Friday, March 1, 2019

ஜெர்ரியும் சீஸும் கொஞ்சம் கட்டுக்கதையும்

சீஸை திருடும் ஜெர்ரியையும், ஜெர்ரியை துரத்திப்பிடிக்க முயற்சி செய்து ஒவ்வொரு முறையும் பல்பு வாங்கும் டாமையும் விரும்பிப் பார்க்காதவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. ஆனால், ஜெர்ரிக்கு மட்டுமல்ல, எந்த எலிகளுக்குமே சீஸ் விருப்பமான உணவல்ல. இன்னும் சொல்லப்போனால், சீஸின் வாசனை வந்தாலே, அந்தப்பக்கம் போகாமல் தெறித்து ஓடிவிடும் எலிவகைகள் இருக்கின்றன. எலிகளுக்கு பசி வந்தால் சமையலறையில் இருக்கும் உணவுப் பொருட்கள் முதல், ப்ளாஸ்டிக், மரம், பூச்சிகள், மனிதன் என கண்ணில் படும் அனைத்தையும் சாப்பிடும் . வேறு வழியே இல்லையென்றால், சீஸையும் சாப்பிடும்.
jerry

அப்படியென்றால், எலிகளுக்கு சீஸ் பிடிக்கும் என்று கிளப்பிவிட்ட புண்ணியவான்(வதி) யாரு? தெரியாது. ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்த கட்டுக்கதை இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அந்தக்காலத்தில், தானிய வகைகளையும், இறைச்சி வகைகளையும் சீஸையும் சேமித்து வைக்கும் பழக்கம் இருந்திருக்கும். தானியங்களையும் இறைச்சியையும் எலிகள் மற்றும் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க கொஞ்சம் சேஃப்டியாக வைத்திருப்பார்கள். ஆனால் சீஸ் கெட்டுப்போகாமலிருக்க காற்றோட்டமான இடத்தில் வைத்திருப்பார்கள். சாப்பாடு எதுவும் கிடைக்காத எலிகள் வேறு வழியின்றி சீஸை சாப்பிடத் துவங்கியிருக்க வேண்டும். இதிலிருந்து தான் எலிக்கு சீஸ் மிகவும் பிடிக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே பரவத் தொடங்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !