Thursday, March 14, 2019

காதலர் தின சிறப்பு கவிதைகள்

வம்பான
பார்வையை
அம்பாக
எய்கின்றாய்

நீ தூரமாக இருந்தாலும்
உனது குரலை
கேட்காத நொடிகள் இல்லை
கேட்கிறேன் இதய துடிப்பில்
ஏனென்றால் என் இதயம்
துடிப்பது உனக்காக அல்லவா

மனமும்
மகிழ்வில்
உன் விழிகளில்
என்னை காண்பதால்

என்னை மறந்து
கொஞ்ச நேரம்
உலகை ரசிக்க
நினைத்தால்
அங்கும் வந்துவிடுகிறாய்
நானே...
உன் உலகமென்று

கொஞ்சும்
மொழியில்
கெஞ்சும்
உன் வார்த்தைகளில்
என் கோபங்களும்
மறைந்து விடுகிறது

மழைச்சாரலாய்
நீவர கவிச்சோலையானேன்
நான்...!

மனதிலிருக்கும்
ஆசைகளையெல்லாம்
கொட்டி தீர்த்தவன்
அயர்ந்து போனான்
குழந்தையாய்...!

காற்றோடு
பேசும் மலராய்
உன் மனதோடு
பேசி கொண்டிருக்கின்றேன்
நான்...!

நான்
மறைந்தாலும்
உன் மனதில்
மறக்கப்படாதளவுக்கோர்
அழகிய வாழ்க்கையை
வாழ்ந்திட வேண்டும்

பார்க்க
மறுத்த விழிகளும்
காத்துக்கிடக்கு உன்னன்பில்
தொலைந்து...!

இடைவெளி
வலியை தருமென
தெரிந்தும் பிடிவாதமாய்
அனுபவித்திருக்கிறோம்
இருவரும்...!

விடைப்பெறட்டும்
நாணம்
விடைத்தருகிறேன்
நானும்
உன் பார்வையின்
கேள்விக்கு

உலகை
காட்டியது
பெற்றோரென்றாலும்
அதை ரசிக்க
வைத்துக்கொண்டிருப்பது
நீ...!

உன் சிறுத்துளி
நினைவு போதுமென்
அகம் முகம் மகிழ...!

உதிர்ந்திடுமுன்
கொய்தெறிந்துவிட்ட
மலருக்காக
கண்ணீர் வடிக்கின்றது
வானம்...!

தூரம் வலியை
கொடுத்தாலும் சுகமே
நினைவுகள்
உன்னை சுற்றியே
சுழன்று கொண்டிருப்பதால்

நினைவு கடலில்
நீந்துகின்றேன்
கரை சேர்த்திட
வருவாயென...!

நம்மை
நனைத்த மழைதுளி
உலர்ந்தபோதும்
நாம் இணைந்த
நினைவுதுளி
இன்னும் ஈரமாகவே
மனதில்...!

என்னால்
நீ அனுபவித்த
காயங்களையெல்லாம்
ஆற்றிடவேண்டும்
அன்பில்...!

தித்திக்கும்
உன் நினைவுகளை
சந்திக்கும் போதுதான்
காத்திருக்கும் வலிகள் கூட
காணாமல் போய் விடுகின்றது
என் கனவுகள்
நீயாக இருக்கும் வரை
என் கவிதைகள்
உன் பெயர் சொல்லும்
அது விதியின் செயல் அல்ல
நீ செய்த மாய வலை...!
(யாவும் கற்பனை)

வரிகளில்
இல்லாத ரசனை
உன்னிரு விழிகளில்
உணர்ந்தேன்...!

நீ விடைபெறும்
போதெல்லாம்
என்னிடம் தாவிக்கொள்கின்றது
சிறு குழந்தையாய்
உன் நினைவுகள்...!

சுதந்திரமான மனதும்
சுயநலமாகி போனது
உனதன்பு எனக்கே
எனக்குமட்டும்
சொந்தமென்று

மாட்டிய கொலுசில்
மனசையும் கோர்த்து
விட்டாயா
ஒலிக்குமிசையில்
உன்பெயர் கேட்குதே

உறங்காத கண்களும்
உறங்கிப்போனது
உன் நெஞ்சமெனும்
பஞ்சணையில்

உளிகொண்டு
பார்வையில்
செதுக்குகின்றாய்
சிலையாகின்றேன்
நானும்

காதலின்
வெளிபாடுதான்
முத்தமென்றால்
நாமும் பரிமாறிக்கொள்வோம்
முத்தங்களை
விழிகளை இதழ்களாக்கி

கண்களில் தொடங்கி
கட்டிலறையில்
முடிவதல்ல காதல்
மனதில் மலர்ந்து
மணவறை சென்று
மரணம்வரை
உடனிருப்பதே
உண்மை காதல்

உன்னில் நானும்
என்னுள் நீயுமாக
வாழும் நமக்கு
தினமும் காதலர் தினமே

எந்த தினம்
என்றாலும் அனுதினமும்
அவனுடன் இருந்தால்
காதலர்தினம் தான்...!

அம்மாவை விட்டுகொடுக்காத அப்பா
அப்பாவை விட்டுகொடுக்காத அம்மா
இவர்களைவிடவா சிறந்த காதல்ஜோடி
இவ்வுலகிலிருக்க போகிறார்கள்

சத்தமின்றி
யுத்தம் செய்யும்
உன் பார்வையில்
ரத்தமின்றி
போர்க்களமானது
மனம்...!

ஒட்டி
கொண்டிருக்கும்
தாடிக்குள்
சிக்கி கொள்கிறது
மனம் தினம்

உறங்காத
விழிகளுக்குள்
மறைந்துகொண்டு
இம்சிக்கிறாய்
இதமாய்

துன்பக் கடலில்
தத்தளித்தபோது
அலைபோல்
வந்தென்னை
கரைசேர்த்தாய்

சுட்டெரிக்கும்
வெயிலிலும்
மழைசாரலாய்
நீயென்னை
கடக்கயில்
இதயமும்
நனையுதே

என்
ஒவ்வொரு
நொடியின்
தொடக்க
புள்ளி நீ

ஜன்னலை
பூட்டியபின்னும்
காட்சியை
ரசிக்க தவறாத
விழிகளைபோல்
மனதை பூட்டியபின்னும்
உன் நினைவுகளை
நினைக்க தவறியதில்லை
மனம்...

செல்லும்
இடமெல்லாம்
வந்து விடுகின்றாய்
நிலவைபோல்
நீயும் நினைவில்

உதிரா மலராய்
நீ மனதில்
மலர்ந்திருக்க
இந்த உதிரும்
மலரும் ஏனோ

உன்னால்
தண்டனை
அனுபவிக்கின்றது
நகமும் கொஞ்சம்
திருப்பிக்கொள்
உன் பார்வையை

தனித்திருக்கும்
போதெல்லாம்
மனம் உன்னிடமே
தாவுது...

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !