்காயை அதில் ஊற்றவும். தண்ணீர் சுண்டும் வரை வேகவைக்கவும்.
இறால் வருவல் ரெடி.
****************************************************************************
இறால் பகோடா
சுத்தம் செய்த இறால் மீனை சிறு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம், பச்சைமிளகாய் பொடியாக நறுக்கவும். இறால் துண்டு வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, உப்பு, சோம்புத்தூள்
எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும். கலந்தவுடன் கடலைமாவு, அரிசிமாவு, பாசிப்பருப்பு மாவு, சூடாக்கப்பட்ட எண்ணெய் சேர்த்து, தண்ணீர் சேர்த்து உதிர்ந்துவிடும் பக்குவத்தில் பிசையவும். வாணலியில் எண்ணெய்விட்டு மிதமாக காயவைத்து பக்கோடா கலவையை போடும்போது உதிர்த்து போடவும். புரட்டி போட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுத்துப்பரிமாறவும்.
*****************************************************************************
3. இறால் குழம்பு – Prawn Curry
தேவையான பொருட்கள்
இறால் -200 கிராம்
பெரிய வெங்காயம் -1
தக்காளி -1
பச்சை மிளகாய் -2
இஞ்சி ,பூண்டு விழுது -1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் -சிறிதளவு
மிளகாய் தூள் -2 டேபிள்ஸ்பூன் (தேவையான அளவு)
மல்லித் தூள் -2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி தழை -சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
புளி - ஒரு எலுமிச்சை பழம் அளவு
கடுகு - சிறிதளவு
உளுத்தம் பருப்பு - 1/2 டேபிள்ஸ்பூன்
கருவேப்பிலை - தேவையான அளவு
புளியை நன்கு தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து வைத்துக்கொள்ளவும்.
வெங்காயம் ,பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை, உளுத்தம் பருப்பு சேர்க்கவும். கடுகு வெடித்த பிறகு அதில் வெங்காயம் , பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை போட்டு வதக்கிக் கொள்ளவும். வதக்கிய பின்பு அதில் இஞ்சி ,பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லி தூள் போட்டு வதக்கவும்
வதக்கிய பின்பு அதில் இறாலை போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றவும். பின்னர் புளி கரைசலையும் சேர்த்து நன்கு கலக்கி விட்டு கடாயை தட்டு போட்டு மூடி பின்பு அடுப்பை மிதமான சூட்டில்
( Sim ) வைத்து குழம்பில் எண்ணெய் திரிந்து வரும் வரை வேக வைத்து இறக்கவும். சுவையான இறால் குழம்பு ரெடி.
************************************************************

No comments:
Post a Comment