சுன்னாகம் புத்தூர் பதையில், புன்னாலைக் கட்டுவன் - பலாலி வீதி சந்திக்கு வரமுன் , உரெழுக் கிராமம் உரும்பிராயுக்குஅடுத்து அமைந்துள்ளது . அதன் எல்லைகளாகப் புன்னாலைக்கட்டுவன், உரும்பிராய் ஆகிய ஊர்கள் அமைந்துள்ளன. இவ்வூரானது தன்னைச்சூழ ஏழு ஊர்களை அரண்களாகக் கொண்டு ஊரெழு எனப்பெயர் பெற்றுள்ளது. ஊர் ஏழு மருவி ஊரெழுவானது என்பர். செம்மண் பகுதியாகிய இவ்வூர் நல்ல வளமான மண்ணையும், நல்ல நிலத்தடி நீர் வசதியையும் கொண்டுள்ள ஒரு பகுதியாகும் . ஊரெழு வாழை, மரவள்ளிக் கிழங்கு, பல வகையான காய்கறி வகைகள் போன்றவற்றுக்குப் பெயர் பெற்றது தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினரும், சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து இறந்தவருமான மாவீரன் திலீபன் இந்த ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
****
1930 இல்யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் பலர் செல்வம் தேடி மலேசியாகவுக்கு கப்பலில் பயணம், செய்து பிரிட்டிஷ் ஆட்சியின் “கீழ் திரை கடல் ஓடியும் திரவியம் சேர்” என்பது போல் பிற நாடுகளில் பல தொழில்கள் செய்து, செல்வம் சேர்த்தனர். அவர்களில் செல்லத்தம்பியும் ஒருவர். பல காலம் மலேசியாவில் உள்ள நகரமான ஈபோவில் ஸ்டேஷன் மாஸ்டராக வேலை செய்து, ஊரேழு திரும்பி, பல பரப்புகளை கொண்ட செம்மண் காணியில் மாளிகை போன்ற ஆறு அறைகள் கொண்ட கல் வீடு கட்டி , நல்ல நீர்க் கிணறு, பல சாதி மாமரங்கள் , பலா, நாவல், நெல்லி .தென்னை, பனை , போன்ற மரங்கள் அந்த பெரிய காணியில் செழித்து வளர்த்தார் . மரங்களையும் காணியையும் கவனிக்க முத்தன் இருந்தான்.
ஒரு காலத்தில் ஒரு சிலரிடமே கார் இருந்தது . சுன்னாகத்துக்குப் போய் வர ஒரு வில்லு மாட்டு வண்டியும் , மூன்று மாயவரம் மாடுகளும் மூன்று பசு மாடுகளும் செல்தம்பியரிடம் இருந்தது . வண்டிக்காரனாக கந்தன் வேலை செய்தான் . அவன் பசு மாடுகளையும் கவனித்துக் கொண்டான் . அவனும் அவனின் மனைவியும் அந்தப் பெரிய காணி ஒரத்தில் ஒரு குடிசையில் வாழ்ந்து வந்தனர் .
****
செல்லர் என்று ஊர்வாசிகளால் அன்பாக அழைக்கப்படும் செல்லத்தம்பி ஆறடி மனிதர் . மாநிற மேனி . மிடுக்கான மீசை . அவர் திருமணம் செய்த முத்தம்மாவோ ஐயந்து அடி உயரம். உயரப் பொருத்தமும் மனப் பொருத்தமும் இல்லாவிட்டாலும், முத்தம்மா ஏழு பிள்ளைகளைப் பெற்றவள். சிக்கனக்காரி. அவள் பெற்ற ஏழு பிள்ளைகளில் பாக்கியம் மட்டுமே ஒரு பெண்ணாகப் பிறந்தாள் . அவள் பிறந்தது ஈபோவில், கடைசியாக இரண்டு ஆண்களும் செல்லத்தம்பி ஊரெழுவுக்கு வந்த பின் பிறந்தவர்கள். மகள் பாக்கியத்தின் மேல் செல்லத்தம்பி அதிகப் பிரியம் வைத்திருந்தார். அதனால் பாக்கியத்தை செல்லதம்பியின் வீட்டில் இருந்த எல்லோரும் “பேபி” என்றே அழைத்தார்
செல்லத்தம்பிக்கு மரங்கள் வளர்ப்பதில் பெரும் ஆர்வம். அந்த பெரிய காணியில் . மா., பலா. நாவல். நெல்லி , புளி. பனை, தென்னை மரங்களுக்கு குறைவில்லையை, செல்லர் வளவு ஒரு பழமுதிர் சோலையாக இருந்தது
ஈபோவில் இருந்து ஊரெலுவுக்கு புலம் பெயரும் போது கொண்டு வந்த பித்தளைத் தளபாடங்கள், கிடாரங்கள் பர்மா தேசத்துத் தேக்க மரத்தால் செய்த கட்டில், மேசை, கதிரை. ஆகியவை பெறுமதி வாய்ந்தவை.. அக்காலத்தில் மலேசிய வெள்ளிக்கு இலங்கையில் பெரும் மதிப்பு. சேமித்த பணத்திலும் , சுன்னாகத்தில் உள்ள அவரின் பேரில் உள்ள இரு கடைகளில் இருந்து வரும் வாடகை பணத்திலும் மற்றும் மலேசியன் பென்சனிலும் அவர் ஒரு சிறு ஜமீன்தார் போல். செல்லத்தம்பி அக்கிராமததில் வாழ்ந்தார் அவரின் வீட்டுக்கு இரு நூர் யார் தூரத்தில் ஒரு பழமை வாய்ந்த கண்ணகி அம்மன் கோவிலுக்கு செல்லத்தம்பியே தர்மகர்த்தா
மின்சாரம் இல்லாத காலத்தில் அந்த பெரிய செல்லர் வளவில் உள்ள வீட்டுக்கு விளக்கு ஏற்றி வைக்க மூன்று பெட்ரோ மக்ஸ் லாம்புகுளும் நான்கு அரிச்னே விளக்குகளும் இருந்தன. வீட்டில் சமைக்க செல்லம்மா என்ற செல்லத்தம்பியின் ’ தூரத்து உறவுப் பெண்ணும், . வீட்டைப் பராமரிக்க ஒரு பதின்ரண்டு வயது மலை நாட்டில் உள்ள பதுளையில் பிறந்த தேயிலை தொடடத்து கூலி ஒருவனின் மகன் ராமு. இருந்தான்.
செல்லத்தம்பி உரெழு கிராமத்து குறு நில மன்னர் போல் வாழ்ந்தார். ஊர்வாசிகளின் குடும்பங்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகளுக்கு தன் வீட்டில் பஞ்சாயத்து வைத்து தீர்ப்பு வழங்கியவர். செல்லத்தம்பி. கணபதிப்பிள்ளை செல்த்தம்பியின் தூரத்து சொந்தக்காரன். செல்லத்தம்பியின் கணக்கு வழக்குகளைப் பார்ப்பவர் கணபதிப்பிள்ளை. தேவை இல்லாமல் செல்த்தம்பியை செலவு செய்ய விடமாட்டார்
ஈபோவில் வேலை செய்து சேமித்த 50,000 மலேயன் வெள்ளி பணத்தில் இருந்து வரும் வங்கி வட்டி பணத்திலும் சுன்னாகத்தில் அவர் பேரில் இருக்கும் இரு கடைகளும் பளையில் உள்ள பத்து ஏக்கர் தென்னம் தோட்டமும் அவரின் சொத்துக்குள் அடங்கும்
தான் கட்டிய வீட்டை தன் அன்பு மகள் பாக்கியதுக்கு சீதனமாகக் கொடுத்தார். பாக்கியத்தின் திருமணம் அந்த வீட்டில் ஆடம்பரமாக நடந்தது. பாக்கியத்தின் கணவர் ராஜேந்திரன் அரசாங்கத்தில்உயர் அதிகாரியாக வேலை செய்ததால் அவர் குடும்பத்துக்கு சீதன வீட்டில் அதிகம் காலம் வாழக் கொடுத்து வைக்கவில்லை காரணம் அவர் நான்கு வருடத்துக்கு ஒரு தடவை ஊர் மாறிக் கொண்டிருந்தார் வீட்டை பாரமரிக்க பாக்கியம் தன் இளைய சகோதரன் குடும்பத்தை இலவசமமாக அங்கு வாழவிட்டாள். காலபோக்கில் ராஜேந்திரனும் பாக்கியமும் அந்த வீட்டை தன் ஒரே மகள் வசந்திக்கு சீதனமாக கொடுத்தார்கள் . வசந்தியின் கணவன் பிற நாட்டில் வேலை கிடைத்து சென்றபடியால் வசந்தி கணவனோடும் மகள் ரேணுக்காவோடும் சென்றாள்.
****
ஈழத்தில் போர் நடந்த காலத்தில் பல வீடுகள் குண்டு வீச்சினால் பாதிப்டைந்தன. அதில் செல்லர் வீடும் ஓன்று. சில அறைகளின் கூரைகள் சிதைந்து போயிற்று. சமையல் அறையில் இருந்து வரும் புகை செல்லும் புகைபோக்கி ( Chimmney) மட்டும் சிதையாமல் கம்பீரமாக இருந்தது வீட்டின் வீட்டின் சிதைந்த அறைகளின் . கதவுகள் , வீட்டில் இருந்த பித்தளை மர தளப்படங்கள் ஆகியவை சுற்றியுள்ள ஊர் வாசிகளால் கொள்ளை அடிக்கப் பட்டது . சுவரில் தொங்கிய குடும்ப படங்கள் கூட களவாடப் பட்டன. சுவாமி அறையில் இருந் விலை ஊயர்ந்த வெள்ளி விக்ரகங்கள் போர்த்துகேயர் தம் ஆட்சி காலத்தில் கோவில்களையும் விகிரகங்களையும் கொள்ளை அடைத்த மாதரி, இந்துக்களான ஊர் மக்கள் விட்டு வைக்கவில்லை. அதே ஊர்வாசிகளுக்கு செலத்தம்பி பண உதவி உதவி செய்தவர் பஞ்சாயத்து செய்த . அழகிய முன் விறாந்தையும் அழிந்து போயிற்று. வளவின் கேட்டில் செலத்தமபபி வளவு என்ற பெயர் பதித்த இரு கருங் கற்தூண்கள் மட்டும் கம்பீரமாக் நின்றன . வீட்டின் நிலையைப் பார்த்து கண்ணீர் வடிக்க செலத்தம்பியும் தம்பதிகளும் பாக்கியமும் இருக்கவில்லை.
இடிந்த வீட்டில் எவர் போய் குடியிருப்பார்கள். யாரும் கேட்டால் விருத்தி இல்லாத வீடு என்று வக்கனை சொல்லுவார்கள் செல்லர் வளளவில் இருந்த மரங்கள் ஒவோன்றாக ஊர் சனங்கள் தறித்து விறகுக்கு எடுத்துச் செற்றனர். சோலையாக இருந்த செல்லர் வளவு, படிப்படியாக பாலைவனமாயிற்று . இடிந்த வீடு முழுவதும் அடர்ந்த புதரும், பாம்பும்
ஊரில் வதந்தி பரப்புவது காலச்காரம். இடிந்த வீட்டில் இருந்தவர்கள் குண்டு வீச்சில் இறந்து போனார்கள் . அதனால் அவர்களின் ஆவி இடிந்த வீட்டில் இருப்பதால் ஒருவரும் வீட்டை திருத்தி குடி புக விரும்வில்லை என்ற கதை பரவியது. கவனிப்பார் அற்று இருக்கும் பிறர் சொத்தினை அனுபவிப்பது பல ஊர்களின் கலாச்சாரம் . அதுவும் பயன் தரும் மரங்கள் கவனிப்பார் அற்று இருந்தால் பேசவும் வேண்டுமா.?
***
வசந்தியும் அவளின் மகள் ரேணுகாவும் ஒரு சமயம் பிற நாட்டில் இருந்து ஊருக்குப் போக வெண்டிய சந்தர்ப்பம் கிடைத்தது. தனது பாட்டனார் கடும் உழைப்பில் கட்டிய வீடு, தான் பிறந்து வளர்ந்து ஓடி ஆடி விளையாடைய காலத்துக்குப் பின், தனக்குத் திருமணம் நடந்த வீடு இருந்த நிலையைக் கண்டு வசந்தி கண்ணீர் வடித்தாள். வசந்தியும் மகளும்அதிர்ச்சியில் நின்றார்கள் ரேணுகா தன் பாட்டி கிணற்றின் சுவையான தண்ணீர் பற்றி நினிவு கூர்ந்த. கிணற்று தண்ணீரை கூட வந்தவன் உதவியோடு அள்ளி சுவைத்துப் பார்த்தாள்
“ அம்மா என்ன அருமையான் சுவை இந்தக் கிணற்று நீர். .அம்மா ஊர் மகளின் குணம் மாறினாலும் பாக்கியம் பாட்டி சொன்னது போல் உங்கள் பாட்டனர் வளவின் கிணற்று தண்ணீர் மட்டும் சுவை மாறவில்லை . நல்ல காலம் ஊர் சனங்கள் கிணறை திருடி காவிச் செல்வில்லை . முடிந்தால் அதையும் செய்திருப்பார்கள்” என்றாள் மனம் நோக . தண்ணீர் சுவைத் படியே ரேணுகா.
.அவர்கள் இருவருக்குள் பேசிக்கொண்டனர்
இந்த வீட்டுக்கு எதவது ஓன்று செய்தாக வேண்டும் என்பது அவரகள் எடுத்த முடிவு
தன் தாய் பிறந்து வளர்ந்த அந்த வீட்டைப் போரில் பாதிக்கப்பட்ட அனாதை பிள்ளைகள் இல்லமாக மாற்றத் தீர்மானித்தார்கள் . அதற்கு பொறுப்பாக தூரத்து உறவினர் ஆன்மீகவாதியான முருகதாஸ் சுவாமி என்பவரின் நான்கு சீடர்களை நியமைத்தார்கள்.போரினால் பாதிக்கப்பட்ட அனாதை பிள்ளைகளின் இல்லமாக இடிந்த வீடு புத்துயிர் பெற்றது. மரங்களும், கோழிப் பண்ணையும் மரக்கரித் தோட்டம் செல்லர் வளவை மறு வாழ்வு பெறச் செய்தது. அந்த வீடு சுமார் இருபது அனாதைப் பிள்ளைகளின் வாசஸ்தலமாயிற்று . அந்த இல்லத்தை நடத்த டிரஸ்ட் நிதியை வசந்தி குடும்பமும் . ரேணுகா குடும்பமும் ஆரம்பித்தனர். செல்லர் வளவுக்குள் உற்பிரவேசிக்கும் வாசலில் இருந்த இரு கற் தூண்களை இணைத்து ஒரு அழகிய இரும்புப் படலை தோன்றியது, இடிந்த வீடு சமூகத்துக்கு பயன் உள்ள வீடாக மாறியது
( உண்மைக் கருவில் புனைவு கலந்தது )
****
No comments:
Post a Comment