ஒரு நல்ல செய்தி! முல்லாவின் கதைகள்
அந்த ஊரில் ஒரு வழக்கம் உண்டு யாராவது ஒருவர் நல்ல செய்தியொன்றைச் சொன்னால் அதற்காக அவர்களுக்கு பணம் வசூலித்து அன்பளிப்பாகக் கொடுப்பார்கள்.அந்த வழக்கம் ஒருவிதமான மூடநம்பிக்கை என்பது முல்லாவின் கருத்து. அந்த மக்களுக்குப் புத்தி கற்பிக்க வேண்டும் என்று முல்லா கருதினார்,ஒருநாள் அவர் சந்தை கூடும் இடத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த ஒர் இடத்தில் நின்று கொண்டு " அன்பார்ந்த பொதுமக்களே உங்களுக்குச் சொல்வதற்காக அருமையான நல்ல செய்தி ஒன்றை வைத்திருக்கிறேன் எனக்குப் பரிசு தருவதற்காக உடனே பணம் வசூலியுங்கள் " என்று கூச்சல் போட்டார்.முல்லா ஒரு செய்தியினைச் சொல்லுகிறாார் என்றால் உண்மையிலேயே அது நல்ல செய்தியாகத் தான் இருக்கும் என்ற நம்பிய மக்கள் அவசர அவசரமாக பணம் வசூலித்து ஒரு கணிசமான தொகையை முல்லாவிடம் கொடுத்தனர்.அந்த அன்பளிப்புத் தொகையை வாங்கி எண்ணி சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்ட முல்லா மக்களை நோக்கி அன்பார்ந்த பொதுக்களே நான் கூற இருக்கும் நல்ல செய்தி இதுதான் இந்த முல்லா ஒரு மகனுக்குத் தந்தையாகியிருக்கிறார் என்று கூறிவிட்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்..
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே
Popular Posts
-
ஓர் ஊரில் , வணிகன் ஒருவன் இருந்தான் . பணக்காரனான அவன் சரியான கஞ்சன் . எனவே , முட்டாளான ஒருவனை வேலைக்காரனாக வைத்திருந்தான் ...
-
சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன . ஒரு நாள் சிஙகம் பசுவைக் கொன்றது . கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்...
-
1. மண்ணுக்குள்ளே கிடப்பான் மங்களகரமானவன் அவன் யார் ? 2. கொம்பு நிறைய கம்பு அது என்ன ? 3. ஆடும் வரை ஆட்டம் , ஆடிய பின் ...
-
பசி தாங்க முடியாத எலிகள் இரண்டு தாங்கள் ஒளிந்திருந்த வீட்டின் சமயல் அறைக்குள் புகுந்தன . அங்கே ஒரு பெரிய பானை நிறைய பால்...
-
செ வலைக்கோழி பத்து முட்டைகளை இட்டது . அந்தப் பத்து முட்டைகளையும் இருபத்தியொரு நாள்கள் அடைகாத்தது . இருபத்தியோராம் நாள் முட்டைகள...
-
ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார் . தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இர...
-
ஒரு நாள் சிறுத்தை பசியுடன் உணவைத் தேடியது . அப்போது ஒரு கறுப்பு மானையும் புள்ளி மானையும் கண்டது . அவை இரண்டும் மலைய...
-
-
கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது . ஒரு ஒடுக்கமா...
-
1. பழமொழி/Pazhamozhi உப்பிட்டவரை உள்ளளவும் நினை. பொருள்/Tamil Meaning உனக்கு உதவி செய்தவரை என்றும் மறவாதே. Transliteration ...
Featured Post
ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு அமுதம்விளையும் பேசும் பொற்சித்திரமே அன்பு மனம் மா...
About Blog
உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !
No comments:
Post a Comment