இன்று எலக்ட்ரானிக்ஸ் துறையில் பெரிய(!!!!) ஆளாக இருக்கும் சேம்சங் கம்பெனி 1938ஆம் ஆண்டு ”Samsung Sanghoe” என்ற பெயரில் ஒரு மளிகைக்கடையாக துவங்கப்பட்டது. மளிகை மட்டுமல்ல, சொந்தமாக நூடுல்ஸ் கூட தயாரித்தார்களாம். 1960ஆம் ஆண்டில் தான் எலக்ட்ரானிக்ஸ் துறையில் சேம்சங் இறங்கியது. Samsung Sanghoe என்ற கொரியன் வார்த்தைக்கு Three Stars என்று அர்த்தம்.
இன்றும் கொரியாவில் சேம்சங், எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பது மட்டுமல்லாமல் கப்பல் கட்டும் தொழிலிலும், விமானங்களுக்கான உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிலிலும் ஈடுபட்டிருக்கிறது. அவ்வளவு ஏன், தீம்பார்க், சொகுசு ஹோட்டல்களைக் கூட நடத்துகிறது.
No comments:
Post a Comment