கடந்து செல்லும் பல பெண்களில் ஒருத்தி மட்டும் உன்னை காண்கிறாள் என்று கருதி நீ களிப்பதொரு மாயை!
காற்றிலே பலமணம் கலந்து வர காதங்கள் பலதாண்டி யிருப்பவளின் வாசமதில் தனியே உள்ளதென்றெண்ணி நீயதை சுவாத்தலும் ஒரு மாயை!
கவின்மிகு மாந்தர் உலாவும் உலகினில் கவலை தோய்ந்த உன்முகம் அழுக்கு என்று கருதிநீ தோய்தலு மொரு மாயை!
காவியம் பலகேட்டு கதைகள் பலகேட்டு காதோரம் சிலர் சொன்னச் சொல்லுங் கேட்டுநீ பண்ணிய ஒன்றை கவிதையென கருதுவது மொரு மாயை!
எல்லாவற்றிற்கும் மேல், எண்ணத்தில் திரண்டவற்றை எழுத்தினால் இழைத்து நீ இளைப்பாறும் வேளையிலே எழுதியது நீதான் என்ற எண்ணம் மெதுவாகத்தலைக்கேறும். ஏமாறாதே மாயையிலும் பெரும் மாயையதுவே!
(மாயை வாழ்வில் எப்படி யெல்லாம் ஊடுருவும் என்று சற்றே சிந்தித்த எனக்கு என்மனம் பதிலாய்த் தந்தது)
-கி. பாகுபலி அபிஷேக்.
(22.01.2022)
No comments:
Post a Comment