1. வகை வகையாய் தெரியும் வண்ணப்படம், கண்மூடிக் காணும் காட்சிப்படம் – அது என்ன?
6. கையளவு உடம்புக்காரன், காவலுக்கு கெட்டிக்காரன் – அவன் யார்?
11. மேலே பூ பூக்கும், கீழே காய் காய்க்கும் – அது என்ன?
16. ஆளுக்கு துணை வருவான் ஆனால் அவன் பேச மாட்டான் – அவன் யார்?
21. கீறினால் சோறுதரும், நீர் ஊற்றினால் சேறு வரும் – அது என்ன?
26. எண்ணத்தை விதைத்து, வண்ணமாய் அறுவடை செய்வது – அது என்ன?
31. கண்ணே இல்லாதவன், கண் இழந்தோருக்கு வழிகாட்டுவான் – அவன் யார்?
35. அடித்தாலும், உதைத்தாலும் அவன் அழ மாட்டான் – அவன் யார்?
36. நனைந்தாலும் நடுங்கமாட்டான் – அவன் யார்?
41. ஒற்றைக்கால் பந்தலில் ஊரெல்லாம் தங்கலாம் - அது என்ன?
46. நம்மைப்போல் இருக்கும், நாம் இறந்தாலும் இறக்காது - அது என்ன?
51. நோயின்றி நாளும் மெலிவாள், கோள் சொல்லி நாளும் கழிவாள் - அவள் யார்?
56. அக்கா தங்கை உறவுண்டு, அருகருகே வீடு உண்டு. கிட்டக்கிட்ட வந்தாலும் தொட்டுக் கொள்ள மாட்டார்கள் - அவர்கள் யார்?
61. பந்தலைச் சுற்றி பாம்பு தொங்குது - அது என்ன?
66. பூட்டு இல்லாத பெட்டியை திறக்கலாம், ஆனால் மீண்டும் பூட்ட முடியாது - அது என்ன?
71. காலையில் உறவாடி வருவான், மாலையில் பறந்தோடிப் போவான் - அவன் யார்?
76. தங்கை தீட்டிய ஓவியம் தரையில் தவழ்கிறது - அது என்ன?
81. உறையில் உறங்குவான், உயிரைப் பறிப்பான் - அது என்ன?
86. அடித்தால் வலிக்கும் கடித்தால் இனிக்கும் - அது என்ன?
91. தொப்பை பயனுக்கு ஒரு வாசல் தோழனுக்கு இரண்டு வாசல் - அது என்ன?
96. உமிபோல் பூ பூக்கும் சிமிழ்போல் காய் காய்க்கும் - அது என்ன?
101. மண்மீது குடையாவான், மழைக்கு துணையாவான் - அவன் யார்?
106. மூன்று கொண்டை வைத்திருப்பாள் ஆனால் பெண் அல்ல - அது என்ன?
111. உடைக்க முடியாத ஓட்டிற்குள் ஒளிந்திருப்பான் கள்ளன் - அவன் யார்?
116. போதையின்றி தள்ளாடினாலும், புறப்படும் ஊர் போய் சேருவான் - அது என்ன?
121. பெட்டியை உடைத்தால் முத்துக்கள் - அது என்ன?
126. சரியென்றாலும் அழிப்பான், தவறென்றாலும் அழிப்பான் - அவன் யார்?
-[டெலிபோன்]
128. ஆட்டிவிட்டால் ஆடுவான், ஆட்டாவிட்டால் தொங்குவான் - அவன் யார்?
131. விருந்துக்கு அழைத்து விதியை முடிப்பவன் - அவன் யார்?
136. நன்றி மறக்காத பிள்ளை, நம்ம வீட்டு செல்லப் பிளிளை - அது யார்?
141. பறக்கும் வண்ணப்பட்டு, வாடுமம்மா மற்றவர்கள் கைபட்டு - அது என்ன?
146. உச்சியில் தோகை, உள்ளங்காலில் ரோமம், உடலெல்லாம் வரிகள் - அது என்ன?
151. அந்தரத்து தொட்டிலில் ஆடுவார்கள், கூடுவார்கள் - அவர்கள் யார்?
156. ஆனந்தத்திற்கும், துக்கத்திற்கும் மட்டுமே தண்ணீர் பொங்கும் குளம் - அது என்ன குளம்?
161. கால் இல்லாத பந்தலை, காணக்காண வினோதம் - அது என்ன?
166. கோணல் எத்தனை இருந்தாலும் குணமும், ருசியும் மாறாமு - அது என்ன?
171. சிறுதூசி விழுந்ந்தும், குளமே கலங்கியது - அது என்ன?
176. ஒற்றைக் காது உள்ளவனுக்கு ஒருபோதும் கேட்காது - அது என்ன?
181. கடல் நீரால் வளர்வான், மழை நீரால் மடிவான் - அவன் யார்?
186. குப்பை மேட்டில் குதறுவாள், கொஞ்சிப்பேணி பிள்ளை வளர்ப்பாள் - அவள் யார்?
191. ஒளியில் நம்கூடவே இருப்பான், இருளில் மறைந்து கொள்வான் - அவன் யார்?
196. தாயோ கடல், தந்தையோ சூரியன் - அவன் யார்?
201. பகலில் தங்கத் தட்டு, இரவில் வெள்ளித் தட்டு - அது என்ன?
206. கடல் இருக்கும் தண்ணீர் இருக்காது, நாடு இருக்கும் வீடு இருக்காது - அது என்ன?
211. காண்பவரை ஏமாற்றும் நீர், தாகம் தீர்க்காத நீர் - அது என்ன?
216. பத்து பேர் சேர்ந்தால் பஞ்சம் போக்குவார்கள் - அவர்கள் யார்?
221. கல்லை சுமந்து, கறிக்கு ருசியாவான் - அவன் யார்?
226. மேகத்தின் பிள்ளை, தாகத்தின் நண்பன் - அவன் யார்?
231. காலத்துக்கும் எரிவேன், கடலைக்கூட வற்ற வைப்பேன் - நான் யார்?
236. அலங்கார ஆடை உருவாக அவர்கள் இருவர் துணை வேண்டும் - யார் அவர்கள்?
241. எண்ணெய் குடித்துவிட்டு ஏழு கடல் தாண்டுவான் - அவன் யார்?
246. குளிர் இல்லாவிட்டாலும் குளிர் காய்வார் - அது யார்?
251. வாய் திறக்காமல் தகவல் சொல்வான் - அவன் யார்?
256. அந்தி வரும் நேரம், அவளும் வரும் நேரம் - அவள் யார்?
261. சட்டையை கழற்றினால், சாப்பாடு தயார் - அது என்ன?
266. குங்கும நிறத்தில் பூ பூக்கும், கொள்ளுக்காய் போல் காய்காய்க்கும் - அது என்ன?
271. விஷம் கொண்டவனை, பாலூற்றி தொழுவர் - அது என்ன?
276. என்னில் உன்னைக் காணலாம் - நான் யார்?
281. எத்தனை தரம் சுற்றினாலும், அவனுக்கு தலை சுற்றாது - அவன் யார்?
286. பழம் காயாகி பந்தியிலே விருந்தாகும் - அது என்ன?
291. கருப்பையில் சில மாதம், வெளிப்பையில் சில வருடம் பிள்ளை சுமப்பான் - அவன் யார்?
296. பகலில் தூங்கி இரவில் விழிப்பான் - அவன் யார்?
301. காவல் காக்கும், ஆனால் நாயல்ல. காலை கடிக்கும், ஆனால் செருப்பல்ல - அது என்ன?
306. ஒலிப்பான், ஒலியை நிறுத்தினால் தகவல் கொடுப்பான் - அது என்ன?
- [கனவு]
2. மென்மையான உடம்புக்காரன், பாரம் சுமக்கும் கெட்டிக்காரன் - அது என்ன?
- [நத்தை]
3. மூன்றுகால் குள்ள அக்கா, பாரம் தாங்கி, நெருப்பை சுமந்து சோறு சமைப்பாள் – அவள் யார்?
- [அடுப்பு]
4. பட்டனைத் தட்டினால் சட்டென விரியும் - அது என்ன?
- [குடை]
5. நீரிலும், நிலத்திலும் வாழ்வான், பாறைக்குள்ளும் பதுங்கி வாழ்வான் – அவன் யார்?
- [தவளை]
6. கையளவு உடம்புக்காரன், காவலுக்கு கெட்டிக்காரன் – அவன் யார்?
- [பூட்டு]
7. மேகத்தின் பிள்ளை அது, தாகத்தின் நண்பன் – அது என்ன?
- [மழை]
8. முற்றத்தில் நடக்கும் மூலையில் படுப்பான் – அவன் யார்?
- [துடைப்பம்]
9. முன்னும் பின்னும் போவான், ஒற்றைக்காலிலே நிற்பான் – யார் அவன்?
– [கதவு]
10. மேல் பலகை, கீழ் பலகை நடுவில் நெளி பாம்பு – அது என்ன?
- [நாக்கு]
11. மேலே பூ பூக்கும், கீழே காய் காய்க்கும் – அது என்ன?
- [வேர்க்கடலை]
12. இருட்டில் கண் சிமிட்டும் ஆனால் நட்சத்திரமல்ல – அது என்ன?
- [மின்மினிப் பூச்சி]
13. ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலைக்கனம் அதிகம் – அவன் யார்?
- [பம்பரம்]
14. வெளுத்த அழகி மஞ்சள் புடவை கட்டியிருக்கிறாள் – அவள் யார்?
- [வாழைப்பழம்]
15. ஒட்டியிருக்கிறார்கள் எதிராளிகள், அவர்கள் ஒன்று சேர்ந்தால் மற்றவர்களை பிரிக்கிறார்கள் – அது என்ன?
- [த்தரிக்கோல்]
16. ஆளுக்கு துணை வருவான் ஆனால் அவன் பேச மாட்டான் – அவன் யார்?
- [நிழல்]
17. உணவை கையில் எடுப்பான் ஆனால் உண்ண மாட்டான் – அவன் யார்?
- [அகப்பை]
18. அரங்கினில் ஆடாதவள், கிளைகளில் அரங்கேற்றம் நடத்துவாள் – அவள் யார்?
- [தென்றல்]
19. தொடப் பார்த்தேன் எட்டிச் சென்றது, பறந்து பார்த்தேன் விரிந்து சென்றது – அது என்ன?
- [வானம்]
20. உலக உயிர்களுக்கெல்லாம் ஒரே உற்சாக பானம் – அது என்ன?
- [தண்ணீர்]
21. கீறினால் சோறுதரும், நீர் ஊற்றினால் சேறு வரும் – அது என்ன?
- [நிலம்]
22. விரிந்த வயல் வெளியில் வதைத்த நெல் மணிகள் – அது என்ன?
- [நட்சத்திரம்]
23. மூலையில் முடங்கிக் கிடப்பான், மூலைமுடுக்கெல்லாம் சுத்தம் செய்வான் –அவன் யார்?
- [துடைப்பம்]
24. இனிப்புப் பொட்டலத்துக்கு இரண்டாயிரம் பேர் காவல் – அது என்ன?
- [தேன்கூடு]
25. கையில்லாமல் நீந்தி, கடல் கடப்பான் – அவன் யார்?
- [கப்பல்]
26. எண்ணத்தை விதைத்து, வண்ணமாய் அறுவடை செய்வது – அது என்ன?
- [ஓவியம்]
27. அவனுக்கு காவலுக்கு ஒரு வீடு, வாழ்வதற்கு ஒரு வீடு – அவன் யார்?
- [ஆமை]
28. ஆரவாரம் இல்லாமல் அணிவகுப்பு, ஓயாது அவர்கள் உழைப்பு – யார் அவர்கள்?
- [எறும்புக் கூட்டம்]
29. கோழிபோல் உருவம், குதிரைபோல் ஓட்டம் – அது என்ன?
- [நெருப்புக் கோழி]
30. உயரப் பறக்கும், ஆனால் ஊரைச் சுற்றிக் கொண்டு பறக்காது – அது என்ன?
- [கொடி]
31. கண்ணே இல்லாதவன், கண் இழந்தோருக்கு வழிகாட்டுவான் – அவன் யார்?
- [கைத்தடி]
32. உதை வாங்கி, உதை வாங்கி ஊருக்கு சேதி சொல்வான் – அவன் யார்?
- [தண்டோரா]
33. கருப்பன் தண்ணீரில் குளித்து வெள்ளையனாவான், வெள்ளையன் பிறகு விருந்தாவான் – அவன் யார்?
- [உளுத்தம் பருப்பு]
34. உருவம் இல்லாத ஒருவன், உலகெங்கும் உலவித் திரிவான் – அவன் யார்?
- [காற்று]
35. அடித்தாலும், உதைத்தாலும் அவன் அழ மாட்டான் – அவன் யார்?
- [பந்து]
36. நனைந்தாலும் நடுங்கமாட்டான் – அவன் யார்?
- [குடை]
37. அனலில் பிறப்பான், ஆகாயத்தில் பறப்பான் – அவன் யார்?
- [புகை]
38. வயிற்றில் விரல் சுமப்பான், தலையில் கல் சுமப்பான் – அவன் யார்?
- [மோதிரம்]
39. எட்டுக்கால் ஊன்றி இடமும், வலமுமாக வருவான் – அவன் யார்?
- [நண்டு]
40. ஓடையில் நிற்கும் ஒற்றைக்காலனுக்கு ஒரே குறி உணவு – அவன் யார்?
- [கொக்கு]
41. ஒற்றைக்கால் பந்தலில் ஊரெல்லாம் தங்கலாம் - அது என்ன?
- [ஆலமரம்]
42. முரட்டு மனிதனுக்கு முப்பத்திரண்டு பேர் காவல் - அது என்ன?
- [நாக்கு]
43. நடந்தால் நடக்கும், நின்றால் நிற்கும் - அது என்ன?
- [நிழல்]
44. உயிரற்ற பறவை, ஊர் ஊராய் பறக்கும் - அது என்ன?
- [விமானம்]
45. விறகெரியத் துணையாகும், விளக்கெரியப் பகையாகும் - அது என்ன?
- [காற்று]
46. நம்மைப்போல் இருக்கும், நாம் இறந்தாலும் இறக்காது - அது என்ன?
- [புகைப்படம்]
47. தலையில் வைக்க முடியாத பூ, சமையலுக்கு உதவும் பூ - அது என்ன?
- [வாழைப்பூ]
48. தோகைபோல உடம்புக் காரி, துப்புரவு தொழிலுக்கு கெட்டிக்காரி - அவள் யார்?
- [துடைப்பம்]
49. ஆயிரம் அறைகள் அரண்மனையில், ராணியின் ஆட்சி - அது என்ன?
- [தேன்கூடு]
50. நூல் நூற்கும் ராட்டை அல்ல, வலை பின்னும் மீன் பிடிக்க அல்ல - அது என்ன?
- [சிலந்திப் பூச்சி]
51. நோயின்றி நாளும் மெலிவாள், கோள் சொல்லி நாளும் கழிவாள் - அவள் யார்?
- [நாட்காட்டியின் தாள்]
52. மழைக்காலம் வந்தாலே மகராசி சங்கீதம் தான் - அவள் யார்?
- [தவளை]
53. அரைசாண் மனிதனுக்கு வயிறு நிறைய முட்டை - அவன் யார்?
- [வெண்டைக்காய்]
54. சிவப்பு பைக்குள் சில்லறைகள் - அது என்ன?
- [மிளகாய்]
55. உலகமெங்கும் சுற்றும் அவனை ஒருவரும் கண்டதில்லை - அவன் யார்?
- [காற்று]
56. அக்கா தங்கை உறவுண்டு, அருகருகே வீடு உண்டு. கிட்டக்கிட்ட வந்தாலும் தொட்டுக் கொள்ள மாட்டார்கள் - அவர்கள் யார்?
- [கண்கள்]
57. வந்தால் கொடுக்கும், வராவிட்டால் கெடுக்கும் - அது என்ன?
-[மழை]
58. வயிறு முட்ட சாப்பிட்டால்தான் நிமிர்ந்து நிற்பான் - அவன் யார்?
- [பலூன்]
59. உழைக்க உழைக்க உடலெல்லாம் தோன்றும் - அது என்ன?
- [வியர்வை]
60. வாலிலே எண்ணெய், தலையிலே கொள்ளி - அது என்ன?
- [விளக்குத் திரி]
61. பந்தலைச் சுற்றி பாம்பு தொங்குது - அது என்ன?
- [புடலங்காய்]
62. ஊளையிட்டுக் கொண்டே ஊரைச் சுமக்கும் - அது என்ன?
- [புகைவண்டி]
63. கடல் நீரில் மறைந்திருக்கும் கல் - அது என்ன கல்?
- [உப்புக்கல்]
64. நிறைவேறாத ஆசைகளை நித்திரையில் பெறலாம் - அது என்ன?
- [கனவு]
65. கையால் இழுத்தால் அசையும் நாக்கு, கணீரென்று அனைவரையும் அழைக்கும் - அது என்ன?
- [மணியோசை]
66. பூட்டு இல்லாத பெட்டியை திறக்கலாம், ஆனால் மீண்டும் பூட்ட முடியாது - அது என்ன?
- [தேங்காய்]
67. தேவை என்றால் வீசுவார்கள், தேலையில்லை என்றால் எடுத்து வைப்பார்கள் - அது என்ன?
- [நங்கூரம்]
68. ஒட்டி பிறந்த சகோதரர்கள் சேர்ந்தால் மற்றவர்களை பிரிக்கவே சேருவார்கள் - அது என்ன?
- [கத்தரிக்கோல்]
69. எட்டித் தொட நினைத்தேன், இடறி விழுந்தேன், குதித்து தொட நினைத்தேன் குட்டிக் கரணம் போட்டேன் - அது என்ன?
- [வானம்]
70. பழகினால் மறக்காதவன், பயம் அறியாதவன் - அவன் யார்?
- [நாய்]
71. காலையில் உறவாடி வருவான், மாலையில் பறந்தோடிப் போவான் - அவன் யார்?
- [சூரியன்]
72. நித்திரையின் தூதுவன், நினையாமல் வருவான் - அவன் யார்?
- [கொட்டாவி]
73. உடல் இல்லாதவன் ஊரெல்லாம் பவனி வருவான் - அவன் யார்?
- [காற்று]
74. வெளியே வெள்ளி, உள்ளே தங்கம் - அது என்ன?
- [முட்டை]
75. பகலில் எரியா விளக்கு, இரவில் அணையா விளக்கு - அது என்ன?
- [நிலா]
76. தங்கை தீட்டிய ஓவியம் தரையில் தவழ்கிறது - அது என்ன?
- [கோலம்]
77. அனைவரையும் ஆட்டிப் படைக்கும், ஆதவன் வந்தால் ஓடிப்போகும் - அது என்ன?
- [குளிர்]
78. வாணலியில் விரியும் வட்ட வட்ட இலை - அது என்ன?
- [அப்பளம்]
79. உச்சியின் ஊடே சிக்கல் தீர்ப்பான், சிக்கிக் கொண்டால் பல்லை இழப்பான் - அவன் யார்?
- [சீப்பு]
80. கொடுக்கு இரண்டு இருந்தாலும், அவனுக்கு வாலில்தான் விஷம் - அவன் யார்?
- [தேள்]
81. உறையில் உறங்குவான், உயிரைப் பறிப்பான் - அது என்ன?
- [வாள்]
82. ஆயிரம்பேர் அணி வகுத்தாலும் ஒரு தூசி கிளம்பாது - அவர்கள் யார்?
- [எறும்புக்கூட்டம்]
83. எரித்தால் சிவப்பு அணைந்தால் கறுப்பு - அது என்ன?
- [கரித்துண்டு]
84. கரித்துண்டு நான், கடினத்திற்கு நான், காண்போரைக் கவருவேன் - நான் யார்?
- [வைரம்]
85. இரண்டு பெண்கள், இரட்டைப் பிறவிகள் ஒருத்தி கீழே வந்தால் ஒருத்தி மேலே போவாள் - அவர்கள் யார்?
- [தராசுத் தட்டுகள்]
86. அடித்தால் வலிக்கும் கடித்தால் இனிக்கும் - அது என்ன?
- [கரும்பு]
87. பாறைமேல் இட்டவிதை பார்ப்பவர் வியக்க முளைத்த விதை - அந்த விதை?
- [பல்]
88. மண்ணிலே பிறந்து விண்ணிலே மறையுது - அது என்ன?
- [நிலா]
89. நீரிலே கொண்டாட்டம், நிலத்திலே திண்டாட்டம் - அது என்ன?
- [மீன்]
90. நிலத்திலே முறைக்காத செடி நிமிர்ந்மு நிற்காத செடி - அது என்ன?
- [தலைமுடி]
91. தொப்பை பயனுக்கு ஒரு வாசல் தோழனுக்கு இரண்டு வாசல் - அது என்ன?
- [சட்டை]
92. தச்சர் கொத்தனார் செய்யாத தேர் தானே கிளம்பும் சித்திர தேர் - அது என்ன?
- [புற்று]
93. சிவப்பு மொசைக் கொட்டை பகட்டும் பட்டு சட்டை அந்த சட்டை - அது என்ன?
- [பட்டுப்பூச்சி]
94. உணவை எடுப்பான், எல்லோருக்கும் கொடுப்பான், ஆனால் தான் மட்டும் உண்ணமாட்டான் - அவன் யார்?
- [அகப்பை]
95. உதைக்க தெரிந்தவனுக்கு நன்கு உழைக்கவும் தெரியும் - அவன் யார்?
- [கழுதை]
96. உமிபோல் பூ பூக்கும் சிமிழ்போல் காய் காய்க்கும் - அது என்ன?
- [நெல்லிக்காய்]
97. உணவு கொடுத்தால் வளருவான், நீர் கொடுத்தால் மாண்டு போவான் - அவன் யார்?
- [நெருப்பு]
98. உறங்காமல் தவிப்பவன், ஊருக்குள் வந்தால் பலரை பலி வாங்குவான் - அவன் யார்?
- [சுனாமி]
99. உயிரில்லாதவன் தினமும் ஓயாமல் ஓடுகிறான் - அவன் யார்?
- [கடிகாரம்]
100. கடலில் பிறந்தவன், அவன் இல்லாத வீடே இல்லை - அவன் யார்?
- [உப்பு]
101. மண்மீது குடையாவான், மழைக்கு துணையாவான் - அவன் யார்?
- [மரம்]
102. ஊருக்கெல்லாம் ஒரே ஆடை - அது என்ன?
- [வானம்]
103. கையுண்டு தலை இல்லை, உடல் உண்டு உயிர் இல்லை - அவன் யார்?
- [சட்டைத்துணி]
104. அள்ள முடியும், கிள்ள முடியாது - அது எது?
- [தண்ணீர்]
105. ஒற்றை முத்துக்கு ஒரு பெட்டி, இரட்டை முத்துக்கும் ஒரே பெட்டி - அது என்ன?
- [வேர்க்கடலை]
106. மூன்று கொண்டை வைத்திருப்பாள் ஆனால் பெண் அல்ல - அது என்ன?
- [அடுப்பு விளிம்புகள்]
107. ஊரையே சுற்றுவான் ஆனால் வீட்டிற்குள் வரமாட்டான் - அவன் யார்?
- [செருப்பு]
108. பத்து திங்கள் இருட்டறையில் இருந்தவன், விடுதலையானதும் அழுகிறான் - அவன் யார்?
- [பிறக்கும் குழந்தை]
109. தேவைப்படும்போது பையை நிரப்பலாம், ஆனால் தேவைக்கு மேலே பையை நிரப்ப முடியாது - அது என்ன?
- [வயிறு]
110. இரவிலே எழும் தீபம், பகலில் பார்க்க முடியாது - அது என்ன?
- [நிலவு]
111. உடைக்க முடியாத ஓட்டிற்குள் ஒளிந்திருப்பான் கள்ளன் - அவன் யார்?
- [ஆமை]
112. ஒருநாள் முழுமுகம் காட்டுவான், ஒருநாள் முகமே காட்ட மாட்டான் -அவன் யார்?
- [நிலவு]
113. வீடு கட்டத் தேவை சாரம். வீட்டு ஒளிக்குத் தேவை இன்னொரு சாரம் - அது என்ன சாரம்?
- [மின்சாரம்]
114. உடல் முழுதும் நூறுகட்டு, உச்சி முடிக்கு கட்டே இல்லை - அது என்ன?
- [தென்னை மரம்]
115. நீரில் மிதக்கும் பூ, இரவில் பூக்கும், பகலில் உறங்கும் - அது என்ன பூ?
- [அல்லிப்பூ]
116. போதையின்றி தள்ளாடினாலும், புறப்படும் ஊர் போய் சேருவான் - அது என்ன?
- [கப்பல்]
117. ஒரே நேரத்தில் மூடித் திறக்கும் கதவுகள், ஓராயிரம் முறை இயங்கினாலும் ஓசை வராத கதவுகள் - அது என்ன?
- [இமைகள்]
118. ஆயிரம்பேர் திரண்டாலும், அணு அளவு கூட தூசி கிளம்பாது - அது என்ன?
- [எறும்புக்கூட்டம்]
119. குளிருக்கு கல்லாவான், அனலுக்கு தண்ணீராவான் - அது என்ன?
- [பனிக்கட்டி]
120. கிட்ட இருக்கும் பட்டணம் எட்டி பார்க்க முடியாது - அது என்ன?
- [நமது முதுகு]
121. பெட்டியை உடைத்தால் முத்துக்கள் - அது என்ன?
- [மாதுளம் பழம்]
122. காற்றிலே பறந்து போகும் கண்ணாடிக் கூண்டு, கைபட்டால் உடைந்து போகும் கண்ணாடிக் கூண்டு - அது என்ன?
- [சோப்புக் குமிழ்]
123. பள்ளிக்குப் போனாலும் பாடம் படிக்க மாட்டான், ஆனால் சரியாக கண்ணக்குச் சொல்வான் - அவன் யார்?
- [கால்குலேட்டர்]
124. குடையுடன் சந்தைக்கு வருபவரை, குழம்புக்காக எல்லோரும் விரும்புவார்கள் - அது என்ன?
-[கத்தரிக்காய்]
125. மழை நேரத்தில் வெட்ட வெளியில் மின்னும் விளக்கு - அது என்ன?
- [மின்னல்]
126. சரியென்றாலும் அழிப்பான், தவறென்றாலும் அழிப்பான் - அவன் யார்?
-[ரப்பர்]
127. ஒலி கொடுத்து அழைப்பான், உரையாடலில் திளைப்பான் - அவன் யார்?
- [ஊஞ்சல்]
129. மண்ணெடித்து கூடு கட்டும், மரம் அரித்து உயிர் வாழும் - அது என்ன?
- [கரையான்]
130. சிதறிக் கிடக்குது புள்ளிகள் சித்திரம் வரைய ஆளில்லை - யார் அது?
-[நட்சத்திரக்கூட்டம்]
131. விருந்துக்கு அழைத்து விதியை முடிப்பவன் - அவன் யார்?
- [எலிப்பொறி]
132. குதி குதித்தான் பல் இளித்தான் - அவன் யார்?
- [சோளப்பொறி]
133. அம்பும் நாணும் இல்லாத வில், ஆகாயத்தில் தோன்றும் வில் - அது என்ன வில்?
- [வானவில்]
134. காற்றில் பறக்கும் ஆடையை, கழற்றி எறிந்தவன் புற்றுக்குள்ளே - அது என்ன?
[பாம்பு]
135. வானம் இருண்டால் வடிவழகி ஆடுவாள் - அவள் யார்?
- [மயில்]
136. நன்றி மறக்காத பிள்ளை, நம்ம வீட்டு செல்லப் பிளிளை - அது யார்?
- [நாய்]
137. இரட்டைக் குழல் துப்பாக்கியில் காற்று வரும் போகும் - அது என்ன?
- [மூக்கு]
138. வெட்கையிலே மலரும் பூ, வெகுபேர் பசி போக்கும் - அது என்ன?
- [சோறு]
139. தாய் சின்னக்கொடி, பிள்ளைகள் பெரியவர்கள் - இது என்ன?
- [பூசனிக்காய்]
140. சோறுபோல பொங்க வைத்து, சுவரெல்லாம் பூசுவார்கள் - அது என்ன?
- [சுண்ணாம்பு]
141. பறக்கும் வண்ணப்பட்டு, வாடுமம்மா மற்றவர்கள் கைபட்டு - அது என்ன?
- [பட்டாம் பூச்சி]
142. காற்றிலே பறக்குது கண்ணாடுக்கூண்டு, கையால் தொட்டால் காணாமல் போகுது - அது என்ன?
- [சோப்புக் குமிழ்]
143. ஒன்றாய் பிறந்து ஒரே வேலையை செய்யும் இரட்டையர்கள் - அவர்கள் யார்?
- [கண் பார்வை]
144. இரவல் கிடைக்காதது, இரவில் கிடைக்கும் - அது என்ன?
- [தூக்கம்]
145. இரவிலே பிறந்த ராஜகுமாரனுக்கு தலையிலே குடை - அது என்ன?
- [காளான்]
146. உச்சியில் தோகை, உள்ளங்காலில் ரோமம், உடலெல்லாம் வரிகள் - அது என்ன?
- [கரும்பு]
147. மொட்டைப் பாறையில் மூடிய கண்கள் மூன்று - அது என்ன?
- [தேங்காய்]
148. வெளிச்சத்தில் தொடருவான், இருட்டிற்கள் தொடரமாட்டான் - அவன் யார்?
- [நிழல்]
149. அள்ளக் குறையாது, குடிக்க உதவாது - அது என்ன?
- [கடல் நீர்]
150. அவன் கழற்றிய சட்டையை அடுத்தவன் போட முடியாது - அது என்ன?
- [பாம்பு]
151. அந்தரத்து தொட்டிலில் ஆடுவார்கள், கூடுவார்கள் - அவர்கள் யார்?
-[தூக்கணாங் குருவிகள்]
152. அண்ணன் சுட்டெரிப்பான், தம்பி குளிர வைப்பான் - அவர்கள் யார்?
- [சூரியன், சந்திரன்]
153. அவ்வப்போது நிரப்பலாம், மொத்தமாக நிரப்ப முடியாது - அது என்ன?
- [வயிறு]
154. அவன் அன்னநடை நடந்தாலும் சும்மா அதிரும் - அவன் யார்?
- [யானை]
155. அண்ணன் தம்பி அஞ்சு பேரு, அதில சின்னவன் இல்லாம பெரியவங்களால எதுவும் செய்ய முடியாது - யார் அவர்கள்?
- [நமது கை விரல்கள்]
156. ஆனந்தத்திற்கும், துக்கத்திற்கும் மட்டுமே தண்ணீர் பொங்கும் குளம் - அது என்ன குளம்?
- [கண்கள்-கண்ணீர்]
157. காலையும் மாலேயும் உயர்ந்தவன், மதிய வேளையில் குட்டையாவான், இரவில் எங்கேதான் போவானோ - அவன் யார்?
- [நமது நிழல்]
158. மூணு கண்ணுப் பானையிலே ஒரு மடக்குத் தண்ணீர் - அது என்ன?
- [தேங்காய்த் தண்ணீர்]
159. கடலில் தோன்றி, கடலில் மறையும் - அது என்ன?
- [அலைகள்]
160. ஆளில்லாத வீட்டில் அவன் குடுயேறுவான் - அவன் யார்?
- [சிலந்திகள்]
161. கால் இல்லாத பந்தலை, காணக்காண வினோதம் - அது என்ன?
- [வானம்]
162. கையில் தவழும், பையில உறங்கும் - அது என்ன?
- [பணம்]
163. குடிக்கத் தண்ணீர் உண்டு, குளிக்கத் தண்ணீர் இல்லை - அது என்ன?
- [இளநீர்]
164. திறந்து திறந்து மூடினாலும், ஓசை சிறிதும் பேட்காது - அது என்ன?
- [இமைகள்]
165. வெள்ளைச் சீமாட்டியின் தலை மேல் விளக்கு - அது என்ன?
- [மெழுகுவர்த்தி]
166. கோணல் எத்தனை இருந்தாலும் குணமும், ருசியும் மாறாமு - அது என்ன?
- [கரும்பு]
167. உடலுக்குள் உருவாகும் உருவமில்லா கல், அதிர்ச்சியில் மறையும் கல் - அது என்ன கல்?
- [விக்கல்]
168. கண் சிமிட்டி கண்டதையெல்லாம் பெட்டிக்குள் போட்டுக் கொள்வான் - அவன் யார்?
- [கேமிரா]
169. கல்லில் நீரூற்ற, கனன்று உருவாகும் பூ - அது என்ன பூ?
- [சுண்ணாம்பு]
170. கமண்டலம் இல்லாமல் தவமிருப்பான், தூண்டில் இல்லாமல் மீன் பிடிப்பான் - அவன் யார்?
- [கொக்கு]
171. சிறுதூசி விழுந்ந்தும், குளமே கலங்கியது - அது என்ன?
- [கண்கள்]
172. அரைசாண் ராணிக்குள்ளே ஆயிரம் முத்துக்கள் - அது என்ன?
- [வெண்டைக்காய்]
173. நிழலுக்கு ஒதுங்கலாம், மழைக்கு ஒதுங்க முடியாது - அது என்ன?
- [மரம்]
174. பால் கொடுத்துப் பழகினாலும், என்றும் பகையாளியாக இருப்பான் - அவன் யார்?
- [பாம்பு]
175. நாலு கால் இருந்தும் அவன் நடப்பதில்லை, இருக்கையிலே தான் அவன் வாழ்வு - அது யார்?
- [நாற்காலி]
176. ஒற்றைக் காது உள்ளவனுக்கு ஒருபோதும் கேட்காது - அது என்ன?
- [ஊசி]
177. வீடுகட்ட உதவாத கல், சமையலுக்கு உதவும் கல் - அது என்ன கல்?
- [உப்புக்கல்]
178. தலைகீழாய் தொங்குவான், தலையசைத்தால் தென்றல் தருவான் - அவன் யார்?
- [மின் விசிறி]
179. அன்பால் மலரும் பூ, அனைவரும் விரும்பும் பூ, மனிதன் உதட்டில் மலரும் பூ - அது என்ன பூ?
- [சிரிப்பு]
180.கல்லாலும் மண்ணாலும் கட்டாத வீடு, கதவு இல்லாத வீடு காற்றினிலே ஆடும் வீடு - அது என்ன?
- [தூக்கணாங் குருவிக் கூடு]
181. கடல் நீரால் வளர்வான், மழை நீரால் மடிவான் - அவன் யார்?
- [உப்பு]
182. திரி இல்லாத விளக்கு, திரிலோகம் எல்லாம் தெரியுதாம் - அது என்ன?
- [சூரியன்]
183. நான்கு காலில் பின்னிய வலையில் நாமெல்லாம் தூங்கலாம் - அது என்ன?
- [நார்க்கட்டில்]
184. பறக்கும் ஆனால், பறந்து போகாது - அது என்ன?
- [கொடி]
185. அரிசி மாவில் வரையாத அழகு கோலம், அங்கமெல்லாம் அழகாக்கும் - அது என்ன?
- [பச்சை குத்துதல்]
186. குப்பை மேட்டில் குதறுவாள், கொஞ்சிப்பேணி பிள்ளை வளர்ப்பாள் - அவள் யார்?
- [கோழி]
187. பச்சை, கருப்பு, வெள்ளை மூன்றும் பக்குவமானால் சிவப்பு - அது என்ன?
- [வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு]
188. பசுமை பாய் விரித்த சோலை, பசிபோக்கும் சோலை - அது என்ன?
- [நெல் வயல்]
189. அக்காள் வீட்டில் விளக்கு ஏற்றினால், தங்கை வீட்டில் தானே எரியும் எரியும் - அது என்ன?
-[கொடியடுப்பு(இணைந்த அடுப்பு)]
190. பகலில் அக்கினித் தட்டு, இரவில் குளிர்தட்டு - அது என்ன?
- [சூரியன், சந்திரன்]
191. ஒளியில் நம்கூடவே இருப்பான், இருளில் மறைந்து கொள்வான் - அவன் யார்?
- [நிழல்]
192. அவன் பற்களை அழுத்தினால் பல பேர் ரசிக்கும் இசை ஒலிக்கும் - அவன் யார்?
- [ஹார்மோனியப் பெட்டி]
193. பகலில் இருபுறம் நின்று காவல் காப்பான், இரவில் நடுவிலே நின்று காவல் காப்பான் - அவன் யார்?
- [இரட்டை கதவு]
194. பச்சைப் பெட்டியில் பத்துச்சரம் முத்துகள் - அது என்ன?
-[வெண்டைக்காய்]
195. பட்ட மரம் இசை எழுப்ப படைகள் திரண்டு வரும் - அது என்ன?
- [முரசு]
196. தாயோ கடல், தந்தையோ சூரியன் - அவன் யார்?
- [உப்பு]
197. தங்கை விளக்கு காட்ட, அண்ணன் மத்தளம் கொட்ட, அம்மா தண்ணீர் தெளிக்கிறாள் - அவர்கள் யார்?
- [மின்னல், இடி, மழை]
198. கூன் முதுகு கிழவனுக்கு குதிகால் வரை பற்கள் - அது என்ன?
-[கதிர் அரிவாள்]
199. கத்தியால் வெள்ளையனைச் சீவ கருப்பன் தலைகாட்டுவான் - அவன் யார்?
- [பென்சில்]
200. எட்டாத இடத்திலே ஏகப்பட்ட மின்மினிப் பூச்சிகள் - அவை என்ன?
- [நட்சத்திரம்]
201. பகலில் தங்கத் தட்டு, இரவில் வெள்ளித் தட்டு - அது என்ன?
- [சூரியன், சந்திரன்]
202. கை இல்லை, கால் இல்லை, காடு மேடு, மலை தாண்டி போகிறான், ஆனால் பறவையல்ல - அது யார்?
- [மேகம்]
203. வெளியில் இருப்பவனைத் தொட்டால், உள்ளிருப்பவன் அலறுவான் - அவன் யார்?
- [அழைப்பு மணி]
204. மண்ணுக்கடியில் விளையும் இரட்டை முத்துக்கள் - அது என்ன?
- [வேர்க்கடலை]
205. மரம் உண்டு கிளையில்லை, காய் துவர்க்கும், கனி இனிக்கும் - அது என்ன?
- [வாழை]
206. கடல் இருக்கும் தண்ணீர் இருக்காது, நாடு இருக்கும் வீடு இருக்காது - அது என்ன?
- [உலக வரைபடம்]
207. மழைக்கும் இடம் உண்டு, மன்னர் படைக்கும் இடம் உண்டு - அது என்ன?
- [மரத்தடி]
208. விஷம் கொண்டதை விரும்பியே தொழுவர் - அது என்ன?
- [பாம்பு]
209. இரண்டு கால் ஜீவன்களுக்கு இருக்க உதவுவான் மூன்று காலன் - அது என்ன?
- [முக்காலி]
210. ஒற்றைக் கண்ணன் பிரிந்தவர்களை ஓடி ஓடி இணைப்பான் - அவன் யார்?
- [ஊசி- நூல்]
211. காண்பவரை ஏமாற்றும் நீர், தாகம் தீர்க்காத நீர் - அது என்ன?
- [கானல் நீர்]
212. கையால் பறப்பார்கள், மூக்கால் தின்பார்கள் - அவர்கள் யார்?
- [பறவைகள்]
213. நீல நிறக் கடலிலே வெள்ளைத் தோணி மிதக்குது - அது என்ன?
- [நிலவு]
214. நீரிலே கொண்டாட்டம், நிலத்திலே திண்டாட்டம் - அது யாருக்கு?
- [மீனுக்கு]
215. வெளுத்த ஆளுக்கு, கருப்பு தலைப்பாகை - அது என்ன?
- [தீக்குச்சி]
216. பத்து பேர் சேர்ந்தால் பஞ்சம் போக்குவார்கள் - அவர்கள் யார்?
- [கைவிரல்கள்]
217. ஒரு வீட்டுக்கு இரண்டு வாசல் - அது என்ன?
- [மூக்கு]
218. இருட்டிற்கு அழைப்பார்கள், வெளிச்சம் வந்தால் அணைப்பார்கள் - அது என்ன?
- [விளக்கு]
219. சின்னக் கதவுகள், லட்சம் முறை மூடித்திறந்தாலும் ஓசை வராத கதவுகள் - அது என்ன?
- [கண் இமைகள்]
220. தாகம் தீர்க்கும் தண்ணீர் சொம்பு அந்தரத்தில் தொங்குது - அது என்ன?
- [இளநீர்]
221. கல்லை சுமந்து, கறிக்கு ருசியாவான் - அவன் யார்?
- [புடலங்காய்]
222. அடர்ந்த காட்டில் ஒத்தையடிப் பாதை - அது என்ன?
- [தலைவகிடு]
223. நித்தம் வரும் விருந்தாளி மாலையில் மறைந்து போவான் - அவன் யார்?
- [சூரியன்]
224. மரத்துக்கு மேலே பழம், பழத்துக்கு மேலே மரம் - அது என்ன?
- [அன்னாசிப் பழம்]
225. பகலிலே வெறுங்காடு, இரவெல்லாம் பூக்காடு - அது என்ன?
- [வானம்]
226. மேகத்தின் பிள்ளை, தாகத்தின் நண்பன் - அவன் யார்?
- [மழை]
227. ராத்திரி பிறந்த பையன் தலையில் குல்லாவுடன் பிறந்தான் - அவன் யார்?
- [காளான்]
228. குமுறி குமுறி அழுதிடும், நல்ல சோற்றை தந்திடும் - அது என்ன?
- [உலைநீர்]
229. அரை சாண் அரசனுக்கு, அரை சாண் கிரீடம் - அவன் யார்?
- [கத்தரி]
230. குண்டு ராஜாவுக்கு குடல் முழுக்க பல் - அது என்ன?
- [மாதுளை]
231. காலத்துக்கும் எரிவேன், கடலைக்கூட வற்ற வைப்பேன் - நான் யார்?
- [சூரியன்]
232. கொடி உடம்புக்காரிக்கு குண்டு குண்டாய் பிள்ளைகள் - அது என்ன?
- [பூசனிக்காய்]
233. ஓட்டைக் குச்சியில் ஒய்யார ராகம் இசைக்கலாம் - அது என்ன?
- [புல்லாங்குழல்]
234. மண்ணில் துளிர்த்து பூக்காமல், காய்க்காமல் மாலையாகும், மருந்தாகும் - அது என்ன?
- [புல்]
235. ஆயிரம் கண்ணுடையவன் அகப்பட்டதை விடமாட்டான் - அது என்ன?
- [சல்லடை அரிப்பு]
236. அலங்கார ஆடை உருவாக அவர்கள் இருவர் துணை வேண்டும் - யார் அவர்கள்?
- [ஊசி- நூல்]
237. ஆயிரம் அறை மண்டபத்திலே அத்தனையும் இனிப்பு - அது என்ன?
- [தேன் கூடு]
238. வெள்ளை, கருப்பு கருவுடன் கூடிய முட்டை - அது என்ன?
- [கண்]
239. ஊசி இலை கட்டுக்குள் ஊர்ந்து செல்லும் பன்றிகள் - அது என்ன?
- [பேன்கள்]
240. கடலுக்குள் விளையும் முத்து அல்ல, நிலத்துக்குள் விளையும் முத்து - அது என்ன?
- [வேர்க்கடலை]
241. எண்ணெய் குடித்துவிட்டு ஏழு கடல் தாண்டுவான் - அவன் யார்?
- [விமானம்]
242. நிலத்தில் மின்னும் வைரம், நீரில் மூழ்கி கரையும் - அது என்ன?
- [உப்பு]
243. தாகத்துக்கு அள்ளிக்குடிக்க முடியாத நீர், இறங்கி குளிக்க முடியாத நீர் - அது என்ன?
- [கானல் நீர்]
244. அழகிய வட்டத்தட்டு, வாணலியில் போட்டால் கசங்கும் - அது என்ன?
- [அப்பளம்]
245. கை இல்லாமல் நீந்துவான், கால் இல்லாமல் ஓடுவான் - அவன் யார்?
- [படகு]
246. குளிர் இல்லாவிட்டாலும் குளிர் காய்வார் - அது யார்?
- [பொற்கொல்லர்]
247. குதிகுதித்தான் பல் இளித்தான் - அது யார்?
- [சோளப்பொறி]
248. தங்கை தீட்டிய ஓவியம் தரையில்தான் தவழும் - அது என்ன?
-[கோலம்]
249. தட்டத் தட்ட தகடு, காயக் காய விறகு - அது என்ன?
- [எருக்கட்டி]
250. ஆழக் கிடப்பவன் கைக்கு வந்தால் ஆயிரம் மதிப்பு - அது என்ன?
- [முத்து]
251. வாய் திறக்காமல் தகவல் சொல்வான் - அவன் யார்?
- [தபால்]
252. உலகே எதிர்பார்க்கும் அவன் வரவை - அவன் யார்?
- [மழை ]
253. எதையும் பேசும் எலும்பில்லாதவன் - அவன் யார்?
- [நாக்கு]
254. பார்த்தது இருவர், பறித்தது இருவர், ஆனால் சுவைப்பது மட்டும் ஒருவன் - அவர்கள் யார்?
- [கண்கள், கைகள், வாய்]
255. புகையும், நெருப்பும் இல்லாமல் எரியும் - அது எது?
- [நெஞ்சு எரிச்சல்]
256. அந்தி வரும் நேரம், அவளும் வரும் நேரம் - அவள் யார்?
- [நிலா]
257. வான் வழி வருவான், பாதாளம் வழியாய் போவான் - அவன் யார்?
- [மழை]
258. கறுப்பன் வயதானால் வெளுத்துவிடுவான் - அவன் யார்?
- [தலைமுடி]
259. நெருப்பில் வெந்தவனுக்கு நீண்ட ஆயுள் - அவன் யார்?
- [செங்கல்]
260. அவனைக் கண்டால் அஞ்சுவார்கள், ஆதிசேஷனாய் வணங்குவார்கள் - அவன் யார்?
- [பாம்பு]
261. சட்டையை கழற்றினால், சாப்பாடு தயார் - அது என்ன?
- [வாழைப்பழம்]
262. பகலெல்லாம் அண்ணன் நம்முடன் இருப்பான். இரவில் தம்பி நம்முடன் வருவான் - அவர்கள் யார்?
- [சூரியன், சந்திரன்]
263. இணை பிரியாமல் வருவார்கள் இரட்டையர்கள் அவரகள் மோதினால் ஆள் காலி - அவர்கள் யார்?
- [இடி, மின்னல்]
264. கொண்டையில் பூ உண்டு, கோழிக்கு உறவுக்காரன் - அவன் யார்?
- [சேவல்]
265. இளசிலே தாகம் தீர்ப்பான், முற்றினால் சமையலில் ருசிப்பான் - அது என்ன?
- [தேங்காய்]
266. குங்கும நிறத்தில் பூ பூக்கும், கொள்ளுக்காய் போல் காய்காய்க்கும் - அது என்ன?
- [கொளிஞ்சி செடி]
267. இரண்டு பேர் சேர்ந்தால் எதையும் செய்து முடிப்பார்கள் - அவர்கள் யார்?
- [கைகள்]
268. அரை சாண் ராணி, வயிற்றில் ஆயிரம் முத்துக்கள் சுமக்கிறாள் - அது என்ன?
- [வெண்டைக்காய்]
269. உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு - அது என்ன?
- [பாய்]
270. காண்பவரை ஏமாற்றும் நீர், தாகம் தணிக்காத நீர் - அது என்ன?
- [கானல் நீர்]
271. விஷம் கொண்டவனை, பாலூற்றி தொழுவர் - அது என்ன?
- [பாம்பு]
272. மழைக்கும் இடம் உண்டு, மன்னர் படைக்கும் இடம் உண்டு - அது என்ன?
- [மரத்தடி]
273. இரண்டு கால் உயிர்களுக்கு, மூன்று காலன் இருக்க உதவுவான் - அவன் யார்?
- [முக்காலி]
274. அச்சு இல்லாத சக்கரம், அழகை கூட்டும் சக்கரம் - அது என்ன?
- [வளையல்]
275. சுற்றி சுற்றி சூட்டைப் போக்கினாள் - அவன் யார்?
- [மின்விசிறி]
276. என்னில் உன்னைக் காணலாம் - நான் யார்?
- [கண்ணாடி]
277. முதலில் ஒலிப்பான், பிறகு உரைப்பான் - அவன் யார்?
- [தொலைபேசி]
278. அடித்தால் விலகாது, அணைத்தால் நிற்காது - அது என்ன?
- [தண்ணீர்]
279. ஐவர் வீட்டுக்கு பொதுவாய் ஒரு முற்றம் - அது என்ன?
- [உள்ளங்கை]
280. வால் உள்ள பையன் காற்றில் பறக்கிறான் - அவன் யார்?
- [பட்டம்]
281. எத்தனை தரம் சுற்றினாலும், அவனுக்கு தலை சுற்றாது - அவன் யார்?
- [மின் விசிறி]
282. முச்சந்தியில் மூன்று விளக்கு, பார்த்து நடந்தால் பாதுகாப்பு - அது என்ன?
- [சாலை எச்சரிக்கை விளக்கு]
283. அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, பாதி நாள் மெலிவாள், மீதி நாள் வளர்வாள் - அவள் யார்?
- [நிலவு]
284. பச்சை நிற அழகிக்கு, உதட்டுச் சாயம் பூசாமலேயே சிவந்த வாய் - அவள் யார்?
- [கிளி]
285. மணமில்லா பூ, மாதர்கள் சூடாத பூ, மண்டைத் தடி பூ, சமையலில் மணக்கும் பூ - அது என்ன பூ?
- [காலிபிளவர்]
286. பழம் காயாகி பந்தியிலே விருந்தாகும் - அது என்ன?
- [எலுமிச்சை ஊறுகாய்]
287. ஆவியில் குளிக்கும், அருபசியை தீர்க்கும் - அது என்ன?
- [இட்லி]
288. நீரில் நீந்தும், நிலத்தில் தாவும் - அது என்ன?
- [தவளை]
289. நிலத்தில் உணவு, ஆகாயத்தில் வாழ்வு - அது யாருக்கு?
- [பறவைகள்]
290. விதையின்றி முளைக்கும், வேரின்றி கிளைக்கும் - அது என்ன?
- [கொம்பு]
291. கருப்பையில் சில மாதம், வெளிப்பையில் சில வருடம் பிள்ளை சுமப்பான் - அவன் யார்?
- [கங்காரு]
292. கல்லாலும், மண்ணாலும் கட்டாத வீடு, காற்றிலே ஆடும் வீடு - அது என்ன?
- [துக்கணாங் குருவிக்கூடு]
293. சில்லறை சேர்த்து வைத்த செந்நிற அழகி - அவள் யார்?
- [மிளகாய் வற்றல்]
294. ஆறாத் துயரில் ஊற்றெடுக்கும் ஆறு - அது என்ன?
- [கண்ணீர்]
295. தலைகீழாக தொங்குவான், தலை சுழற்றி தருவான் தென்றலை - அவன் யார்?
- [மின் விசிறி]
296. பகலில் தூங்கி இரவில் விழிப்பான் - அவன் யார்?
- [விண்மீன்]
297. கால் இல்லாத மான், வேர் இல்லாத புல்லைத் தின்னும் - அது என்ன?
- [மீன் மற்றும் பாசி]
298. ஒற்றைக் கால் மனிதனுக்கு ஒன்பது கை - அது என்ன?
- [மரம்]
299. கிளைகள் உண்டு, ஆனால் இலைகள் கிடையாது - அது என்ன?
- [மான் கொம்பு]
300. சிறகடிக்காத பறவை, ஊர் ஊராய் பறக்கும் - அது என்ன?
- [விமானம்]
301. காவல் காக்கும், ஆனால் நாயல்ல. காலை கடிக்கும், ஆனால் செருப்பல்ல - அது என்ன?
- [முள் செடி]
302. ஒளி தரும்-விளக்கல்ல, வெப்பம் தரும்-நெருப்பல்ல, பளபளக்கும்-தங்கம் அல்ல - அது என்ன?
- [சூரியன்]
303. கண்ணுக்குள் இருப்பவன் கவலைக்கும் மகிழ்ச்சிக்கும் எட்டிப் பார்ப்பான் - அவன் யார்?
- [கண்ணீர்]
304. உதைக்குப் பறப்பவனை துரத்துவார்கள் சிலர், அதை ரசிப்பார்கள் பலர் - அவன் யார்?
- [கால்பந்து விளையாட்டு]
305. புள்ளிக்குச் சொந்தக்காரன், துள்ளி ஓடுவதில் கெட்டிக்காரன் - அவன் யார்?
- [மான்]
306. ஒலிப்பான், ஒலியை நிறுத்தினால் தகவல் கொடுப்பான் - அது என்ன?
- [டெலிபோன்]
No comments:
Post a Comment