Monday, June 29, 2020

"டூ இன் ஒன்"

1.  ஒரு சமயம், இங்கிலாந்துக்குச் சென்ற ஜவஹர்லால் நேரு, பிரிட்டிஷ் தத்துவஞானி பெர்ட்ரண்ட் ரஸ்ஸலை மரியாதை நிமித்தமாக சென்று சந்தித்தார்.


நேருவை, "ஜீரோ நாட்டிலிருந்து வருகிற தங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்!'' என்றார் ரஸ்ஸல்.
அதைக்கேட்ட ஜவஹர்லால் நேரு திடுக்கிட்டார். ஒன்றுமில்லாத நாட்டிலிருந்து வருவதாகத் தன்னை குறிப்பிடுகிறாரோ என்று நினைத்துத் திகைத்தார். அவரது முகம் மாறியது.
அவர் என்ன நினைக்கிறார் என்பதை உணர்ந்து கொண்ட ரஸ்ஸல், ""தவறாக எண்ண வேண்டாம். ஆரியபட்டர் என்ற தங்கள் நாட்டைச் சேர்ந்த கணிதமேதை உருவாக்கி, கணித உலகில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது ஜீரோ. அந்த நாட்டிலிருந்து தாங்கள் வந்திருப்பதைத்தான் நான் அப்படி குறிப்பிட்டேன்!'' என்றார்.
அந்த விளக்கத்தைக் கேட்ட பிறகு தான் ஜவஹர்லால் நேரு, குழப்பம் நீங்கி நிம்மதி அடைந்தார்.

2.   ஒரு சமயம், புத்தரின் பிரதம சீடனான ஆனந்தன் அவரிடம், ""குருவே! நான் இந்த உலகத்தைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். எப்படி?'' என்று கேட்டான்.
அப்போது புத்தர் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார்.
அவர், ""இந்த மரத்தில் ஏறி தழை பறித்து வா!'' என்றார்.
ஆனந்தன் அந்த மரத்தின் மீதேறி, தனது கைகொள்ளும் அளவிற்கு தழைகளைப் பறித்து, புத்தரின் முன்னே வந்து நின்றான்.
""ஆனந்தா! இப்போது உன் கையில் என்ன உள்ளது?'' என்று கேட்டார் புத்தர்.

""தழைகள் குருவே!''

""மரத்தில்?''

""நிறைய தழைகள் குருவே!''

""ஆனந்தா! இந்த உலகத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று சொன்னாயே! அது இதுதான். நான் உனக்கு போதித்தது, உன் கையில் உள்ள தழைகளின் அளவுதான். நான் உனக்கு போதித்தது, மரத்தில் உள்ள தழைகளின் அளவு. அவ்வளவையும் என்னால் போதிக்க இயலாது. ஆகவே, நீயேதான் உன் அனுபவத்தால் இந்த உலகத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்!'' என்றார் புத்தர்.

சாதாரண இலை தழைகளைக் கொண்டும் போதிக்கக்கூடிய திறமை தன் குருவுக்கு மட்டுமே உண்டு என்பதை நினைத்து மிகப் பெருமிதம் அடைந்தான் ஆனந்தன்.


No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !