Saturday, December 1, 2018

செய்யும் தொழிலே சிறந்தது!!!

        கல்லுடைக்கும் தொழிலாளி ஒருவன் தன் தொழிலை நன்கு சந்தோஷமாக செய்து கொண்டு வாழ்ந்து வந்தான். ஒரு நாள் அவன் மனதில் ஒருவித எண்ணம் எழுந்தது. அதாவது, நாம் ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்து வாழ வேண்டும். அதற்காக அவன் பலவாறு யோசித்தான். அப்போது அந்த ஊர் மக்கள் அந்த ஊருக்கு வந்திருக்கும் துறவியைப் பற்றி பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டு, அவரைக் காணச் சென்றான்.

         அந்த ஜென் துறவி மிகவும் சக்தி வாய்ந்தவர். அவருக்கு கடவுளின் அருள் முழுவதும் கிடைத்ததால், அவர் எது சொன்னாலும் நடக்கும். அத்தகையவரிடம் அவன் சந்தித்து, வரம் ஒன்றை வாங்கிக் கொண்டு சென்றான். அது என்னவென்றால், அவன் எப்போதும் பலமிக்கவனாக, அவன் நினைப்பது எல்லாம் நடக்கக்கூடியதான ஒரு வரம் வேண்டி கேட்டுக் கொண்டான். துறவியும் அவனுக்கு அவன் ஆசைப்படியே வரத்தையும் கொடுத்தார்.

           அப்போது அவன் ஒரு நாள் ஒரு பெரிய வியாபாரியின் வீட்டிற்கு சென்றான். அப்போது அந்த வியாபாரியின் செல்வாக்கை கண்டு, நானும் ஒரு பெரிய வியாபாரி ஆக வேண்டும் என்று நினைத்தான். உடனே அவனும் ஒரு பெரிய வியாபாரியாக மாறிவிட்டான். மற்றொரு நாள் ஒரு அரசாங்க அதிகாரியைக் கண்டான். 

           அப்போ அந்த அதிகாரியைப் பார்த்ததும், பணக்கார வியாபாரிகள் முதல் அனைவரும் பயப்படுவதைக் கண்டான். ஆகவே அதிகாரியாக வேண்டும் என்று நினைத்தான். அதிகாரியும் ஆனான். பின் அவன் அதிகாரியாக வெளியே வெயிலில் செல்லும் போது சூரியனின் வெப்பத்தை அவனால் தாங்க முடியவில்லை. ஆகவே சூரியன் மிகவும் சக்தி வாய்ந்தது என்று எண்ணி சூரியனாக மாறினான்.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !