Tuesday, February 16, 2021

நிலத்தில் கிடைத்த மோதிரம்

 ஒரு பண்ணையாருக்குச் சொந்தமான நிலத்தில் கூலிக்காக ஒரு ஏழை உழுது பயிரிட்டு வந்தான்.

வழக்கம் போல் விவசாயி உழுது கொண்டிருக்கும் போது, ஒரு தங்க மோதிரத்தைக் கண்டு எடுத்தான்.

வேலை முடிந்ததும் வீட்டுக்கு வந்து விட்டான், தான் கண்டு எடுத்த மோதிரத்தை தன் மனைவியிடம் காட்டினான்.

அதைப் பார்த்ததும் அவன் மனைவி, தனக்குக் காதோலை செய்து போட்டுக் கொள்ள ஆசைப்பட்டாள்.




“நிலம் பண்ணையாருடையது, நான் கூலிக்காகவே உழுகிறேன்; நிலத்தில் கிடைப்பது அவரைச் சேர்ந்தது. நாம் எடுத்துக் கொள்வது அவருக்குத் துரோகம் செய்வதாகும் என்றான் அவன்.

கணவன் கூறியது மனைவிக்குத் திருப்தி அளிக்கவில்லை,

”பண்ணையாருக்கு எப்படி தெரியும்? அவர் வந்து பார்த்தாரா ?” என்று வாதாடினாள் மனைவி. இருவருக்கும் இரவு முழுதும் தூக்கம் வரவில்லை .

‘பண்ணையார் வந்து பார்க்க வில்லை தான். ஆனாலும், என் மனச்சாட்சி உறுத்துகிறது” என்று கூறிவிட்டு, காலையில் எழுந்து பண்ணையாரிடம் சென்று, மோதிரத்தைக் கொடுத்து விவரத்தைக் கூறினான் அவன்.

பண்ணையார், விவசாயியின் நேர்மையைப் பாராட்டி, அதை அவனுக்கே பரிசாகக் கொடுத்து விட்டார்.

- மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள் – முதற்பதிப்பு: ஜூன் 1998 – முல்லை பதிப்பகம் 

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !