Thursday, September 26, 2019

The University of Grape Garden - Mystery Tamil Stories


மிகவும் பரந்த அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட நிலப்பரப்பு. அங்கு நிறைய வசிப்பிடங்களும் மக்களும் வாழ்ந்து வருகின்றனர். அங்கு வாழ்வதற்கு முக்கியமான காரணம் அங்கு அமைந்துள்ள பாரம்பரியமான பல்கலைக்கழகம். அது இரு நூற்றாண்டுக்கும் முன் நிறுவப்பட்டு இன்றளவும் அதன் சிறப்பு குறையாமல் மாபெரும் ஆராய்ச்சிகள் நிகழ்த்தப்பட்ட இடம். இன்றுவரை வேறெந்த பல்கலைக்கழகத்தாலும் மிஞ்ச முடியாத அளவுக்கு அறிவு பெட்டகங்களை தன்னகத்தே கொண்டு, வரும் அனைவரும் சிறந்த அறிவாளனாக மாற்றும் சொர்க்கம். இதற்குதூணாக விளங்குவது அங்குள்ள மிக அறிய புத்தகங்களை கொண்டுள்ள மிகவும் பழமையான நூலகம். இதன் அளப்பரிய பெட்டகங்களால் இங்கு வந்து படிப்பதற்கு அனைவரும் விண்ணப்பித்து காத்திருப்பர். இங்கு அனுமதி வழங்குவதற்கு சில நிபந்தனைகள் உண்டு. இங்கு கற்க விரும்புவோர் ஏதேனும் ஒரு துறையில் தங்களுடைய ஆராய்ச்சி கட்டுரையை எழுதி அதற்கு சான்றிதழ் வாங்கியிருக்க வேண்டும். சமர்பிக்கப்படும் கட்டுரைகள் இங்குள்ள அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களால் சரிபார்த்து விவாததிற்குள்ளாக்கி பிறகுதான் சான்றிதழ் வழங்கப்படும். இதன் பிறகே இங்கு கற்க அனுமதி வழங்கப்படும்.

இதனாலேயே வருடத்திற்கு மிகவும் குறைந்த எண்ணிகையிலான மாணவர்களே சேருவர். ஆனாலும் இங்கு ஒரு விலக்கு உண்டு. ஆர்வமுள்ள மாணவர்கள் தங்கள் கட்டுரைகளை இங்கு வந்து பேராசிரியர்களின் துணை கொண்டு எழுதலாம். ஆனால் அவர்களுக்கு இங்கு தங்குவதற்கு அனுமதி இல்லை. தினமும் வந்து பயின்று தங்கள் கட்டுரைகளுக்கான தகவல்களை எழுதிக்கொண்டு சென்று விடுவார்கள். அதனால் தங்கும் விடுதியில் குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் இருப்பர்.


மேலும் இந்த பல்கலைக்கழகத்தில் இன்னும் சில சிறப்பு வாய்ந்த இடங்கள் உண்டு. அங்கு வெளி மக்களுக்கும் அனுமதி உண்டு. அவ்வாறான ஒரு இடம் தான் பூங்கா மற்றும் அதன் மத்தியில் இருக்கும் திராட்சை தோட்டம்.  மேலும் பூங்கா அருகில் ஒரு இடு காடும் உண்டு. இந்த பல்கலைகழகத்திற்கே தங்களின் வாழ்வை அற்பனித்தவர்களின் இறந்த  சடலங்கள் இங்கு புதைக்கப்பட்டிருக்கும். இது அவர்களுக்கு செயப்படும் ஒரு மரியாதை.


இந்த ஆண்டிற்கான விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டு மாணவர்களின் சேர்க்கைக்கான வேலை நடந்து கொண்டிருந்தது. நிறைய மாணவர்கள் தங்களின் ஆராய்ச்சி கட்டுரைகளை மிகவும் ஆர்வமுடன் விண்ணப்பத்துடன் சமர்பித்தனர். இரண்டு நண்பர்கள் பெயர் ஹரி மற்றும் விக்கி தங்களுடைய கனவு பல்கலைகழமான இந்த திராட்சை பல்கலைகழகத்தில் விண்ணப்பங்களை தங்களுடைய திராட்சை ஆராய்ச்சி கட்டுரையுடன் விண்ணபித்தனர். 


என்னதான் மற்ற ஆராய்ச்சி இருந்தாலும் திராட்சை ஆராயிச்சி இங்கு புகழ் பெற்ற ஒன்றாகும். அதனாலேயே இதற்கு திராட்சை பல்கலைகழகம் எனும் பெயர் வந்தது. இதற்கு காரணம் அங்கு ஒரு காலத்தில் நடந்த திராட்சை ஆராய்ச்சி மற்றும் அதன் கட்டுரைகள் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. அந்த ஆராய்ச்சிக்கு திராட்சை தோட்டம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வருகிறது.


அப்படி என்னதான் அந்த திராட்சை ஆராய்ச்சியோ என்று தோன்றலாம். அதில் என்ன உள்ளது என்று அறிய நானும் விழைகிறேன். அதற்கு அந்த கட்டுரையை படித்தால் மட்டுமே தெரியும் வாசகர்களே. சரி வாருங்கள், போகிற போக்கில் கட்டுரை கிடைத்தால் பார்க்கலாம்.


மாணவர் சேர்க்கைக்கான நேர்முகம் களைகட்டியது. அங்கும் இங்கும் மாணவர்கள் அலைந்து கொண்டும் இருந்தனர். ஒவ்வொரு கட்டுரைக்கான மாணவர்கள் குழு அழைக்கப்பட்டு நேர்முகம் நடத்தப்பட்டது. ஹரி மற்றும் விக்கி இருவருக்கான அழைப்பு வந்தது. நீண்ட நேர காத்திருப்பிற்கு பிறகு, மதிய வேலை இருக்கும், அழைப்பு வந்ததும் மதிய உணவைப்பற்றி கவலை விட தங்கள் அழைப்பையே எதிர்நோக்கி இருந்ததுபோல் விரைந்தனர். அங்கிருந்த ஒரு கட்டிடத்தினுள் அனுமதிக்கப்பட்டனர். உள்ளே கதவைத்திறந்து வழியை ஒருவர் காண்பித்தார். இருவரும் மனதில் சற்று அமைதி கலந்த பயத்துடன் மேலும் ஆவலுடனும் நுழைந்தனர். அங்கு மூன்று பேராசிரியர்கள் அவர்களை வரவேர்த்தனர். மெதுவாக அமர்ந்து தங்களிடம் கொடுக்கப்பட்ட நீரை அருந்தினர். 



அங்கிருந்த மூத்த பேராசிரியர் ஒருவர் "நான்தான் இந்த பல்கலைகழகத்தின் பேராசிரியர். கடந்த நாற்பது ஆண்டுகளாக இங்கு பணியாற்றுகிறேன். என் பெயர் டேவிஸ் பெர்க். சரி உங்களை பற்றி கூறுங்கள் என்றார். மற்ற இரு பேராசிரியர்களும் தங்களை அறிமுகம் செய்துகொண்டனர் ஒருவர் கரோல் மற்றொருவர் ஹெரால்ட். 

ஹரியும் விக்கியும் தங்களை அறிமுகம் செய்தனர். நாங்கள் இந்தியாவில் இருந்து வந்துள்ளோம் என்றும் தங்களுக்கு தங்களின் இந்த திராட்சை ஆராய்ச்சியில் அதிக விருப்பம் சிறு வயதில் இருந்தே இருந்ததால், தங்களை பள்ளி படிப்பிற்கு பிறகு இந்த பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு காத்திருந்தோம். அதனால் அவர்களின் திராட்சை கட்டுரையை சமர்பித்திருக்கிறோம் என்று கூறினார். மேலும் தங்களை பற்றி மற்ற பல தகவல்களையும் கூறினர்.


இருவரும் திராட்சை ஆராய்ச்சி பற்றி கூறிய பொழுது, அங்கிருந்த பேராசிரியர்களுக்கு சற்று வியப்பாக இருந்தது. காரணம் கடந்த நாற்பது ஆண்டுகளில் அந்த ஆராய்ச்சிக்கு எவரும் விண்ணபிக்கவில்லை. இதற்கு முக்கியமான காரணம் உண்டு. என்னதான் திராட்சைக்கு பெயர் போனதானாலும், அந்த படிப்பிற்கான புத்தகங்கள் எங்கும் இல்லை மற்றும் ஆசிரியர்கள் எவரும் இலர். இந்த ஆராய்ச்சி தடை செய்யப்பட்டதாகவும் மக்களிடையே ஒரு கருத்து உண்டு. ஆனாலும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. அங்குள்ள மூத்த பேராசிரியருக்கும் இது பற்றி மர்மமாகவே உள்ளது. 


டேவிஸ் "உங்களுக்கு எப்படி இந்த திராட்சை ஆராய்ச்சியில் விருப்பம் வந்தது"


விக்கி "ப்ரொபசர் டேவிஸ், ஹரி சின்ன வயசுல இருந்தே எனக்கு பிரெண்ட். எப்ப பாத்தாலும் இந்த பல்கலைகழகத்தை பற்றியும் திராட்சை ஆராய்ச்சி பற்றியும் சொல்லி கிட்டே இருப்பான். அதனால என்னக்கும் இதுல ஈடுபாடு வந்தது. அவன் கூட நானும் எதாவது திராட்சை பத்தி புது விஷயம் கெடச்சா விவாதிச்சிகிட்டே இருப்போம்"


ஹரி "ஆமா ப்ரொபசர். எனக்கு எங்க அப்பா இத பத்தி எப்பவும் பேசிகிட்டே இருப்பாரு. நிறைய கதைகள் சொல்லுவாரு. அப்பவே எனக்கு ரொம்ப பிடிக்கும். எப்டியாவது இந்த ஆராய்ச்சிய இந்த பல்கலை கழகத்துல பண்ணனும்னு என் லட்சியம்."


ஹெரால்ட் "உங்க நோக்கத்த நான் பாராட்டுறேன். இந்த பல்கலைகழகத்திற்கு இப்பேற்பட்ட மாணவர்கள்தான் தேவை. ஆனா என்ன பிரச்சனைனா, இந்த ஆராய்ச்சிக்கு உங்கள வழிநடத்த இப்போதிக்கு திராட்சை படிப்பை பற்றி நல்ல தெரிஞ்ச எந்த ஆசிரியரும் இல்ல. இது வருத்தமான விசயம்தான். உங்களால இந்த நிலமையில இத தொடர முடியுமான்னு தெரியல."


இருவரும் சற்று அதிர்ச்சி அடைந்தனர். வியப்புடன் வினா எழுப்பினர்.

ஹரி "ப்ரொபசர் இது எங்க லட்சியம். நீங்க எப்டியாவது உதவனும். எங்களால இத பண்ண முடியாதுன்னு நீங்க நினைகிறீங்களா. எங்கள ரிஜெக்ட் பண்றதுக்குதான் இப்படி சொல்றீங்களா!!"

டேவிஸ் "இல்ல ஹரி. இப்ப இருக்குற சூழ்நிலையில உங்களுக்கு உதவ யாரும் இல்ல. இந்த டிபார்ட்மென்ட் ல யாருக்கும் நாலேட்ஜ் இல்ல. இப்படி இருக்கும் போது உங்களுக்கு ஏதாவது சந்தேகம்னா, இல்ல உங்கள வழிநடத்த எங்களால எப்படி முடியும். எங்களுக்கே இந்த டிபார்ட்மென்ட ஏன் இப்படி மாத்தி வச்சிருக்காங்கன்னு வரலாறு தெரியாது. நான் இங்க வந்து நாற்பது வருஷம் ஆச்சி. அப்பவே இந்த டிபார்ட்மென்ட் ல யாரும் இல்ல. அதுக்கு முன்னாடி எதோ ரெண்டு பேர் இந்த ஆராய்ச்சி செய்து காணாம போய்டாங்கன்னு கேள்விபட்டேன். அதுவே இப்பவரைக்கும் மர்மமாவே இருக்கு. அதனாலேயே இத யாரும் தொடரனும்னு நினைகலன்னு நினைக்கிறன். அது மட்டும் இல்லாம இந்த பலகலைகழகத்தின் முழு வரலாறு தெரிஞ்சவங்க எங்க இருக்குறாங்கன்னு தெரியல."


ஹெரால்ட் "உங்களுக்கு இங்க படிக்கணும்னு லட்சியம் இருக்குறதால உங்களுக்கு யோசிக்க அவகாசம் குடுக்குறோம். வேர் ஏந்த டிபார்ட்மென்ட் படிக்கணும்னு யோசிச்சிட்டு வாங்க. மத்த டிபார்ட்மென்ட்ல அனும்பவம் இருக்குறவங்க நிறைய பேர் இருக்குறாங்க. உங்களால எளிதாக படிக்க முடியும். முடிவு உங்க கையில தான். வேணும்னா திராட்சை ஆராய்ச்சி படிப்பையும் படிக்கலாம். ஆனால் நீங்க தான் அதுக்கு பொறுப்பு ஏத்துக்கணும்.


இருவரும் அங்கிருந்து தங்களின் கால அவகாசத்தில் சிந்தித்து ஒரு முடிவு எடுப்பதற்கு விடை பெற்று வெளியேறினர். அதற்குள் அடுத்த மாணவர்களுக்கான அறிவிப்பு வந்து அடுத்து காத்திருந்த மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.


ஹரி "என்னடா விக்கி இப்பிடி சொல்லிட்டாங்க. என்னடா பண்ணலாம்"


விக்கி "ஒன்னும் புரியலடா. சின்ன வயசுல இருந்து இங்க படிக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டோம். இப்ப என்னடானா முடியாது போலேயே"


ஹரி "முடியாதுன்னு சொல்ல முடியாது. அந்த படிப்ப விட்டுட்டு வேற படிப்ப எடுத்துக்கலாம். ஆனா இனிமே வேற எத படிச்சாலும், முதல்ல இருந்து நம்ம ரிசெர்ச பண்ணனும். அத நெனச்சாதான் மலையாட்டம் தெரியுது."


விக்கி "ஓ காட். இது என்ன சோதன"


ஹரி "சரி டா. யோசிக்கலாம்."


இருவருக்கும் மிகவும் பசித்ததால் சப்படி சென்றனர். சாப்பிடும் போதும் சிந்தித்துக்கொண்டே இருந்தனர். ஒன்றும் பிடிபடவில்லை. சந்தகேம் எழுந்த வண்ணம் இருந்தது. ப்ரொபசர் சொன்னதையும் மனதில் போட்டு பிசைந்துகொண்டிருன்தனர்.


விக்கி "டேய் ஹரி. யாருடா அது ரெண்டு பேர்."


ஹரி "யாரடா சொல்ற"


விக்கி "யாரோ ரெண்டு பேர் திராட்சை ஆராய்ச்சி பண்ணவங்க. திடீர்-னு காணாம போய்டாங்க"


ஹரி "தெரிலடா. "


சாப்பிட்டு முடித்துவிட்டு சற்று நேரம் அமைதி காத்தனர்.


திடீரென ஹரி "ஒரு ஐடியா"


விக்கி "என்னடா சொல்லு சொல்லு"


ஹரி "அப்பா கிட்ட கேக்கலாமா"


விக்கி "சூப்பர் டா. சீக்கிரம் போன் போடு பேசுவோம்"


வேகமாக தங்களிடம் இருந்த ஒரு தொலை பேசியில் ஹரியின் தந்தையை தொடர்பு கொண்டனர். நடந்தை கூறினர்.


ஹரி "அப்பா என்ன பண்றதுனே தெரில அப்பா. நீங்கதான் எதாவது சொல்லணும்"


அப்பா "ஹரி ஒன்னும் கவலை படாத. யாரு குறுக்க வந்தாலும் உன்னோட லட்சியத்த மட்டும் விட்டு கொடுக்காத. அவ்வளவுதான் நான் சொல்லுவேன். முடிவு உங்க கைலதான்." என்று கூறி சற்று நேரம் பேசிவிட்டு தொடர்பை துண்டித்தார். 


அப்பாவின் அறிவுரைப்படி இருவரும் ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்தனர். இப்போது ஹரி மற்றும் விக்கிக்கான அழைப்பு வந்தது. இருவரும் சற்று தெளிந்த மனநிலையுடன், உள்நுழைந்தனர். அதே மூன்று பேராசிரியர்கள் அவர்களை வரவேற்றனர். 


ஹெரால்ட் "வாங்க மாணவர்களே. உக்காருங்க. என்ன முடிவெடுத்திருக்கீங்க. சொல்லுங்க"


ஹரி "ப்ரொபசர், நாங்க திராட்சை ரிசெர்ச்சையே பண்ணலாம்னு இருக்கோம். எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்காட்டலும் பரவா இல்ல. இது எங்களோட கனவு ப்ராஜெக்ட். இத விட்டுட்டு வேற எதுக்கும் போக எங்களுக்கு மனசு வரல"


டேவிஸ் "ஓகே குட். உங்களோட ஆர்வத்த பாராட்டுறேன். யூ பீப்பில்ஸ் ஆர் அப்ரூவ்ட்"


என்று கூறிவிட்டு அவர்களின் விண்ணப்பம் அனுமதிக்கான முத்திரை அடிக்கப்பட்டது. இருவர் முகத்தில் தன்னம்பிக்கை மற்றும் ஆனந்தம் பொங்கி வழிந்தது. பேராசிரியர்களின் ஆசியுடன் இருவரும் அங்கிருந்து கிளம்ப ஆயத்தமாயினர். 


