இணையத்தில் பல வசதிகளை தமது வாடிக்கையாளருக்கு செய்து கொடுத்து வரும் கூகுள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியிட்டது தான் கூகுள் டிரைவ்.
இதை கூகுள் அக்கவுண்ட் உள்ள யாரும் இதனை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். 5 ஜிபி அளவிலான பைல்களை இதில் சேவ் செய்து வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் அந்த பைல்களை, உலகின் எந்த மூலையில் இருந்தாலும், இன்டர்நெட் இணைப்பின் மூலம், கூகுள் ட்ரைவ் பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம்.
5 ஜிபி அளவிற்கும் மேலாக ட்ரைவ் இடம் தேவைப்படுவோர், கட்டணம் செலுத்தி 16 டெராபைட் (!) வரை டிஸ்க் ஸ்பேஸ் பெற்றுக் கொள்ளலாம். இலவச 5 ஜிபிக்கு மேலாக, 25 ஜிபிக்கு க்கு மாதம் சிறிது பணம் கட்ட வேண்டி இருக்கும்.
2006 ஆம் ஆண்டு முதல் கூகுள் நிறுவனம் குறித்து பேசுகையில், இந்த கூகுள் ட்ரைவ் ஒரு வதந்தியாக உலா வந்து கொண்டிருந்தது. அப்போதிருந்தே பல நிறுவனங்கள், இணையத்தில் பைல்களை சேவ் செய்து வைக்க வசதிகளை அளித்து வந்தன. அந்த வரிசையில் ட்ராப் பாக்ஸ் (Dropbox), ஸ்கை ட்ரைவ் (SkyDrive), ஐ கிளவ்ட் (iCloud), பாக்ஸ் (Box) எனக் கிடைத்தன.
கூகுள் ட்ரைவ் தரும் இலவச 5 ஜிபி இடம் குறிப்பிடத்தக்கது. ட்ராப் பாக்ஸ் 2ஜிபி இடம் தருகிறது. ஸ்கைட்ரைவ் 25 ஜிபி கொள்ளளவு தருகிறது. இதில் 5 ஜிபி, உங்கள் கம்ப்யூட்டர் பைல்களுடன் இணைக்கப்பட்ட இடமாகக் கிடைக்கிறது. கூகுள் தன் மற்ற சேவைகளிலும் இந்த இணைய பைல் சேவையினைத் தந்து வருகிறது.
ஜிமெயில் இன்பாக்ஸ் 7 ஜிபிக்கு மேலாகவே இடம் தருகிறது. கூகுள் டாக்ஸ் போல்டர் 1 ஜிபி, பிகாஸா வெப் ஆல்பம் 1 ஜிபி, கூகுள் மியூசிக் தளத்தில் 100 ஜிபி பாடல்கள் சேமிப்பு, கூகுள் ப்ளஸ் வசதியில் எல்லையற்ற போட்டோ மற்றும் வீடியோ பைல் சேமிப்பு எனப் பல ஸ்டோரேஜ் வசதிகள் கூகுள் மூலம் கிடைக்கின்றன. கூகுள் ட்ரைவில் போல்டர்களைப் பயன்படுத்தி, உங்கள் கூகுள் அக்கவுண்ட்டில் இருந்து பைல்கள் தாமாக இங்கு சென்று சேவ் செய்திடும் வகையில் அமைக்கலாம்.
No comments:
Post a Comment