Wednesday, December 5, 2018

தூங்குமூஞ்சி வாத்தியார்


Image result for தூங்குமூஞ்சி வாத்தியார்
ஒரு ஊரில் ஒரு வாத்தியார் இருந்தார். அவருக்கு மதிய உணவிற்குப் பிறகு சற்று நேரம் கண்ணயராமல் இருக்க முடியாது. மாணவர்களைப் பாடம் படிக்கச் சொல்லி ஏவி விட்டு அவர் வகுப்பறையிலேயே சற்று நேரம் தூங்குவது வழக்கம்.

மாணவர்கள் அவரைக் கேலி செய்வார்கள். ஏன் இப்படி வகுப்பில் தூங்குகிறீர்கள் என்று கேட்பார்கள்.

அதற்கு அவர் திறமையாகப் பேசுவதாக எண்ணிக் கொண்டு, தான் தினமும் கனவுலகிற்குச் சென்று வருவதாகவும், அங்கே பல பண்டைய காலத்து ஞானிகளை சந்தித்து வருவதாகவும் கூறுவார்.

இந்தக் காலத்து மாணவர்கள் இதற்கெல்லாம சரிந்து விட மாட்டார்கள். அவருக்கே பாடம் கற்றுத் தர ஒரு திட்டம் போட்டார்கள்.

வாத்தியார் சற்றும் எதிர்பாரத ஒரு நாளன்று அவர் வகுப்புக்குள் நுழையும் நேரம் அனைத்து மாணவர்களும் தூங்குவது போல் படுத்துக் கிடந்தார்கள். திடுக்கிட்ட வாத்தியார் பிரம்பால் அனைவரையும் தட்டி எழுப்பித் திட்டினார். ஏன் வகுப்பில் தூங்கினீர்கள் என்று கேட்டார்.

மாணவர்கள் ஒரே குரலில் அவர் தினமும் செல்லும் கனவுலகிற்குத் தாங்களும் ஞானிகளைப் பார்க்கச் சென்று வந்ததாகக் கூறினார்கள்.

வாத்தியார் முகத்தில் ஈயாடவில்லை.

1 comment:

Unknown said...

வேலாயுதம் என்பவர் ஒரு செல்வந்தர். ஆனால் மகாக் கஞ்சன். அவர் ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தார். அவர் உடைகள் கிழிந்து பழையதாகிவிட்டாலும் அவற்றையே உடுத்தி வந்தார். அவருடைய எண்ணமெல்லாம் அதிகப் பணம் சம்பாதிக்க வேண்டும்; சேர்க்க வேண்டும் என்பதுதான்.

வேலாயுதத்திடம் ராமு என்பவன் ஐம்பது வெள்ளி கடன் வாங்கியிருந்தான். வேலாயுதமோ ராமுவை ஏமாற்ற எண்ணி, அவனிடம் நூறு வெள்ளியைத் திருப்பித் தருமாறு கேட்டார். அதிர்ச்சியடைந்த ராமு தான் ஏன் நூறு வெள்ளித் தர வேண்டும் என்று காரணம் கேட்டான். இரண்டு மாதங்களுக்குள் பணத்தை வட்டியுடன் சேர்த்து ராமு அதிகப் பணம் தரவேண்டும் என்று வேலாயுதம் பதிலளித்தார். ராமுவிடம் அச்சமயத்தில் கையில் எந்தப் பணமும் இல்லாததால் வேறு வழியின்றி தன் உடைமைகளை விற்றுக் கடனை அவரிடம் தந்தான்.
நூறு வெள்ளியைத் தந்திரமாகப் பெற்றுக் கொண்ட மகிழ்ச்சியில் திளைத்தார் வேலாயுதம். அவர் அப்பணத்தைப் பத்திரமாக ஒரு துணியில் முடித்துக்கொண்டு தன் வீட்டுக்குச் சென்றார். துணியை அவிழ்த்துப் பார்த்தார். பணத்தைக் காணவில்லை. வேலாயுதம் பணத்தைக் கண்டுபிடித்துத் தருவோருக்கு ஐம்பது வெள்ளி வெகுமதியாக தருவதாக அறிவித்தார்.

சில நாட்களுக்குப் பின் தன் வேலைக்காரனின் மகளான தேவி, அப்பணத்தைக் கண்டெடுத்ததாக வேலாயுதம் அறிந்தார். அவர் வேலைக்காரனின் வீட்டிற்கு ஓடினார். நூறு வெள்ளியைப் பெற்றதும் அவர் பணத்தை எண்ணிப் பார்த்தார். பணம் சரியாக இருந்தது. ஆனால் பேராசை பிடித்த வேலாயுதத்திற்குச் சொன்னபடி பணத்தில் பாதியை வெகுமதியாக கொடுக்க அவர் மனம் இடந்தரவில்லை. கையில் இருக்கின்ற பணத்தை மறைத்துக்கொண்டு அவர், “நூறு வெள்ளி வைத்திருந்தேன். ஐம்பது வெள்ளிதான் இருக்கிறது,” என்றார். இதைக் கேட்ட தேவி தான் அந்தப் பணத்தை எடுக்கவில்லை என்று கூறி அழுதாள். அதற்கு வேலாயுதம், “பரவாயில்லை! அந்த ஐம்பது வெள்ளியை நீயே அன்பளிப்பாக வைத்துக்கொள்,” என்று கூறினார். கோபங்கொண்ட வேலைக்காரன், “நூறு வெள்ளிக்குப் பதில் ஐம்பது வெள்ளிதான் இருக்கிறதென்றால் அந்தப் பணம் உன்னுடையதாக இருக்காது,'' என்று கூறி பணத்தை வேலாயுதத்திடமிருந்து பிடுங்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !