Monday, January 21, 2019

பேர் சொல்லும் (கிளிப்)பிள்ளை

கிளிகள் தங்கள் பிள்ளைகளை பெயரிட்டு அழைக்கின்றன. அதுமட்டுமல்ல, வயதில் சிறிய கிளிகள் நம்மைப்போலவே , தங்களின் பெயரை அவற்றுக்குப் பிடித்த மாதிரி மாற்றியும் வைத்துக்கொள்கின்றன. வெனிசுலாவில் சமீபத்தில் நடந்த ஆராய்ச்சி ஒன்றில் 17 கிளிக்கூடுகளில் சிறு மைக்குகளை வைத்து ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்தனர். இதில் 9 கூடுகளில் இருந்த முட்டைகள் வெவ்வேறு கூடுகளில் மாற்றி வைக்கப்பட்டன. கிளிகளின் பெயர்கள் அவற்றின் பெற்றோர்,மூதாதையரைச் சார்ந்துள்ளதா அல்லது வளர்ப்பைச் சார்ந்துள்ளதா என்று கண்டறியவே இப்படி முட்டைகள் மாற்றி வைக்கப்பட்டன. முடிவில் வளர்ப்பைச் சார்ந்தே பெயர்கள் வைக்கப்படுகின்றன என்பதைக் கண்டறிந்தனர் ஆராய்ச்சியாளர்கள்.
greenparrot
கூட்டமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பயணம் செய்யும்போது வயதில் சிறிய கிளிகள் தொலைந்துவிடாமல் இருக்கவும், தொலைந்தால் கண்டறியவும், சரியான வேளைக்கு உணவு கொடுக்கவும்இந்தப்பெயர்கள் பெரிய கிளிகளுக்கு உதவுகின்றன. அதென்ன ”சரியான நேரத்திற்கு உணவு கொடுக்க” என்று யோசிக்கின்றீர்களா? மற்ற விலங்குகள்/பறவைகளுடன் ஒப்பிடும்போது கிளிகளே மனிதர்கள் மாதிரி தங்கள் பிள்ளைகளை அதிக நாட்கள் தங்களுடன் சேர்த்து வைத்துக்கொள்கின்றன. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடம் செல்ல கூட்டைவிட்டுக் கிளம்பிய மூன்று வாரங்களுக்குப் பிறகும் சிறிய கிளிகள் தங்கள் பெற்றோரையே உணவுக்காகச் சார்ந்திருக்கின்றன.
கிளிகள் மட்டுமல்ல டால்ஃபின்களுக்கும் பெயர்கள் உண்டு. ஒரு டால்ஃபின் தொலைந்துவிட்டால், மொத்த டால்ஃபின் குடும்பமும்(pod) சேர்ந்து தொலைந்துபோன டால்ஃபினின் பெயர் சொல்லி அழைக்கின்றன.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !