சத்துள்ள உணவு, சமச்சீர் உணவு வரிசையில் உணவு பிரமிட்(Pyramid க்கு தமிழ் வார்த்தை ஏதும் இருக்கிறதா?) மக்களால் அதிகம் கவனிக்கப்படும், அரசாங்கங்களால் சப்போர்ட் செய்யப்படும் ஒரு விஷயம். இந்த உணவு பிரமிட் முதன் முதலில் ஸ்வீடனில் உருவாக்கப்பட்டது. 1970களில் ஸ்வீடன் அரசாங்கம், உணவுப் பொருட்களின் விலையேற்றத்தைப் பார்த்த பின், தங்கள் நாட்டின் சுகாதார அமைப்பான Socialstyrelsen (National Board of Health and Welfare)ஐ அழைத்து, மக்களுக்கு உதவ ஏதாவது செய்ய வேண்டியது. அந்த அமைப்பிலிருந்தவர்கள், மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துகளைத் தரும் உணவுப் பொருட்கள், வைட்டமின் சத்துகள் அதிகமிருக்கும் உணவுப் பொருட்கள், கொழுப்புச்சத்து நிறைந்த உணவுப்பொருட்கள் என்று பிரித்து மக்களிடையே விளம்பரப்படுத்தினர். ஆனால், பிரமிட் மாதிரியான அமைப்பை அவர்கள் உருவாக்கவில்லை.
ஸ்வீடன் நாட்டின் அரசாங்க கூட்டுறவுக்கடையில் வேலை செய்த Anna Britt Agnsäter என்ற பெண் தான், சுகாதார அமைப்பு வெளியிட்ட உணவுப் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு, இந்த Food Pyramidஐ உருவாக்கினார். 1992ஆம் ஆண்டு அமெரிக்காவின் USDA அமைப்பு தங்கள் சார்பாக ஒரு உணவு பிரமிட் சார்ட்டை வெளியிட்டது.
ஒன்று தெரியுமா, இந்த மாதிரி உணவு பிரமிட் வெளியிட்ட பின்புதான் obesity எனப்படும் அதீத உடல் எடை பிரச்னை அதிகமானது. சார்ட்டை தப்பாகப் புரிந்துகொண்ட மக்கள் எக்கச்சக்கமாக பிரட் வகைகளைச் சாப்பிட்டு வைக்க, அவை மக்களின் உடல் எடையை பாதிக்கத் தொடங்கியதாக The Wall Street Journal செய்தி வெளியிட்டது.
No comments:
Post a Comment