அனைவருக்குமான நேர்முக தேர்வுகள் முடிவுற்று, சிலர் மகிழ்சியுடனும், மேலும் அனுமதிக்கப்படாத சிலர் ஏமாற்றத்துடனும் திரும்பினர்.


மாலை வேலை நெருங்கியது. மக்கள் அங்கிருந்த பூங்காவில் தஞ்சம் அடைந்தனர். ஹரி மற்றும் விக்கி இருவரும் பூங்கா வழியாக வெளியேறினர். அந்த பூங்கா பல்கலைகழகத்தின் பின் புற வாயிலில் அருகில் அமைந்திருந்தது. 


ஹரி "டேய் விக்கி பார்க் க்கு போயிட்டு போலாம்டா. அங்க 60 வருஷத்து திராட்சை தோட்டம் இருக்குடா. வாடா போலாம்"


விக்கி "டேய் இப்பவே லேட் ஆச்சி. நம்ம காலேஜ் ஜாயின் பண்ணும்போது வந்து பாதுக்கலாம்டா. போலாம் டா. இப்ப போனத்தான் சீக்கிரமா வீடு பொய் சேர முடியும். அதான் நம்மளுக்கு அட்மிசன் கிடச்சிருசிள்ள"


ஹரி "சரி" என்று கனத்த மனத்துடன் அந்த பூங்காவை பார்த்துக்கொண்டே வெளியேறினான். அந்த பூங்கா அவனிடன் ஏதோ சொல்ல வருவதைப்போல உணர்ந்தான்.


ஹரி மற்றும் விக்கி அவரவர்கள் வீட்டிற்கு சென்றடையும்போது இரவு நேரமும் வந்தது. இரவு சாப்பாட்டை முடித்து விட்டு ஹரியும் அப்பாவும் வீட்டின் மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்தனர். வானத்தில் இருள் சூழ்ந்து நட்சத்திரங்கள் ஒளிர, கடலில் ஓடும் படகு போல அரை நிலா மேகத்தினூடே சென்றுகொண்டிருக்க, அதை வேடிக்கை பார்த்துக்கொண்டே பேச ஆரம்பித்தனர்.


அப்பா "ஹரி, சொல்லுடா இன்னிக்கி எப்படி இருந்தது. என்ன சொன்னாங்க"


ஹரி "சந்தோசமா இருக்குப்பா. ஒரு வழியா அட்மிசன் போட்டாங்க. நானும் விக்கியும் போய்ட்டு எல்லாத்தையும் முடிச்சிட்டு வந்தாச்சி. அட்மிசன் லெட்டர சீல் வச்சி குடுத்தாங்க. அப்பறம் அங்க ஜாயின் பண்ற தேதியோட குடுத்துருக்காங்க. இன்னும் இருபது நாள் இருக்குப்பா. ஹ்ம்ம். எப்படா போவோம்னு இருக்கு"


அப்பா "எங்கள விட்டுட்டு போறதுல அவ்ளோ சந்தோசமா" என்றார் நகைத்துக்கொண்டே.


ஹரி "அப்படி இல்லப்பா. என்னோட லட்சியம் கொஞ்சம் கொஞ்சமா நடக்குறத பாக்கும்போது ஆனந்தமா இருக்கு. அந்த ஒரு ஆவல்தான் பா"


அப்பா "சரி சரி. சும்மாதான் சொன்னேன். சரி சொல்லு"


ஹரி "அப்பா, எனக்கொரு சந்தேகம்"


அப்பா "என்ன சந்தேகம்"


ஹரி "திராட்சை ரிசெர்ச் படிப்ப பத்தி நீங்க எனக்கு நிறைய சொல்லிருக்கீங்க. ஆனால் அது அங்க ரொம்ப பழைய படிப்பு ன்னு சொல்றாங்க. அதுவும் இல்லாம இப்ப யாருமே அத படிக்கிறது இல்லன்னு சொல்றாங்க, அத சொல்லித்தரவும் யாரும் இப்ப இல்லையாம்."


அப்பா "ஹ்ம்ம். நீ போன் ல எங்கிட்ட சொன்னதுதானே"


ஹரி "ஆமாம் பா. ஆனால் ஏன் பா. இத இப்படியே விட்டுடாங்க. நல்ல படிப்பு இல்லையா."


அப்பா "ஒரு காலத்துல இதுல ரிசெர்ச் பண்றவங்க நிறைய பேர் இருந்தாங்க. ஒரு கட்டத்துல இதுல பலன் ஏதும் இல்லன்னு இத விட்டுடாங்க. அப்பறம் ஒருத்தர் இத பத்தி இன்னும் ஆராய்ச்சி பண்ணி சில கட்டுரைய வெளியிட்டார். பல மகத்தான பலன் இருகிறதாவும், இன்னும் ஆராய்ச்சி பண்ணுனா இதுல இருந்து பல அறிய பொருட்கள் கிடைப்பதாகவும் ஒரு செய்தி ஆர்டிகிள் வந்திச்சி. அதுல என்ன இருந்திச்சின்னு எனக்கு நிறைய தெரியாது. அப்ப நான் ரொம்ப சின்ன பையன். எங்க அப்பா, அதாவது உங்க தாத்தா படிச்சி சொல்வாரு. எனக்கு அவ்வளவா புரியாட்டாலும், அந்த காலத்துல இது புகழ் பெற்ற ஒரு படிப்பா மாறிச்சி."


ஹரி "அப்பறம் என்னப்பா ஆச்சி"


அப்பா "அப்பறம் ஒரு வருசம் கழிச்சி திடீர்னு அந்த ரிசெர்ச் பண்றவரு காணாம போய்ட்டதாகவும், அந்த ஒரிஜினல் ரிசெர்ச் ஆர்டிகிள், புத்தகம் எல்லாமே தீப்பிடிச்சி எரிஞ்சிட்டதாகவும் பேசிகிட்டாங்க. அப்பரம் கொஞ்சம் கொஞ்சமா எல்லாரும் அத மறக்க ஆரம்பிச்சாங்க. இருந்தாலும் ஒரு சிலர் அதுல ஆர்வமா இருக்குறவங்க அந்த ஆராய்ச்சிய பண்றதுக்கு முயற்சி செஞ்சிகிட்டுதான் இருந்தாங்க. ஆனா எவ்ளோ பேர் முயற்சி செஞ்சும் அதுல இருக்குறது என்னன்னு கண்டு பிடிக்க முடியாம, அத கைவிட்டுடாங்க. அப்பறம் அந்த படிப்புக்கு அப்ளை செய்றதையே நிறுத்திடாங்க. காலப்போக்குல அத மறக்கவே செஞ்சிடாங்க. உங்க தாத்தா தான் அந்த ஆர்டிகிளோட ஒரு பகுதிய அப்பவே வாங்கி வச்சிருந்தாரு. நான் அத பாதுகாத்து வச்சி தான், அப்பப்போ படிச்சி பாப்பேன். ஒண்ணுமே புரியாது. சரி படிச்சத யாருகிட்டயாவது சொல்லனும்னு தோணும்போது, உங்க அம்மாகிட்ட சொல்லுவேன். அவ ஒன்னுமே புரியலன்னு கிளம்பிருவா. நீ பொறந்ததுக்கு அப்புறம், உங்கிட்ட சொல்ல ஆரம்பிச்சேன். நீ ஒருத்தன் தாம்பா என்ன சொன்னனும் தலை ஆட்டி ஆட்டி  கேட்டுகிட்டு இருப்பே. அதனாலதான் என்னமோ உனக்கு இதுல ஆர்வம் வந்திருச்சின்னு நினைக்கிறேன்."


ஹரி "நீங்க சொல்றது என்னக்கு வியப்பா இருக்கும்பா. அனாலும் இதுவரையும் நானா ஒரு மாதிரி புரிஞ்சிகிட்டு இருந்தேன். அது சரியா தப்பான்னு கூட தெரியாது. இனிமே இந்த நாலு வருஷம் அத பத்தி நான் படிக்கபோறேன்" என்றான் ஆனந்தமாக.


இனி மர்மம் பல்கலைகழத்தில்...

தொடரும்...

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !