Tuesday, January 1, 2019

விடுகதை‌க்கு ‌விடை தெ‌ரி‌ந்தா‌ல் கூ‌றி‌விடு‌ங்க‌ள்.....

1. அடி மலர்ந்து நுனி மலராத பூ எது?

2. காகிதத்தைக் கண்டால் கண்ணீர் விடும் அது என்ன?

3. காக்கைப் போலக் கருப்பானது, கையால் தொட்டால் ஊதா நிறம், வாயால் மென்றால் நீல நிறம் அது என்ன?

4. தாடிக்காரன், மீசைக்காரன். கோயிலுக்குப் போனால் வெள்ளைக்காரன் அது என்ன?
5. சிவப்புப் பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது அது என்ன?

6. காற்றிலே பறக்கும் கண்ணாடி குண்டு, தொட்டுவிட்டால் பார்க்க முடியாது அது என்ன?

7. ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?

8. ஒற்றைக் காலில் ஒய்யாரமாய் ஆடுவான். ஓய்ந்து விட்டால் படுத்துவிடுவான் அவன் யார்?

9. பச்சை வீட்டுக்கு சிவப்பு வாசல் அது என்ன?

10. நடைக்கு உதாரணம் சொல்வார்கள். ஆனால் குறுக்கே நடந்தால் சிலருக்கு பிடிக்காது. அது என்ன?


விடைக‌ள் 

1. வாழைப்பூ


2. பேனா

3. நாவல் பழம்

4. தேங்காய்

5. காய்ந்த மிளகாய்

6. நீர்க்குமிழி

7. விரல்கள்

8. பம்பரம்


9. கிளி


10. பூனை



No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !