Monday, January 7, 2019

தமிழ் விடுகதைகள்

விடுகதைகள்– Vidukathai in Tamil – Part 1

1. இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்? தேள்
2. பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன? தலைமுடி
3. உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் ஒருவன் வெங்காயம்
4. கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்? கரும்பு
5. மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன? விழுது6. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன? பட்டாசு
7. ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் சீரங்கம் தூங்கவில்லை அவன் யார்? மூச்சு
8. கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்? பூரி
9. கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான்அவன் யார்? காகம்
10. பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள் ? வெண்டைக்காய்

விடுகதைகள்– Vidukathai in Tamil – Part 2

1. கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்? பட்டுத்துணி
2. படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன ? பட்டாசு
3. ஓர் அரண்மனையில் முப்பத்திரெண்டு காவலர்கள் அது என்ன? பற்கள்
4. உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார்? அகப்பை
5. காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன? சூரியன்
6. கந்தல் துணி கட்டியவன், முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான். அது என்ன? சோளக்கதிர்
7. கடல் நீரில் வளர்ந்து , மழை நீரில் மடிவது என்ன ? உப்பு
8. ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடிவரும் பந்து அல்ல அது என்ன? கடல்
9. காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை நான் யார்? நிழல்
10. இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன? சைக்கிள்

விடுகதைகள் – Vidukathai in Tamil – Part 3

1. சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன? கண்
2. ஓடெடுப்பான் பிச்சை ஒரு நாளும் கண்டறியான் காடுறைவான் தீர்த்தக் கரைசேர்வான்- தேட நடக்குங்கால் நாலுண்டு நல்தலை ஒன்றுண்டு! படுக்கும்போது அவையில்லை பார்! அது என்ன?. ஆமை
3. வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்? முட்டை
4. எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ? அடுப்புக்கரி
5. உங்களுக்கு சொந்தமானத ஒன்று ஆனால் உங்களை விட மற்றவர்களே அதிகம் உபயோகிப்பார்கள்? பெயர்
6. யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன? கண் இமை
7. வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன? சிரிப்பு
8. வீட்டில் வளரும் என்னை திருடனுக்கு பிடிக்காது அது என்ன? நாய்
9. இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன? வாழை
10. வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன? சோளம்

விடுகதைகள் – Vidukathai in Tamil – Part 4

1. இவனும் ஒரு பேப்பர் தான்; ஆனால், மதிப்போடு இருப்பான். அது என்ன? பணம்
2. டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு. கொசு
3. கன்று நிற்க கயிறு மேயுது அது என்ன? பூசனிக்கொடி
4. எப்போதும் மழையில் நனைவான் ஆனால் ஜுரம் வராது. எப்போதும் வெயிலில் காய்வான் ஆனால் ஏதும் ஆகாது. அவன் யார்? குடை
5. தொடாமல் அழுவான், தொட்டால் பேசுவான். அவன் யார்? தொலைபேசி
6. பெட்டியைத் திறந்தால் பூட்ட முடியாது. அது என்ன? தேங்காய்
7. தன் மேனி முழுவதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்? மீன் வலை
8. படபடக்கும்,பளபளக்கும் மனதுக்குள் இடம் பிடிக்கும் அது என்ன? பட்டாசு
9. உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன? பாய்
10. மாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன? சிலந்தி வலை


No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !