Tuesday, January 1, 2019

மிளகுக்குழம்பு

மிளகுக்குழம்பு

செட்டிநாட்டுக் குழம்பு வகைகளில் ஒன்றான மிளகுக்குழம்பு சூடான சாதத்துடன் பரிமாற ஏற்றது. மிளகாய்த்தூள் சேர்த்து குழம்பு வைப்பதற்குப் பதிலாக காரத்திற்கு மிளகு சேர்த்து குழம்பு தயாரித்தால் அல்சர் பிரச்சினை ஏற்படாது. 

தேவையான பொருட்கள்
புளி சிறு உருண்டை,

 தேங்காய்ப்பூ 2டேபிள் ஸ்பூன், 
மிளகு 1/4 டீஸ்பூன், 
சீரகம் 1/4 டீஸ்பூன், 
பூண்டு 4 பல், 
சின்னவெங்காயம் 4, 
மிளகாய்த்தூள் 1/2 டீஸ்பூன், 
மல்லித்தூள் 2 டீஸ்பூன், 
மஞ்சள்தூள் 1 சிட்டிகை,
 உப்பு தேவையான அளவு,
நல்லெண்ணெய் 3 டேபிள்ஸ்பூன், 
கடுகு மற்றும் பெருங்காயம் தாளிக்க தேவையான அளவு.

செய்முறை
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மிளகு சீரகத்தை போட்டு பொரிந்ததும் சின்ன வெங்காயம், பூண்டு, தேங்காய்த்துருவல் சேர்த்து நன்றாக வாசனை வரும்வரை வதக்கிக்கொள்ளவும். ஆற வைத்து மிக்சியில் நைசாக அரைத்துக்கொள்ளவும். புளியை நன்கு கரைத்து அத்துடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து குழம்பு கூட்டிக்கொள்ளவும். இத்துடன் அரைத்த மிளகு விழுதை சேர்த்து கரைத்துக்கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து, கூட்டி வைத்திருக்கும் குழம்பை ஊற்றி கொதிக்கவிடவும். அடுப்பை சிறு தீயில் வைத்து எண்ணெய் மிதந்து வருமாறு கொதிக்க வைத்து இறக்கி வைக்கவும். இப்போது மணமணக்கும் மிளகுக்குழம்பு ரெடி.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !