Wednesday, January 2, 2019

விடுகதை வினா விடைகள் - 5

1) தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
1) ஓட்டை2) மீன் வலை3) கரண்டி4) கடல்
2) முதலெழுத்து தமிழின் அடுத்த எழுத்து கடை மூன்று சேர்ந்தால் ஒரு எண்ணிக்கை மொத்தத்தில் இது வருமுன் எச்சரிக்கைத் தேவை?
1) கஸ்ட்டம்2) ஆறுதல்3) ஆபத்து4) பயம்
3) முதல் இரண்டை இழந்தால் ஒளி இல்லை. கடை இரண்டை ஐந்தறிவு ஜீவனுக்கு கட்டுவது யார்? இரண்டும் மூன்றும் திரும்பினால் கடைசியில் நாமும் அதுவே. முதலும் கடையும் சேர்ந்தால் கை இழந்த பெண். மொத்தத்தில் அழகிய பெயராகவும் இருக்கும் நான் யார்?
1) பார்வை2) கனி3) கவிதை4) கண்மணி
4) பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது அது என்ன?
1) கண்கள்2) முட்டை3) மீன்4) கடல்
5) அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன?
1) சக்தி2) சூரியன்3) நிலா4) பூமி
6) ஆலமரம் தூங்கஅவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?
1) குரங்கு2) மூச்சு3) கடவுள்4) மனிதன்
7) நடுவழிய ஓய்வுக்காம், கடையிரண்டில் ஏதுமில்லை சொல், மூன்றெழுத்தில் உடுத்தலாம், மொத்தத்தில் பெண்கள் விருப்பம், அது என்ன?
1) புடவை2) பட்டு3) நகை4) ஆபரணம்
8) கடையெழுத்து மாறிடில் தின்னலாம், முதலும் கடையும் சேர்ந்தால் குளிரும், மொத்தத்தில் முருகன் இடம், தெரிந்தவர் சொல்லுங்கள் இங்கே?
1) காசி2) பழனி3) கனி4) திருச்செந்தூர்
9) கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள் காஞ்சியில் நான் யார்?
1) அணிகலன்2) துணி3) ஆடை4) பட்டுத்துணி




10) அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன?
1) நீர்2) நெல்3) சோறு4) அரிசி

---------------------------------------------------------------------------------------------------------------------------


1) வெட்டிக்கொள்வான் ஆனாலும் ஒட்டிக்கொள்வான் அவன் யார்?
1) கத்தரிக்கோல்2) நண்பர்3) பகைவர்4) கத்தி
2) ஓடியாடி வேலை செய்தபின் மூலையில் ஒதுங்கிக்கிடப்பாள் அவள் யார்?
1) விளக்கு2) துடைப்பம்/தும்புத்தடி3) பேனா4) பாத்திரம்
3) ஏற்றி வைத்து அணைத்தால் எரியும் வரை மணக்கும் அது என்ன?
1) கற்பூரம்2) விளக்கு3) மெழுகுதிரி4) ஊதுபத்தி
4) மூன்றெழுத்துப் பெயராகும். முற்றும் வெள்ளை நிறமாகும் அது என்ன?
1) பஞ்சு2) நுங்கு3) வெண்மை4) வாழை
5) எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?
1) வைரக்கல்2) விக்கல்3) சிகிச்சை4) மணல்
6) ஆயிரம் தச்சர் கூடி அழகான மண்டபம் கட்டி ஒருவன் கண்பட்டு உடைந்ததாம் மண்டபம் அது என்ன?
1) வீடு2) கோயில்3) தேன்கூடு4) கூடு
7) பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன?
1) மீன்2) வாத்து3) தவளை4) பாம்பு
8) படுத்துத் தூங்கினால் கண்முன் ஆடும், அடுத்து விழித்தால் மறைந்தே ஓடும் அது என்ன?
1) நுளம்பு2) கனவு3) மனிதன்4) வானம்
9) இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?
1) பலா2) மா3) வாழை4) தோடை
10) அதட்டுவான், அலறுவான் ஆனால் கோட்டையை விட்டு வரமாட்டான் அவன் யார்?
1) நாய்2) பூனை3) அரசன்4) நாக்கு









No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !