அப்போது சுவாமி
விவேகானந்தர், அமெரிக்காவில்
சிகாகோ மாநகரத்தில்
தங்கியிருந்தார். அங்கு
அவரை ராக்ஃபெல்லர்
என்பவர் சந்தித்தார்.
ராக்ஃபெல்லர், பிற்காலத்தில்
உலகில் புகழ்
பெற்ற பெரிய
பணக்காரர்களில் ஒருவராக
விளங்கினார். விவேகானந்தரைச்
சந்தித்தபோது, ராக்ஃபெல்லர்
அவ்வளவாகப் பிரபலம்
ஆகவில்லை. ராக்ஃபெல்லரின்
நண்பர்கள் பலர்,
விவேகானந்தரைப் பற்றி
அவ்வப்போது ராக்ஃபெல்லரிடம்
கூறியிருந்தார்கள். எனவே
விவேகானந்தரைப் பற்றி
ராக்ஃபெல்லர் நிறையவே
கேள்விப்பட்டிருந்தார். என்றாலும்
ஏனோ அவர்,
விவேகானந்தரைச் சந்திப்பதற்குத்
தயங்கினார். விவேகானந்தர்
அமெரிக்காவில் பல
இடங்களுக்குச் சென்று,
சொற்பொழிவுகள் செய்துகொண்டிருந்தார். அவர் ஒருமுறை
ராக்ஃபெல்லரின் நண்பர்
ஒருவர் வீட்டில்
தங்கியிருந்தார். அப்போது
ஒருநாள் திடீரென்று,
விவேகானந்தரைச் சந்திக்க
வேண்டும்! என்ற
தீவிர எண்ணம்
ராக்ஃபெல்லருக்கு ஏற்பட்டது.
அந்த வேகத்தில்
அவர் விவேகானந்தர்
தங்கியிருந்த வீட்டிற்குச்
சென்றார். அங்கு
அவருக்காக வீட்டின்
கதவை வேலைக்காரன்
திறந்தான். அந்த
வேலைக்காரனைப் பிடித்துத்
தள்ளிவிட்டு, ராக்ஃபெல்லர்
முன்அனுமதிகூடப் பெறாமல்
விவேகானந்தர் இருந்த
அறைக்குள் நுழைந்தார்.
விவேகானந்தர் அப்போது
அமர்ந்து ஏதோ
எழுதிக்கொண்டிருந்தார். அவ்வளவு
வேகமாக ராக்ஃபெல்லர்
சென்றும் விவேகானந்தர்
தன் முகத்தைத்
தூக்கி, வந்தது
யார்? என்று
பார்க்கவில்லை. இவ்விதம்
சிறிது நேரம்
கழிந்தது. தலை
கவிழ்ந்திருந்த நிலையில்
விவேகானந்தர் – தலை
நிமிர்ந்துகூடப் பார்க்காமல்
– திடீரென்று ராக்ஃபெல்லர்
மட்டுமே அறிந்திருந்த
அவருடைய கடந்த
கால நிகழ்ச்சிகளைப்
பற்றிச் சொல்ல
ஆரம்பித்தார். இறுதியில்
அவர், உங்களிடம்
இருக்கும் பணம்
உண்மையில் உங்களுடையது
இல்லை. உலகிற்கு
நன்மை செய்வதற்காக
இறைவன் உங்களிடம்
அந்தப் பணத்தைக்
கொடுத்து வைத்திருக்கிறார்.
அதனால் உலகிற்கு
நன்மை செய்வதற்கு
உரிய ஒரு
வாய்ப்பை இறைவன்
உங்களுக்குக் கொடுத்திருக்கிறார், அவ்வளவுதான்! எனவே
நீங்கள் உங்களிடம்
இருக்கும் பணத்தை
உலக நன்மைக்காகச்
செலவு செய்யுங்கள்
என்று கூறினார்.
இவ்விதம் விவேகானந்தர்
கூறியது ராக்ஃபெல்லருக்குப் பிடிக்கவில்லை. நான்
என்ன செய்ய
வேண்டும் என்பதை
இன்னொருவர் எனக்குச்
சொல்வதா? என்று
அவருக்குத் தோன்றியது.
எனவே அவர்,
நன்றி, வணக்கம்,
சென்று வருகிறேன்
என்றுகூட எதுவும்
சொல்லாமல், வேகமாக
அந்த அறையைவிட்டு
வெளியேறினார். ஆனால்
விவேகானந்தரின் ஆன்மிகசக்தி
ராக்ஃபெல்லரிடமும் வேலை
செய்தது. ஒரு
வாரம் கழிந்திருக்கும்.
ராக்ஃபெல்லர், பொதுத்தொண்டு
நிறுவனம் ஒன்றுக்குப்
பெரிய ஒரு
தொகையை நன்கொடை
அளிக்க வேண்டும்
என்று முடிவு
செய்தார். எனவே
அவர் அதற்கான
திட்டங்களை விரிவாக
ஒரு காகிதத்தில்
எழுதி, அதை
எடுத்துக்கொண்டு விவேகானந்தரைச்
சந்திப்பதற்குச் சென்றார்.
முன்பு போலவே
அதே வேகத்தில்
அவர் மீண்டும்
முன்அனுமதியின்றி, விவேகானந்தர்
இருந்த அறைக்குள்
நுழைந்தார்.
அன்றைய தினமும்
விவேகானந்தர் ஏதோ
படித்துக்கொண்டிருந்தார். ராக்ஃபெல்லர்,
தாம் கொண்டு
சென்றிருந்த காகிதத்தை
விவேகானந்தர் முன்பு
வேகமாக வீசி,
இதோ, இதைப்
படித்துப் பாருங்கள்!
இப்போது உங்களுக்குத்
திருப்திதானே! நீங்கள்
இப்போது எனக்கு
நன்றி சொல்ல
வேண்டும்! என்று
கூறினார். விவேகானந்தர்
அசையவும் இல்லை;
ராக்ஃபெல்லரைத் தலை
நிமிர்ந்து பார்க்கவும்
இல்லை; அவர்
அமைதியாக ராக்ஃபெல்லர்
காகிதத்தில் எழுதியிருந்த
அனைத்தையும் படித்தார்.
படித்து முடித்ததும்
அவர், நான்
உங்களுக்கு நன்றி
சொல்ல வேண்டியதில்லை.
நீங்கள்தாம் எனக்கு
நன்றி சொல்ல
வேண்டும் என்றார்.
அதுதான் ராக்ஃபெல்லர்
தமது வாழ்க்கையில்
அளித்த முதல்
பெரிய நன்கொடை
ஆகும். ராக்ஃபெல்லர்
தன்னிடமிருந்த செல்வத்தை
மக்களுக்குப் பயன்படும்
வகையில், நல்ல
விதத்தில் செலவு
செய்வதற்கு விவேகானந்தர்
வழிகாட்டினார். எனவே
அவர்தாம் விவேகானந்தருக்கு, நன்றி சொல்ல
வேண்டிய நிலையில்
இருந்தார்.
1 comment:
Nice story
Post a Comment