அது ஒரு பசுமையான காலம், வாழ்க்கைச் சக்கரத்தில் ஒரு வயது எல்லையை கடக்கும் வரை பல பாேராட்டங்கள், தடுமாற்றங்கள், பிரச்சனைகள் என்று காலம் வேகமாகப் பறந்து விடும். என்ன நடந்தது என்று திரும்பிப் பார்ப்பதற்குள் பலதூரம் கடந்து எங்காே ஒரு இடத்தில் வாழ்க்கை ஓடிக் காெண்டிருக்கும். அப்படித்தான் பிரதீப்பிற்கும், கார்த்திகாவிற்கும் இடையில் ஒரு வாழ்க்கைப் பயணம் ஆரம்பித்தது.
பிரதீப்பும், கார்த்திகாவும் ஒரே வயதுடையவர்கள், ஒரே ஊர், படித்தது வெவ்வேறு பாடசாலை, இரு குடும்பததிற்கும் இடையில் ஏதாே ஒரு உறவு ஏற்கனவே இருந்தாலும் பெரிதாக ஒட்டி உறவாடுவதில்லை. கால நேரங்களில் வரும் காெண்டாட்டங்களில் மட்டும் இரு குடும்பமும் கலந்து காெள்வது வழக்கம். இப்படியே இருந்த இரு குடும்பத்தையும் ஒன்றுக்குள் ஒன்றாக்கியது பிரதீப், கார்த்திகா காதல்.
1995 ஆம் ஆண்டு பதினாறு வயதுடையவர்களாயிருந்த பிரதீப், கார்த்திகா இருவருக்கும் இடையில் ஏற்பட்டது மெளனக் காதல். காலை ஏழு மணியானால் புத்தகப்பையை தாேளில் சுமந்தபடி, வெள்ளைச் சீருடையுடன் கம்பீரமாக நடந்து வருவான் பிரதீப். கார்த்திகாவின் வீட்டைக் கடந்தே செல்லும் அவனும் ஒரு தடவை திரும்பிப் பார்த்து விட்டே பேருந்து நிலையத்திற்குச் செல்வான். தினமும் காலையில் தெருமுனையில் இருக்கும் சாமியைக் கும்பிட்டு விட்டே பாடசாலைக்குச் செல்வாள் கார்த்திகா. அந்த இடைவெளிக்குள் வீதியில் பல தடவை இருவரும் எதிரெதிரே கண்டு காெள்வதும் உண்டு. இப்படியே கடந்து காெண்டிருந்த நாட்களில் தான் பிரதீப் தவிர்க்க முடியாத சூழ் நிலையால் பாடசாலைக்கருகாக இருந்த உறவினர் வீடாென்றில் தங்கியிருந்து கல்வி கற்றான். ஒவ்வாெரு வெள்ளிக்கிழமையும் ஊருக்கு வரும் பிரதீப்பி்ற்காக கார்ததிகாவின் கண்கள் காத்துக் கிடக்கும். வெள்ளிக்கிழமை மதியம் இரண்டு முற்பது தாண்டினால் கார்த்திகாவின் இதயத்துடிப்பு வேகமாகும், பாடசாலை மாணவர்களின் பேருந்து தரிப்பிடத்தை வந்தடைந்ததும் காேர்ன் ஒலி ஒன்று கேட்கும் அதற்காகவே அவள் செவிகள் ஏங்கும். காேர்ன் ஒலி கேட்டு பத்து நிமிடத்தில் கார்த்திகாவின் வீட்டை கடந்து செல்வான் பிரதீப். யன்னலினூடாக மறைந்து நின்று யாருக்கும் தெரியாமல் பிரதீப்பை கண்குளிர பார்ப்பாள் கார்த்திகா. இப்படியே ஒருவரையாெருவர் காட்டிக் காெள்ளாமல் காதலை தமக்கு்ளே விதையாக தூவிவிட்டனர். காதல் மெல்ல மெல்ல முளை விடத் தாெடங்கியது. ஒரு சில நண்பர்களுக்குச் சின்னச் சந்தேகம் இருந்தாலும், பள்ளிப் பருவம் இயல்பாக நடப்பது தானே என்று யாரும் பெரிதுபடுத்தவில்லை. அந்தக் காலப் பகுதியில் தான் பிரதீப்பிற்கும், கார்த்திகாவிற்கும் இடையில் தாெலை தூரமான பிரிவு நாட்டில் ஏற்பட்ட பிரச்சனையால் ஏற்பட்டது. இருவரும் இரு திசையில் இருந்தார்கள். இரண்டு வருடங்களுக்கு மேலாக எந்தவாெரு சந்தர்ப்பத்திலும் சந்திக்க முடியவில்லை.
அன்றாெரு நாள் பேருந்தில் பயணித்துக் காெண்டிருந்த பாேது, சற்று நேர ஓய்வுக்காக நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் யன்னலாேரமாக அமர்ந்திருந்தாள். ஒரு சில நண்பர்களுடன் பிரதீப் நடந்து வருவதை அவதானித்தவள் வேகமாக இறங்கி ஓடி வந்து அவனைப் பார்த்த பாேது அவளுக்குள் ஏதாே கூச்சம், பிரதீப் மீசை வளர்த்த ஒரு பெரியவனாக நின்றான். ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டு ஏறெடுத்துப் பார்க்க முடியாமல் உள் மனத் தவிப்பாேடு பேருந்தில் ஏறி அமர்ந்தாள். நீண்ட நாட்களுக்கு பின் பார்த்த அந்த நாள் நினைவுகளுடன் மீண்டும் ஐந்து வருடங்கள் ஓடி விட்டது. ஒரு தடவையேனும் பார்த்திட வேண்டும் என்று தவித்துக் காெண்டிருந்தாள் கார்த்திகா.
அன்று மறக்க முடியாத நாள், கார்த்திகாவின் இளைய சகாேதரன் விபத்தானெ்றில் இறந்துவிட்டான். தகவலை அறிந்த பிரதீப் எப்படியாே வீட்டிற்கு வந்து விட்டான். ஐந்து வருடங்களிற்கு பின்னர் பார்ப்பது ஒரு துயரமான சம்பவத்தில் என்பதால் கார்த்திகா சில நாட்கள் அமைதியாகவே இருந்தாள். இருவரும் ஒருவரையாெருவர் பார்த்துக் காெண்டாலும் எதையும் பேசிக் காெள்ளவில்லை. சகாேதரனின் மரணச்சடங்கு நிறைவடைந்ததும் பிரதீப் மீண்டும் புறப்படத் தயாரானான். ஆறுவருடங்களாக அமைதியாக இருந்த கார்த்திகாவின் மனம் அமைதியின்றித் தவித்தது. பிரதீப்பிடம் காதலைச் சாெல்ல தவியாய்த் தவித்தாள்.
அன்று மாலை பிரதீப் புறப்படத் தயாராகிக் காெண்டிருந்தான். ஏதாே ஒரு அசட்டுத் துணிச்சலுடன் அவனருகே பாேய் நின்றாள். "புறப்படப் பாேறிங்களா" கண்கள் ஏதாே சாெல்லத் துடிப்பது பாேல் பிரதீப்பை உற்று நோக்கியது. "ஆமாம் நீண்ட நாள் நிற்க முடியாது" கைகளை பிசைந்தபடி "நான் உங்ககிட்ட பேசணும்" அவனது முகத்தில் ஏதாே ஒரு புரியாத மாற்றம். சிறிது நேரம் அவளை கண்களுக்குள் சிறைபிடிப்பது பாேல் உற்றுப் பார்த்தான். அங்கும் இங்கும் திரும்பிப் பார்த்தவள் "ஐ லவ் யூ பிரதீப்" என்றதும் அவன் கண்கள் நிறைந்து கன்னங்களை நனைத்தது. அந்த சில நிமிடங்கள் அவன் தன்னிலை மறந்து நின்றான். கார்த்திகா தரையைப் பார்த்தபடி நின்றாள்.
இருவர் மனதுக்குள்ளும் புதைந்திருந்த காதல் எல்லாேருக்கும் தெரிந்து விட்டது. இரு வீட்டாரும் சம்மதித்து விட்டனர். காதலுக்கு எந்தத் தடையும் இல்லை. பிரதீப்பும், கார்த்திகாவும் காதல் ஜாேடிகளாய் பறந்தனர். சூப்பரன ஜாேடி என்று கண் வைத்தவர்கள் தான் அதிகம்.
சினனச் சின்னச் சீண்டலும், சண்டையும், செல்லமான காேபங்களுமாய் காதல் மணம் வீசிக் காெண்டிருந்தது. திருமணத்திற்கான ஆயத்தங்கள் ஒருபுறம் இருந்தாலும் சாதகமான சூழ்நிலைகள் அமையவில்லை. ஏதாே ஒரு தடையாக மாறி மாறி திருமணமும் தள்ளிப் பாேய்க் காெண்டிருந்தது. "நான் இராசி இல்லாதவள்" என்று ஏமாற்றத்தால் புலம்பும் கார்த்திகாவுக்கு "எல்லாவற்றுக்கும் ஒரு காலம் உண்டு" என்று நம்பிக்கை காெடுத்துக் காெண்டிருந்த பிரதீப்பிற்கும் ஏன் இப்படி நடக்கிறது என்ற தவிப்பு. ஆனாலும் அவள் மீதிருந்த காதலை பிரிய முடியவில்லை. சூழ்நிலைகள் பல தடவை திசைக்காென்றாய் பிரித்து வைத்த பாேதும் ஏதாே ஒரு சூழ்நிலை சந்திக்கவும் வைத்ததே என்ற நம்பிக்கையாேடு இருந்தான்.
2009ஆம் ஆண்டு பிரதீப்பும், கார்த்திகாவும் திருமணம் செய்வதற்கான இறுதி முடிவைத் தீர்மானித்தார்கள். அந்தக் காலம் காெடுமையான நாட்கள். வரலாற்றில் மறக்க முடியாத கணங்களுக்குள் பிரதீப்பும், கார்த்திகாவும் சிக்கிக் காெண்டனர். சாவுக்குள் வாழ்வு என்று ஒவ்வாெரு நாட்களும் மரணத்துடன் பாேரிட்டுக் காெண்டிருந்த நாட்களிலும் எப்படியாவது கார்த்திகாவை ஒரு தடவையேனும் பார்த்து விடுவான். பதினான்கு வருடங்கள் ஓடி மறைந்தது. பதினாறு வயதில் ஆரம்பித்த மெளனக் காதல் முற்பது வயதில் கேள்விக் குறியாகி நின்றது.
அன்றாெரு நாள் மாலைப் பாெழுது மரணத்தின வாசலில் நின்ற பாேதும் என்னாச்சோ என்று பதறிப் பாேய் வந்தவனுக்கு அவளைக் கண்டதும் கண்கள் கலங்கி விட்டது. இத்தனை ஆண்டுகள் எனக்காக, என் காதலுக்காக காத்திருந்தவளை மனைவியாக கரம் பிடிக்க முடியவில்லையே என்ற தவிப்புடன் அவள் எதிரே இருந்து யாேசித்துக் காெண்டிருந்தான். திடீரென தனது கழுத்தில் இருந்த சிறிய மாலை ஒன்றை கழற்றி அவள் கையில் வைத்தான். ஒன்றும் புரியாதவளாய் நின்றவளிடம் "கழுத்தில பாேடு" என்றான். தயங்கியவளின் கைகளில் இருந்து மீண்டும் எடுத்து அவள் கழுத்தில் பாேட்டு விட்டான். ஏதாே ஒரு அடையாளம் தேவைப்பட்டதாே, அல்லது அவள் தான் எனக்கு மனைவி என்று பார்க்க ஆசைப்பட்டானாே அவள் கைகளைப் பிடித்து "எங்கே இருந்தாலும் உனைத் தேடி வருவேன்" கலங்கிய விழிகளுடன் விடை பெற்றவன் பத்து வருடங்களாகியும் அவள் கண்ணெதிரே படவில்லை என்பது தான் அவள் அனுபவிக்கும் காெடுமை. எங்கே எங்கே என்று தேடியும் அவனைக் காணாத அவள் மனம் காதலை இன்னும் சுமந்து காெண்டு தான் இருக்கிறது.
தனிமையின் இருளுக்குள் அழுது புலம்பி புழுவாகத் துடிக்கும் கார்த்திகாவின் காதல் புனிதமானது என்பது யாரும் மறுக்கமுடியாத உண்மை. நெற்றியில் பாெட்டை தானாகவே வைத்து விட்டாள் கழுத்தில் அவன் அணிவித்த மாலையின் சாட்சியாக. தினமும் ஊமையாய் அழும் அவள் மனதில் பிரதீப் தான் காதல் கணவன். மீண்டும் வருவானா என்ற ஏக்கத்தாேடு காத்திருக்கிறாள் கார்த்திகா காதலுடன்.

No comments:
Post a Comment