Thursday, December 27, 2018

பஞ்சம்

ஷீராவஸ்தி என்ற ஊரில் ஒரு சமயம் புத்தர் தங்கியிருந்த போது அந்த ஊரில் பஞ்சம் தலை விரித்தாடியது. உண்ண உணவின்றி மக்கள் வாடினர். அந்த ஊரில் பெரும் செல்வந்தர்கள் இருந்தும் உணவின்றி வாடும் ஏழை மக்களுக்கு உதவ முன்வரவில்லை. 

பஞ்ச காலத்தில் அனைத்தையும் தானம் செய்துவிட்டால், இறுதியில் நாம் பஞ்சத்தில் சிக்கித் தவிக்க நேரிடுமோ என்று நினைத்து சுயநலத்துடன் வாழ்ந்து வந்தனர். 

ஒரு நாள் புத்தர் தன் முன்னே கூடியிருந்த பல செல்வந்தர்களைப் பார்த்து, ""கனவான்களே! பஞ்சத்தினால் ஏழை எளிய மக்கள் பெரும் துன்பத்திற்குள்ளாகி இருக்கின்றனர். அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் உங்களில் யாருக்குமே கிடையாதா?'' என்று கேட்டார். அவர் பேசியதைக் கேட்ட செல்வந்தர்கள் அனைவரும் பதில் ஏதும் கூறாமல் மவுனமாக இருந்தனர்.புத்தர் மீண்டும், ""ஏன் மவுனமாக இருக்கிறீர்கள்? உங்களில் ஒருவருக்குக் கூட பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கிடையாதா?'' என்று சற்றும் உரத்த குரலில் கேட்டார். 

அப்போது — 
அந்தக் கூட்டத்திலிருந்து ஒரு சிறுமி வெளிப்பட்டு, ""ஏன் இல்லை! இதோ... நான் இருக்கிறேன் சுவாமி,'' என்றாள். 
புத்தர் உள்பட அங்கு கூடியிருந்த அனைவரும் அந்தச் சிறுமியைப் பார்த்தனர். 
"அருகில் வா! உன்னால் என்ன செய்ய முடியும் குழந்தாய்?'' என்று கேட்டார் புத்தர். 
"இவ்வூர் மக்களுக்கு என்னால் உதவ முடியும்!'' 
"எப்படி?'' 
"என் தந்தை பெரிய கோடீஸ்வரர். ஆனாலும், யாருக்கும் உதவமாட்டார். நான் வீடு வீடாகச் சென்று பிச்சையெடுத்து இவ்வூர் க்களின் பசியைப் போக்குகிறேன். பிச்சைப் போடும் தர்மவான்கள் இவ்வூரில் உண்டு,'' என்றாள் அச்சிறுமி. அவளது பேச்சையும், தர்ம சிந்தனையுள்ள உள்ளத்தையும் கண்டு அப்படியே மெய்சிலிர்த்துப் போனார் புத்தர். 

சொன்னபடியே அச்சிறுமி வீடு வீடாகச் சென்று பிச்சையெடுத்தாள். ஒரு கோடீஸ்வர வீட்டுச் சிறுமி வீடு வீடாகச் சென்று பிச்சையெடுக்கிறாளே என்ற விஷயம், அத்தனை செல்வந்தர்களின் உள்ளத்தையும் தொட்டது. அவர்கள் உணவுகளையும் தானியங்களையும் அவ்வூர் ஏழை மக்களுக்கு வாரி வாரி வழங்கினர். அவர்களது தர்ம சிந்தனையால் விரைவிலேயே அந்த ஊரில் பஞ்சம் நீங்கியது. அதற்காக பாடுபட்ட அச்சிறுமி மிகவும் போற்றப்பட்டாள்.

No comments:

குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

Popular Posts

அரட்டை ----->>>>

Featured Post

ரமணிசந்திரன்

ஆசை ஆசை ஆசை - ரமணிசந்திரன் அடி வாழை மைவிழி மயக்கம் அதற்கொருநேரமுண்டு  அமுதம்விளையும்  பேசும் பொற்சித்திரமே  அன்பு மனம் மா...

About Blog

உலகமே இணையதள மயமாகி விட்ட இக்காலத்தில் புத்தகங்கள் வாங்கி கதை மற்றும் கவிதைகள் படிக்க யாரும் அவ்வளவு விரும்புவதில்லை. புத்தகங்கள் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம். மக்களின் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதும், இணையதளத்தில் கதைகள் தேடும் நம் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்வதுமே எங்கள் அவா ! !