Tuesday, January 1, 2019

அறிஞர் பழ மொழிகள் - 3

விவேகானந்தர்


1. உனக்கு தேவையான எல்லா வலிமையும் உனக்குள்ளே உள்ளது.
2. மனிதன் தோல்வியின் மூலமே அறிவாளி ஆகிறான்.
3. எல்லாம் தெரியாது என்று குழப்பத்தோடு இருக்காதே. எதுவும் தெரியாது என்று தெளிவோடு இரு.
4. ஏதாவது தவறு செய்து விட்டால் ஐயோ நான் தீயவன் ஆகிவிட்டேன் என்று வருத்தப்பட வேண்டாம். நீ நல்லவன் தான். ஆனால் இன்னும் உன்னை நல்லவனாக்க முயற்சி செய்ய வேண்டும்.
5. உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே துணிந்து நில் எதையும் வெல்.

பாரதியார்


1. மன உறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய குட்டைக்குச் சமமானது.

அன்னை தெரசா


1. மனம் விட்டு பேசுங்கள் அன்பு பெருகும்




1. யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே.



வில்லியம் சேக்ஸ்பியர்


1. ஒவ்வொரு மனிதனும் தன்னால் முடிந்த அளவு நற்செயல்களை செய்ய வேண்டும்.
2. இயற்கையோடு உறவு கொள்வது உலகம் முழுவதும் ஐக்கியப்படுத்தி வைக்கும்.


மாத்யூஸ்


1. தன்னந்தனியே எவன் ஒருவன் நிற்க துணிகிறானோ. அவனே உலகில் வலிமைமிக்க மனிதன்.

டீச்சர்


1. அன்னையின் இதயமே குழந்தையின் பள்ளிக்கூடம்.

தாமஸ் புல்லர்


1. தன் கால்களால் பறவைகள் வலையில் சிக்கிக் கொள்ளும். தன் நாவால் மனிதன் துன்பத்தில் சிக்கிக்கொள்வான்.

டால்ஸ்டாய்


1. எந்த தொழிலும் இழிவு இல்லை. தொழில் எதுவும் செய்யாதிருப்பது தான் இழிவு.
2. எதிர்காலத்தை பற்றி நினைத்துக் கொண்டிராமல் நிகழ்காலத்தை நல்வகையில் பயன்படுத்தும் மனிதனே மகிழ்ச்சியுடன் இருக்க முடியும்.

ஸ்டோன்


1. நல்ல யோசனை தோன்றும் போது, அதை உடனே செய்து முடியுங்கள்; வெற்றி உங்கள் பக்கம்.

ஜேம்ஸ் ஹோபெல்


1. பகைவனின் புன் சிரிப்பை விட நண்பனின் கோபம் மேலானது.

காந்தி


1. உயர்ந்த எண்ணங்களை உடையோர் ஒரு நாளும் துன்பம் அடையார்.


போவீ


1. அரைகுறை பண்பாடு ஆடம்பரத்தை விரும்பும்; நிறைந்த பண்பாடு எளிமையை விரும்பும்.

தோரோ


1. உங்களை முதலில் கட்டுப்படுத்துங்கள்; பிறகு உலகமே உங்கள் வசமாகும்.

இங்கர்சால்


1. நீ வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னை வறுமைக்குள் தள்ளிவிடும்.
2. மனிதனின் அதிர்ஷ்டம் அவன் நடத்தையில் தான் இருக்கிறது.
3. மனிதன் ஒரு உண்மையை கண்டுபிடித்தான் என்றால் வாழ்க்கையில் ஒரு தீபத்தை ஏற்றினான் என்று பொருள்.

நார்மன் வின்சென்ட்


1.நல்ல நம்பிக்கையே நிம்மதியை அளிக்கும்.

ராஜாஜி


1. ஒரு கொள்கைக்காக துன்பத்தை ஏற்றுக்கொண்ட பிறகு பின் வாங்க கூடாது.

கார்ல் மார்க்ஸ்


1. உழைப்பு தான் எல்லா செல்வங்களுக்கும், மதிப்புகளுக்கும் மூலம்.
2. பொறுமை இல்லாதவர்கள் நீதிமான்களாக இருக்க முடியாது.

சேத்ரஞ்சா


1. மனிதர்களிடம் கருணை காட்டாதவர்களுக்கு இறைவனும் கருணை காட்டுவதில்லை.

டிஸ்ரேலி


1. சாதுரியம் இல்லாமல் நீங்கள் எதையும் கற்றுக்கொள்ள முடியாது.

மில்டன்


1. கடினமான வேலையை செய்து முடிப்பவர்கள் தான் வீரர்கள்.

கன்பூஷியஸ்


1. தன்னடக்கமே வலிமை; அமைதியே ஆற்றல்.
2. விழுந்தாலும் அருவியாய் விழுங்கள், எழுந்தாலும் இமயமாய் நிமிர்ந்து நில்லுங்கள்!

ஸ்டாலின்


1. உலகில் உள்ள எல்லா சக்தியாலும் தகர்க்க முடியாத சக்தி ஒன்று உள்ளது. அதுவே மனிதனுடைய மனோசக்தி.

வாட்சன் ஸ்மித்


1. பலரை அழ வைக்கும் உண்மையைவிட, சிலரை சிரிக்க வைக்கும் பொய் மேலானது.

ஹிட்லர்


1. வாழ்க்கையில் தடுமாறிக்கொண்டு இருப்பதை விட, ஒருமுறை விழுந்து எழுவது நல்லது.

லெனின்


1. எத்தனை துன்பங்கள் வந்தாலும், எத்தனை தடைகள் வந்தாலும் எனக்குக் கவலை இல்லை. ஏனென்றால் நான் 100 முறை ஜெயித்தவன் இல்லை, 1000 முறை தோற்றவன்.

கால்டுவெல்


1. ஓய்வு பெறும் முன்னால் சேமித்து வை, இறக்கும் முன்னால் தானம் செய்.

கதே


1. நண்பனுக்காக உயிரைக் கொடுப்பது என்பது சுலபம் ஆனால் உயிரைக் கொடுப்பதற்குரிய நண்பன் கிடைப்பது தான் கடினம்.

வால்டேர்


1. உலகத்திற்கு நீ வழங்குவது அதிகமாகவும், உலகிடமிருந்து நீ ஏற்பது குறைவாகவும் இருக்கட்டும்..
2. அதிர்ஷ்டம் என்பது அர்த்தமற்ற சொல். காரணமில்லாமல் எதுவும் இருக்க முடியாது.

கோல்டுஸ்மித்


1. எப்போதும் அச்சத்தில் இருப்பதைவிட ஆபத்தை ஒரு முறை சந்திப்பது மேல்.

ஆஸ்கர் ஒயில்டு


1. தனியறையில் செய்யும் ஒவ்வொரு ரகசிய தவறுக்கும் என்றாவது ஒருநாள் கூரை மேலிருந்து கதறியழ நேரிடும்.

ஜீவா


1. பட்டப்படிப்பு புட்டிப்பால் போன்றது. சிந்தனை பசும்பால் போன்றது. அனுபவம் தாய்ப்பால் போன்றது.

செனகா


1. ஒரு காரியம் கஷ்டமாக இருப்பதால் நாம் பயப்படுவதில்லை. நாம் பயப்படுவதால்தான் அது கஷ்டமாகிறது.

கண்ணதாசன்


1. குற்றம் புரிந்தவனும் தனக்கு நியாயம் கேட்கிறான். குற்றத்திற்கு ஆட்பட்டவனும் தனக்கு நியாயம் கேட்கிறான். யாருக்கு அதை வழங்குவது என்பதை பணம் தான் முடிவு செய்கிறது.
2. சோதனை அதிகமாக இருந்தால், சுகம் பெரிய அளவில் வரப் போகிறது என்று அர்த்தம்.

எமெர்சன்


1. நான் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் என்னை விட உயர்ந்தவராகவே இருக்கிறார்கள். அதை நான் கற்றுக்கொள்கிறேன்.
2. யாரிடம் உன் எண்ணங்களை வெளிப்படையாக சொல்ல முடியுமோ, அவனே உன் உண்மையான நண்பன்.

சாக்ரடீஸ்


1. உலகை மாற்ற நினைப்பவன் முதலில் தன்னைத் தானே மாற்றிக் கொள்ள வேண்டும்.
2. இப்போது செய்வதைவிட இன்னும் சிறப்பாக பணியாற்றும் சிறப்பும் வாய்ப்பும் இருந்தும் அப்படி செய்யாமல் இருப்பவனும் சோம்பேறியே.
3. நாம் மற்றவருக்கு சிந்திக்க செய்யவே முடியும். கற்பிக்க முடியாது. அவரவர் அனுபவமே சிறந்த ஆசான்.

அரிஸ்டாட்டில்


1. கல்விக்கான வேர்கள் கசப்பாக இருந்தாலும் அதன் கனிகள் இனிப்பானவை.
2. வாழ்க்கையில் எதிர்ப்படும் துன்பங்களை எதிர்கொள்வதற்கு நண்பர்களே உற்ற துணையாவர்.

அபிரகாம் லிங்கன்


1. ஏமாற்றுவதைக் காட்டிலும் தோற்றுப்போவது மரியாதைக்குரியது.


ஜான் கீட்ஸ்


1. அனுபவிக்கும் வரை எதுவும் உண்மையாகாது.


ஜார்ஜ் எலியட்


1. மரியாதையாகப் பேசுவதும், நடப்பதும் செல்லவில்லாத செல்வங்கள்.


பிராங்ளின்


1. விருப்பங்கள் அரை மடங்கு அதிகமானால் சங்கடங்கள் இரு மடங்காகும்.
2. முட்டாளின் இதயம் அவன் வாயில் இருக்கிறது, அறிவாளியின் வாய் அவன் இதயத்தில் இருக்கிறது.
3. நான் மற்றவர்களைப் பற்றி பேசுவதென்றால் அவர்களின் நல்ல பண்புகளை எடுத்துரைப்பேனே அன்றி, ஒருபோதும் குற்றங்களை கூறுவதில்லை.

கென்னடி


1. ஏடுகளில் உள்ள கடுஞ் சொற்கள் அறிவை வளர்க்கும், பெரியோர்களின் கடுஞ்சொற்கள் நல்வாழ்வை வளர்க்கும்.

ஆவ்பரி


1. விதியானது ஒரு கதவை மூடும்போது நம்பிக்கையானது இன்னொரு கதவைத் திறக்கிறது.
2. கொள்கையில் நம்பிக்கை வேண்டியதுதான், ஆனால் அது குருட்டுத்தனமாக இருக்கக் கூடாது.


ஜான்சன்


1. அனுபவம் ஒரு நல்ல பள்ளிக்கூடம். ஆனால் அறிவற்றவர்கள் அதிலும் கற்றுக்கொள்வதில்லை.


சாணக்கியர்


1. உன்னைப் பார்த்து பிறர் பொறாமைப்படுகின்றனர் என்றால், நீ வளர்ந்து வருகிறாய் என்று அர்த்தம்.

இந்திராகாந்தி


1. மனிதர்கள் தங்களின் கடமைகளை மறந்துவிடுகிறார்கள். ஆனால் உரிமைகளை மட்டும் நினைவில் வைத்துக் கொள்கிறார்கள்.

நீல் ஆம்ஸ்ட்ராங்


1. மனிதர்கள் அனைவருக்கும் எண்ணற்ற முறை இதயம் துடித்துக் கொண்டிருப்பதாக நான் நம்புகிறேன். என்னுடைய எந்த ஒரு துடிப்பையும் நான் வீணாக்க மாட்டேன்.

அம்பானி


1. இலக்குகளை சென்றடைவது மட்டும் போதுமானது அல்ல. அவற்றைத் தகர்த்து அடுத்த இலக்குகளை உருவாக்குவதே என் எதிர்பார்ப்பு.

மைக்கேல் ஜாக்சன்


1. போலி வேடங்களைப் போட்டுக்கொண்டு ஜெயிப்பதைவிட நம்முடைய சுய அடையாளங்களை கொண்டு தோற்பது மேல்.

ரத்தன் டாடா


1. எப்போதும் சரியான முடிவுகளை எடுப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் எடுக்கும் முடிவுகளை சரியானதாக மாற்றிக் கொள்வேன்.


தாமஸ் கார்லைல்


1. குற்றம் குறைகளை நீக்கிக்க்கொள்வதே மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய மிக்ப்பெரிய வாய்ப்பு.
2. தன்னால் சாதிக்க முடியும் என்று கூறுபவனே அரசன் ஆவான்.


டென்னிஸன்


1. ஏளனம் என்பது பண்பற்றவர்களின் உள்ளத்தில் எழும் நச்சுப்புகை

சுபாஷ் சந்திர போஸ்


1. நாணயமாக நடப்பவர்கள், ஒளிக்கும், இருளுக்கும் அஞ்சுவதில்லை.


பிராய்டு


1. வலிமையான ஒரு கருத்திற்கு பிரதிநிதிகளாக நிற்கும் வரை மனிதர்கள் வலிமையானவர்கள். அதனை எதிர்க்கும்போது சக்தி குன்றியவர்களாகி விடுவார்கள்.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !