Wednesday, January 2, 2019

விடுகதை வினா விடைகள் - 7


1) கழற்றிய சட்டையை மறுபடியும் போடமாட்டான் அவன் யார்?
1) வெருளி2) சிலந்தி3) அட்டை4) பாம்பு
2) அள்ள அள்ளக் குறையாது ஆனால் குடிக்க உதவாது அது என்ன ?
1) கடல்நீர்2) வாளி3) கயிறு4) தீர்த்தம்
3) முள்ளுக்குள்ளே முத்துக்குவலயம் அது என்ன?
1) கரும்பு2) மாதுளம்பழம்3) பலாப்பழம்4) முட்டை
4) வாயைப் பிளந்து வீதியோரங்களில் நிற்பான் அவன் யார் ?
1) நாய்2) தபாற் பெட்டி3) வாகனம்4) மரம்
5) முக்கண்ணன் சந்தைக்குப் போகின்றான் அவன் யார் ?
1) மாங்காய்2) சிவபெருமான்3) பலாப்பழம்4) தேங்காய்
6) மீன் பிடிக்கத் தெரியாதாம் ஆனால் வலை பின்னுவானாம் அவன் யார் ?
1) மீனவன்2) சிலந்தி3) மீன்4) சிலை
7) உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார் ?
1) பானை2) காகம்3) அகப்பை4) நீர்
8) எட்டாத ராணி இரவில் வருவாள். பகலில் மறைவாள் அவள் யார் ?
1) சூரியன்2) வளி3) நிலா4) காற்று
9) வெள்ளை ஆளுக்கு கறுப்புத் தலைப்பாகை. அது என்ன ?
1) தீக்குச்சி2) தடி3) மரம்4) மேசை
10) சலசலவென சத்தம் போடுவான் சமயத்தில் தாகம் தீர்ப்பான் அவன் யார் ?
1) நீர்2) கடல்3) அருவி4) தாகம்

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !