நீதி – அன்பு / நிம்மதி / அமைதி
உபநீதி – பொறுமை / நம்பிக்கை
ஒரு சிறுவன் ஒரு கடலாமையைக் கண்டான். அதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்பிய சமயம் ஆமை தலையை ஓட்டுக்குள் இழுத்துக் கொண்டது. சிறுவன் சற்று ஏமாற்றம் அடைந்தான். ஒரு சிறு குச்சியால் அந்த ஓட்டை திறக்க விரும்பினான். அச்சிறுவனின் மாமா அதைப் பார்த்து விட்டு, “அப்படிச் செய்வது தவறு. இதனால் ஆமை மரணம் அடையலாம். ஓட்டைத் திறப்பதும் கஷ்டம்.” எனக் கூறினார்.
மாமா கடலாமையை வீட்டிற்கு எடுத்துச் சென்று அதை ஒரு புகை போக்கியின் பக்கத்தில் இருத்தினார். சற்று நேரத்தில் வெப்பம் அதிகமானவுடன் ஆமை தன தலையை வெளியில் கொண்டு வந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு கால்களையும் வெளியே எடுத்து ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது. ஆமைகள் இப்படித்தான் இருக்கும் என்று சொன்ன மாமா, “மனிதர்களும் இவ்வாறுதான். அவர்களைக் கட்டாயப்படுத்தி எதையும் செய்யவிக்க முடியாது. முதலில் அன்பு என்ற நல்ல குணத்துடன் அக்கறை என்ற நற்பண்பையும் அவர்களிடம் காட்டினால், நாம் விரும்பிய காரியத்தை அவர்கள் செய்வார்கள்.” என்று கூறினார்.
நீதி:
கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால் யாரையும் எதற்கும் கட்டாயப் படுத்த முடியாது. அன்பும், பொறுமையும் கொண்டே ஒருவர் மற்றவருக்குப் பாடம் புகட்டவோ, நினைத்த காரியத்தைச் செயல் படுத்தவோ அல்லது தங்கள் எண்ணத்தைப் புரிய வைக்கவோ இயலும்.
No comments:
Post a Comment