Thursday, April 25, 2019

உருளைக்கிழங்கில் இரட்டை படுக்கை கொண்ட தங்கும் விடுதி - ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா?

அமெரிக்காவில் 2012-ம் ஆண்டு மிகப் பெரிய உருளைக்கிழங்கு விளைவிக்கப்பட்டு தற்போது அது இரட்டை படுக்கை கொண்ட சிறிய தங்கும் விடுதியாக அமைக்கப்பட்டுள்ளது.

நியூயார்க்:

அமெரிக்காவின் இடாகோ மாகாணத்தில் தலைநகர் போய்சில் உருளைக்கிழங்கு பயிரிடுவதை ஊக்குவிக்கும் விதமாக, கடந்த 2012-ம் ஆண்டு மிகப் பெரிய உருளைக்கிழங்கு விளைவிக்கப்பட்டது.

28 அடி நீளம் மற்றும் 12 அடி அகலத்தில் 6 டன் எடையுடன் விளைந்த இந்த உருளைக் கிழங்கு உலகிலேயே மிகப் பெரிய உருளைக்கிழங்காக அறியப்பட்டது. அதன் பின்னர் மக்களின் பார்வைக்காக இந்த உருளைக்கிழங்கு ராட்சத லாரி மூலம் அமெரிக்கா முழுவதும் சுற்றிவந்தது. கடந்த ஆண்டு இறுதியில் இந்த சுற்றுப்பயணம் முடிந்தது.



இந்த நிலையில், தற்போது இந்த உருளைக் கிழங்கு இரட்டை படுக்கை கொண்ட சிறிய தங்கும் விடுதியாக மாற்றப்பட்டுள்ளது. உருளைக்கிழங்கை குடைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த தங்கும் விடுதியில், சொகுசு இருக்கைகள், படுக்கை மற்றும் கழிவறை என அனைத்து வசதிகளும் உள்ளன. இது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.


இந்த விடுதியில் ஒரு நாள் தங்குவதற்கு 200 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.14 ஆயிரம்) வசூலிக்கப்படுகிறது. அப்படி இருந்தும் மே மாதம் முழுவதும் இந்த விடுதி முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !