Friday, September 10, 2021

பனங்கருப்பட்டியில் மருத்துவ குணங்கள்




கருப்பட்டியை காபி, டீ போன்றவைகளில் கலந்து தினசரி அருந்தி வரலாம். சர்க்கரை நோயாளிகள் கூட கருப்பட்டி காபியை குடிக்கலாம். ஏனெனில் உடல் செயல்பாட்டிற்கு ஏற்ற கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளதால் அதிக கலோரிகள் இன்றி உடல் ஆற்றலை அதிகரிக்க செய்கிறது. அதிக இரும்புச்சத்து நிறைந்துள்ளது என்பது ரத்த சோகை ஏற்படுவதை தடுக்கிறது.


கல்லீரலில் சேரும் நச்சுகளை வெளியேற்றி கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்கும். பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து களி செய்து கொடுப்பதன் மூலம் இடுப்பு எலும்பு வலு பெறுவதுடன், கருப்பைக்கு வலுவைத் தருகிறது.


கருப்பட்டியை உணவு உட்கொண்ட பின் சிறிய துண்டு எடுத்து சாப்பிட்டால் செரிமான சக்தியை தூண்டி எளிதில் உணவு செரிமானம் அடைய செய்கிறது. குடலின் இயக்கம் சீராகி மலச்சிக்கல் போன்றவை ஏற்படாதவாறு செயல்படுகிறது.


கருப்பட்டியில் உள்ள பொட்டாசியம் சத்து இதய ஆரோக்கியத்தை பராமரிக்க செய்கிறது. ரத்த அழுத்தத்தை குறைத்து அதன் மூலம் இதய பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது. அதுபோல் பொட்டாசியம் சத்து மூலம் நரம்பு மண்டலமும் ஆரோக்கியம் பெறுகிறது.


கருப்பட்டியுடன் சீரகம் கலந்து பொடித்து உண்ணும்போது நல்ல பசி ஏற்படுகிறது. குழந்தைகள் உணவு சாப்பிடாடல் அடம் பிடிக்கும்போது சீரக கருப்பட்டி உருண்டையை செய்து கொடுத்து விடுங்கள் பிறகு குழந்தைகள் நன்றாக சாப்பிட ஆரம்பித்து விடும்.


இயற்கையேஇறைவன்👍

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !